படிகாரத்தின் மருத்துவ பயன்கள் என்ன?

0

வீட்டு வைத்தியத்தில் படிகாரம் பல பிரச்சனைகளுக்கு தீர்வைத் தருகிறது. பழங்காலத்திலிருந்தே படிகாரம் பயன்படுத்தப் படுகிறது. ​​​​அந்தக் காலத்திலும் படிகாரம் பல வகையான வலிகளை நீக்கும் தைலமாக வேலை செய்தது. 

படிகாரத்தின் மருத்துவ பயன்கள் என்ன?
படிகாரத்தில் பல நன்மைகள் உள்ளன. பல நோய்களுக்கு உடனடி நிவாரணம் தரும் படிகாரத்தில் பல மருத்துவ குணங்கள் உள்ளன.

படிகார பற்பொடி . :

ஐம்பது கிராம் படிகாரத்தை பொடி செய்து இதை ஒரு மண் சட்டியில் போட்டு லேசான தீயில் கிளறிக் கொண்டு வர வேண்டும் படிகார பொடியானது சிறிது நேரத்தில் தண்ணீராக மாறி விடும்.

மீண்டும் கிளறிக் கொண்டே வர படிகார தண்ணீர் சுண்டி படிகாரமானது சட்டியில் ஒட்டிக் கொள்ளும் மீண்டும் கிளறிக் கொண்டே வர படிகாரம் உதிரியாகி விடும் இதை பொடி செய்து கொள்ள வேண்டும்.

இந்த படிகார பொடியுடன் வறுத்து பொடி செய்த கொட்டைப்பாக்கு பொடியை சமமாக கலந்து வைத்து கொண்டு பல் துலக்கி வர வேண்டும்.

உங்கள் தட்டில் உணவா... விஷமா?

பயன்கள் . :

காவி பற்கள் வெண்ணிறமாக மாறும் பற்களின் ஈறுகள் கெட்டிப்படும். பற்களின் நரம்புகள் பலப்படும்.

லேசாக ஆடுகின்ற பற்கள் இதை பயன்படுத்தி வந்தால் ஆடாமல் உறுதி பெறும். பல் சம்பந்தமான நோய்கள் அனைத்திற்கும் தீர்வு உண்டாகும்.

மேலும் வாய் கொப்பளங்கள் வாய்ப்புண்கள் வராது. பல் வலி நீங்கி விடும். ஈறுகளில் ரத்தம் வருவது நின்று விடும்.

வாய் துர்நாற்றம் நீங்கி வாய் நாக்கு பற்கள் அனைத்தும் சுத்தமாக இருக்கும். 

பாதம் மற்றும் கண் பராமரிப்பில் படிகாரத்தின் மருத்துவ பயன்கள் . :

படிகாரத்தின் மருத்துவ பயன்கள் என்ன?

மூன்று லிட்டர் தண்ணீரை லேசாக கொதிக்க வைத்து ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் ஊற்றி இதில் ஐந்து கிராம் படிகார பொடியை கலந்து ஒரு எலுமிச்சை பழத்தை பிழிந்து விட்டு, 

இதில் இரண்டு கால்களையும் இந்த தண்ணீரில் 10 நிமிடம் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் வைத்து வர வேண்டும்.

உடலில் உள்ள கொழுப்பை கரைக்கும் இயற்கை ஜூஸ்கள் !

இதனால் கிடைக்கின்ற மருத்துவ பயன்கள் . :

இரண்டு கால்களிலும் இருக்கின்ற அழுக்கு நீங்கி பாதம் அழகு பெறும். கால் பாதங்களை சுத்தமாக வைத்திருந்தால் கண் நோய்கள் வராது பார்வை திறன் அதிகரிக்கும்.

பாதங்களை சுத்தமாக வைத்திருந்தால் பார்வை குறைபாடு எப்பொழுதும் வருவதில்லை இதை கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள். கால்களில் பனி வெடிப்பு பித்த வெடிப்பு இருந்தால் குணமாகும் மீண்டும் வராது.

சர்க்கரை நோயாளிகள் இந்த பாத குளியல் முறையை கடைபிடித்து வந்தால் இதன் மூலம் கால் பாதங்களில் வருகின்ற சர்க்கரை புண்களை வராமல் பாதுகாத்து வைத்துக் கொள்ள இது ஒரு எளிய வழிமுறையாகும்.

கப நோயாளிகள் இந்த பாதக் குளியல் முறையை பயன்படுத்தி வந்தால் சளி தொண்டைக்கட்டு இவைகள் குணமாகும். மூக்கடைப்பு குறையும் சுவாசம் சீராக நடைபெறும்.

பெண்களின் தலைமுடி பராமரிப்பில் படிகாரத்தின் மருத்துவ பயன்கள் . :

படிகாரத்தின் மருத்துவ பயன்கள் என்ன?

ஐந்து கிராம் படிகார பொடியை ஒரு டம்ளர் தண்ணீரில் கரைத்து இதை பெண்கள் தலையில் தேய்த்துக் கொண்டு இரண்டு மணி நேரம் கழித்து தலை குளித்து வர வேண்டும்.

பயன்கள் . :

பேன் தொல்லை நீங்கும்.

பொடுகு தொல்லை நீங்கி விடும்.

முடி உதிர்வு பிரச்சனை தீர்ந்து விடும்.

பக்க விளைவுகள் ஏதும் இல்லை பாதுகாப்பான முறை இது.

நம் உடல் அதிக வலிமையோடு இருக்க மூங்கில் அரிசி !

முக அழகிற்கு படிகாரம் . :

தண்ணீரில் சிறிது படிகாரப் பொடியை கலந்து முகம் கழுவி வந்தால் வேர்வை கொப்பளங்கள் முகப்பருக்கள் சிறு சிறு கரும் புள்ளிகள் இதனால் மறைந்து விடும்.

இந்தத் தண்ணீரால் வாய் கொப்பளித்து வந்தால் வாய் மற்றும் பற்கள் சுத்தமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் பல் சொத்தை வராது ஈறுகள் பலம் பெறும் பற்கள் உறுதியாகும்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)