சம்பளத்தை உயர்த்திய த்ரிஷா.. இத்தனை கோடிகளா?

0

தமிழ் சினிமாவில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நாயகியாக நடித்து வருகிறார் த்ரிஷா. இவருடன் பயணத்தை தொடங்கியவர்கள், சப்போர்ட் ரோல்களில் நடித்து வரும் நிலையில், இன்னமும் பிசியான ஹீரோயினாக நடித்து வருகிறார் த்ரிஷா. 

சம்பளத்தை உயர்த்திய த்ரிஷா.. இத்தனை கோடிகளா?
தமிழில் இவருக்கான சிறப்பான கதாப்பாத்திர ஜோடியாக பார்க்கப்படும் விஜய்யுடன் கில்லி, திருப்பாச்சி, குருவி, ஆதி போன்ற படங்களில் நடித்திருந்த த்ரிஷா, 15 ஆண்டுகளுக்குப் பிறகு லியோ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். 

இருவருக்குமான ஸ்கிரீன் கெமிஸ்ட்ரி 15 ஆண்டுகளில் மாறவே இல்லை என்று சிலாகித்தது ரசிகர் பட்டாளம்.

பழைய சோறா? அப்படீன்னா என்ன?

தனது திரை வாழ்க்கையின் தொடக்கத்தில் லட்சங்களில் சம்பளம் வாங்கிய இவர், அடுத்தடுத்து கிடைத்த வெற்றிகளால் சம்பளத்தை கோடிகளுக்கு உயர்த்தி யிருந்தார். 

ஆனால், இடையில் சினிமா பயணத்தில் சிறு தொய்வு ஏற்பட்டாலும், பொன்னியின் செல்வனில் குந்தவையாக நடித்து மீண்டும் கவனம் ஈர்த்திருந்தார். 

அதனைத் தொடர்ந்து, நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்த த்ரிஷா, லியோ படத்தில் சத்யாவாக கலக்கினார். இந்த படத்திற்கு 4 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், விடா முயற்சி, தக்லைஃப் போன்ற படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி யுள்ள நிலையில், சம்பளத்தை 10 கோடியாக மாற்றியுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)