ஷமியை வன்மமாக பேசிய முன்னாள் மனைவி வீடியோவால் சர்ச்சை !

0

உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில், முகமது ஷமியின் முன்னாள் மனைவி ஹாசின் ஜஹான் சர்ச்சையான வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

ஷமியை வன்மமாக பேசிய முன்னாள் மனைவி வீடியோவால் சர்ச்சை !
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியடைந்தது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 240 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. அதன்பின் ஆஸ்திரேலியா அணி 43 ஓவர்களில் இலக்கை விரட்டி வெற்றியை பெற்றது சாம்பியன் பட்டத்தை வென்றது.

கும்பகோணம் வாலிபர்களுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை !

தொடர்ச்சியாக 10 போட்டிகளில் வென்ற இந்திய அணி, முக்கியமான இறுதிப் போட்டியில் தோல்வி யடைந்தது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில் இந்திய அணி தோல்வி குறித்து முகமது ஷமியின் முன்னாள் மனைவி ஹாசின் ஜஹான் சர்ச்சையான வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

ஏற்கனவே முகமது ஷமி சிறப்பாக விளையாடிய போது, அவர் சிறப்பாக விளையாடி நன்றாக சம்பாதித்தால் அவருக்கும் குழந்தையின் எதிர் காலத்திற்கும் நல்லது தான். 

ஆனால் அவருக்கு என்னால் வாழ்த்து கூற முடியாது. இந்திய அணி உலகக் கோப்பையை வெல்ல மனதார விரும்புகிறேன் என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார்.

தற்போது இந்திய அணி தோல்வியடைந்து வீரர்கள் அனைவரும் சோகத்தில் உள்ள நிலையில், பாலிவுட்டின் பிரபல படத்தில் வரும், இறுதியாக, நல்ல இதயம் கொண்டவர்கள் வெற்றி பெற்றார்கள் என்று வித்தியாசமான வீடியோவை பதிவிட்டுள்ளார். 

இந்த வீடியோவை பதிவிட்டதற்கான காரணம் குறித்து முகமது ஷமியின் மனைவி எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை.

சில ஆண்டுகளுக்கு முன்பாக முகமது ஷமி குறித்து அவரின் முன்னாள் மனைவி ஹாசின் ஜஹான் ஏராளமான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். 

ஆட்டோவில் திரும்பி பார்த்த பெண்ணுக்கு அதிர்ச்சி - வாலிபர் செய்த கொடுமை ! 

மேட்ச் ஃபிக்ஸிங் குற்றச்சாட்டுகள், வரதட்சணை கொடுமை, பாலியல் குற்றச்சாட்டுகள், குடும்ப வன்முறை என்று பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தினார். 

இதனால் சில மாதங்களுக்கு பிசிசிஐ முகமது ஷமியுடனான ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings