காசா மருத்துவமனையின் கீழ் நீண்ட சுரங்கப்பாதை.. இஸ்ரேல் வீடியோ !

0

இஸ்ரேல் பாதுகாப்புப் படை மற்றும் இஸ்ரேல் பாதுகாப்பு ஆணையம் இரண்டும் காசாவின் ஷிஃபா மருத்துவ மனையில் 55 மீட்டர் நீளமும், 10 ஆடி ஆழமும் கொண்ட சுரங்கப் பாதையை கண்டறிந்துள்ளது.

காசா மருத்துவமனையின் கீழ் நீண்ட சுரங்கப்பாதை.. இஸ்ரேல் வீடியோ !
இஸ்ரேலுக்கும், காசாவை கட்டுக்குள் வைத்துக் கொண்டிருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் இடையே ஏழு வாரங்களுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. 

முதலில் காசா பகுதியில் வான்வழி தாக்குதலில் ஈடுபட்ட இஸ்ரேல், பின்னர் தரைவழி தாக்குதலையும் நடத்தி வருகிறது. இதன் முக்கிய நோக்கமே ஹமாஸ் தீவிரவாதிகளின் சுரங்கப் பாதைகளை அழிக்க வேண்டும் என்பது தான்.

இந்த நிலையில் இஸ்ரேல் பாதுகாப்புப் படை எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளது. 

அதில், இஸ்ரேலியப் படைகள் நுழைவதைத் தடுக்கும் ஹமாஸின் முயற்சியில், சுரங்கப் பாதையின் நுழை வாயிலில் வெடிகுண்டை தடுக்கும் கதவு மற்றும் மறைந்திருந்து துப்பாக்கியால் சுடுவதற்கான துளைகள் போட்டுள்ளனர். 

இஸ்ரேல் படைகள் தங்களை எந்த வகையிலும் தாக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த ஏற்பாடுகளை செய்துள்ளனர்.  

காஸாவில் வசிப்பவர்களையும், ஷிஃபா மருத்துவமனை நோயாளிகளையும் மனிதக் கேடயங்களாக ஹமாஸ் பயன்படுத்தி வருகிறது என்பதை உலகிற்கு தொடர்ந்து நாங்கள் கூறி வந்தோம். 

உங்களைப் பற்றி உங்கள் உதடுகள் என்ன சொல்கிறது?

கடந்த சனிக்கிழமை ஷிஃபா மருத்துவ மனையில் இருந்தவர்களை ஒரு மணி நேரத்தில் வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் பாதுகாப்புப் படை கேட்டுக் கொள்ளவில்லை. 

இதற்கு மாறாக மருத்துவ மனையில் இருப்பவர்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கு உதவ வேண்டும் என்று மருத்துவமனை நிர்வாகம் கேட்டுக் கொண்டதை ஏற்றுக் கொண்டோம். 

மேலும் மருத்துவ உதவிகளை செய்வதற்கும் நாங்கள் ஒப்புக் கொண்டு இருந்தோம். எந்த வகையிலும் நோயாளிகளை உடனடியாக வெளியேற வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொள்ளவில்லை என்று குறிப்பிட்டுள்ளனர்.

காசாவில் தொடர்ந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படை தரைவழி தாக்குதலை நடத்தி வருகிறது. ஷிஃபா மருத்துவ மனையில் இருக்கும் பகுதியில் குறிப்பிட்ட இடங்களை மட்டுமே குறி வைத்து தாக்குதல் நடத்தி வருவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. 

காசா மருத்துவமனையின் கீழ் நீண்ட சுரங்கப்பாதை.. இஸ்ரேல் வீடியோ !

புலனாய்வு தகவலை வைத்து தாக்குதல் நடத்தி வருவதகாவும் தெரிவித்துள்ளனர். 

ஹமாஸ் தீவிரவாதிகளின் தாக்குதல் குறித்து இஸ்ரேல் அதிபர் இசாக் ஹெர்சாக் கூறுகையில், காசா பகுதியில் இருக்கும் மருத்துவ மனைகளில் இருந்து இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். 

பிறப்புறுப்பைச் சுற்றியுள்ள கருமையை நீக்குவதற்கு சில வழிகள் !

காசா பகுதியில் இருக்கும் நோயாளிகள், மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள் மீது எந்த தாக்குதலையும் இஸ்ரேல் நடத்தவில்லை என்று உறுதி படுத்தியுள்ளார். 

பாலஸ்தீனப் பகுதி முழுவதும் நூற்றுக் கணக்கான கிலோ மீட்டர் தொலைவுக்கு ரகசிய சுரங்கங்கள், பதுங்கு குழிகள் தங்களிடம் உள்ளது என்பதை ஒப்புக் கொள்ளும் அதே வேளையில், இவை மருத்துவ மனைகள் உள்கட்டமைப்பில் அமைந்துள்ளன என்று ஹமாஸ் கூறி வருகிறது. 

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(30)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !