குழந்தைக்காக சாமியாரிடம் போன பெண்... நடந்தது என்ன?

0

குழந்தை பேறுக்காக பரிகாரம் தேடி வந்த இளம் பெண்ணுக்கு குளிர்பானத்தில் சயனைடு கலந்து கொடுத்து கொலை செய்துள்ளார் கோவில் பூசாரி. 

குழந்தைக்காக சாமியாரிடம் போன பெண்... நடந்தது என்ன?
அவரை கைது செய்த போலீசார், அவரது கூட்டாளியை கைது செய்தனர். சேலம் அருகே குழந்தை இல்லாத பெண் பரிகாரத்திற்காக சாமியார் ஒருவரை சந்தித்துள்ளார். அவர் எதற்காக அப்படி செய்தார் என்பது தெரியவில்லை.

விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. விசாரணைக்கு பின்னரே கோவில் பூசாரி என்ன செய்தார் என்பதும், எதற்காக அந்த பெண்ணை அப்படி செய்தார் என்பதும் தெரிய வரும். 

கைபேசி மூலம் உங்கள் வீட்டை கட்டுப்படுத்த !

இந்த சம்பவத்தை செய்த கோயில் பூசாரி யார், கொல்லப்பட்ட பெண் யார் என்பதை பற்றி பார்ப்போம்.

சேலம் மாவட்டம் சேடப்பட்டி பகுதியை சேர்ந்த 38 வயதாகும் பசவராஜ் என்பவருடைய மனைவி செல்வி. இவருக்கு 28 வயது ஆகிறது. பசவராஜ் பெங்களூருவில் தங்கி இருந்து கல் உடைக்கும் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். 

பசவராஜ் மற்றும் செல்வி தம்பதிக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகியது. இதுவரை இவர்களுக்கு குழந்தைகள் இல்லை 10 ஆண்டுகள் ஆகிறது. குழந்தைகள் இல்லை.

குழந்தை பேறுக்காக கடந்த ஒரு ஆண்டாக செல்வி பல்வேறு இடங்களில் மருத்துவம் மற்றும் பரிகாரம் செய்து வந்துள்ளார்.. ஆனால் கடந்த 15-ந் தேதி காலை செல்வி திடீரென மாயமானார். 

மனைவியை காணவில்லை என தாரமங்கலம் போலீசில் பசவராஜ் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் சேலம் தாரமங்கலம் போலீசார் செல்வியை தேடி வந்தனர். 

இந்த நிலையில், திருமலைகிரி பாறைக்காட்டூர் பெரியாண்டிச்சி அம்மன் கோவில் அருகில் காட்டுப் பகுதியில் உடல் ஒன்று கண்டெடுக்கப் பட்டது. 

அந்த உடலை கைப்பற்றி விசாரித்த போது தான், பிணமாக கிடந்தது பசவராஜ் மனைவி செல்வி என்பது தெரிய வந்தது.

விசாரணையில், அந்த பகுதியை சேர்ந்த கோவில் பூசாரி ஒருவர் குளிர்பானத்தில் சயனைடு கலந்து கொடுத்து கொலை செய்து உடலை காட்டுப் பகுதியில் வீசியது உறுதியானது. 

விமானத்தில் பயோ எரிபொருள் பயன்படுத்தி அபுதாபி சாதனை !
இதையடுத்து போலீசார் பூசாரி மற்றும் அவரது கூட்டாளி ஆகியோரை கைது செய்து கொலைக்கான காரணத்தை கண்டறிய தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(30)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !