தலையை பிளந்து அறுவை சிகிச்சை.. ஆச்சரியப்பட வைத்த நோயாளி !

0

பீகார் மாநிலம் பக்சர் பகுதியைச் சேர்ந்த 28 வயது இளைஞருக்கு மூளையில் கட்டி வளர்ந்துள்ளது. இதனால் அவருக்கு அடிக்கடி வலிப்பு நோய் உள்ளிட்டவற்றால் அவதிப்பட்டார். 

தலையை பிளந்து அறுவை சிகிச்சை.. ஆச்சரியப்பட வைத்த நோயாளி !
இந்நிலையில், போபாலில் உள்ள எய்ம்ஸ் மருத்துவர்கள் அவரை பரிசோதித்தனர். அப்போது, மூளையில் உடல் இயக்கத்தை கட்டுப்படுத்தும் பகுதி அருகே கட்டி வளர்ந்திருப்பது தெரிய வந்தது.

இதனால் அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே இளைஞர் உயிர் பிழைப்பார் என்ற நிலையில் எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தது. 

நம் கைகளை வலுவடையச் செய்யும் உடற்பயிற்சி !

மிகவும் சிக்கலான இந்த அறுவை சிகிச்சையின் போது, நோயாளியின் உடல் பாகங்களின் இயக்கத்தையும் மருத்துவர்கள் கண்காணிக்க வேண்டும் என்பதால், தலைப்பகுதிக்கு மட்டும் மறுப்பூசி போட்டு அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.

மருத்துவ குழுவின் ஒரு பிரிவு அறுவை சிகிச்சையை தொடர, மற்றொரு பிரிவினர் நோயாளியிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டே அவரது உடல் இயக்கத்தை நவீன கருவிகள் உதவியுடன் உன்னிப்பாக கவனித்தனர். 

அப்போது, மருத்துவர்கள் ஹனுமன் பாடல்களை பாடச் சொன்னதும், தனக்கு அறுவை சிகிச்சை நடக்கிற அச்சமின்றி, நிதானமாக நோயாளி அனுமன் பாடல்களை முடிந்தவரை பாடினார். 

இதே போன்று, அவருக்கு முன்பு வைக்கப்பட்ட பியானோவில் தனது கைகளை வைத்து சில பாடல்களை வாசித்துக் காட்டினார். மேலும் செய்தித்தாளை காட்டி படிக்கச் சொன்னதும் அதையும் படித்துக் காண்பித்தார்.

இதற்கிடையே வெற்றிகரமாக மூளைக் கட்டி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. நோயாளியின் உடல் இயக்கமும் சீராக இருந்ததால், அறுவை சிகிச்சை வெற்றி பெற்றதாக மருத்துவர்கள் அறிவித்தனர். 

பொட்டாசியம் கொண்ட உணவுகளை அதிகம் சாப்பிட்டால் ஏற்படும் விளைவுகள் !

தற்போது அந்த இளைஞர் நலமுடன் உள்ளதாக நரம்பியல் நிபுணர் சுமித்ராஜ் கூறியுள்ளார்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(30)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !