11 பேரை கொடூரமாக கொன்ற சாமியார்.. சினிமாவை மிஞ்சிய சம்பவம் !

0

தெலங்கானா மாநிலத்தில்  பூஜை நடத்தினால் புதையல் கிடைக்கும் எனக் கூறி 11 பேர் கொடூரமாக கொலை செய்யப் பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. 

11 பேரை கொடூரமாக கொன்ற சாமியார்.. புதையல் ஆசை.. சினிமாவை மிஞ்சிய சம்பவம் !
தெலங்கானா மாநிலம் மேடக் மாவட்டத்தில் உள்ள நாகபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சத்தியம் யாதவ். 53 வயதான இவர், தன்னை மத்திரவாதி என்று கூறி, அடுத்தடுத்து கொடூர கொலைகளை செய்திருக்கிறார்.  

புதையல் இருக்கும் இடத்தை பூஜை செய்து கண்டுபிடித்து தருவதாக பலரையும் நம்ப வைத்துள்ளார். இதனை  நம்பிய பலரும் இவரை சந்திக்க தொடங்கினர். இவர்களில் ஒருவர் தான் வெங்கடேஷ். 

80 அடி உயரத்தில் தலைகீழாகத் தொங்கிய பெண்

ஹைதராபாத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் வெங்கடேஷ், மந்திரவாதியை நேரில் சந்தித்துள்ளார். அப்போது, மந்திரவாதி சத்தியம், நாகர்கர்னூல் எனும் இடத்தில் புதையல் இருப்பதாக ஆசை காட்டியுள்ளார். 


இதை நம்பி ரியல் எஸ்டேட் அதிபர் வெங்கடேஷ் சாமியாருடன் சென்றிருக்கிறார். நவம்பர் 21ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற வெங்கடேஷ் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. 


5 நாட்களாக தனது கணவன் வெங்கடேஷ் காணவில்லை என அவரது மனைவி நாகர் கர்னூவில உள்ள லட்சுமி நகர் காவல் நிலையத்தில் நவம்பர் 26ஆம் தேதி புகார் அளித்தார்.  


இதனை அடுத்து, சந்தேகத்தின் பேரில் சத்தியம் யாதவை போலீசார் கைது செய்தனர். அப்போது, சில அதிர்ச்சியூட்டும் விஷயங்கள் வெளிச்சத்திற்கு வந்தது. 

அதாவது, சத்தியம் யாதவ் என்ற ரமதி சத்யநாராயணா என்பவர் போலி சாமியார் என்பதும், தொழிலதிபர் மட்டுமல்லாது மேலும் 10  பேரை கொலை செய்திருப்பது விசாரணையில் தெரிய வந்தது.  


கடந்த 2018ஆம் ஆண்டு தொடங்கி தற்போது வரை 11 பேரை பூஜை மூலம் புதையல் எடுத்து  தருவதாக கூறி கொடூரமாக கொலை செய்திருக்கிறார்.  


கொலை செய்யப் பட்டவர்களிடம் இருந்து நகை, பணம் என வாங்கி இருக்கிறார்.  பூஜையின் போது சில மரங்களில் இருந்து விஷம் எடுத்து, அதை தீர்த்தமாக கொடுத்து கொன்றதாக போலீசார் விசாரணையில் தெரிந்தது.  


தற்போது கொலை செய்யப்பட்ட தொழிலதிபர் வெங்கடேஷிடம் ரூ.9 லட்சம் பணத்தை பெற்றிருக்கிறார் போலி சாமியார் சத்தியம். 

தன்னை வளர்த்த முதலாளிக்கு வேலை செய்து சோறு போடும் நாய் !
கடந்த 2020ஆம் ஆண்டு புதையல் இருப்பதாக கூறி, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரை கொலை செய்திருக்கிறார் சத்தியம்.  அவர்கள் ஹாசிராபி (60), ஆஷ்மா பேகம் (32), காஜா (35), அஷ்ரீன் (10) ஆகியேர் அடையாளம் காணப்பட்டுள்ளது. 

அப்போது, இந்த கொலைகளை யார் செய்தது என்பது தெரியவில்லை. இந்த கொலைக்கு பின்னணியில் சத்யம் இருப்பது தற்போது விசாரணையில் தெரிய வந்தது.  


பூஜை நடத்தினால் புதையல் கிடைக்கும் என்று  பலரை நம்ப  வைத்து போலி சாமியார் 11 பேரை கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. 

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings