ஒரே வீட்டில் 199 பேர் வாழும் அதிசய குடும்பம்... 38 மனைவிகள், 100 அறைகள் !

0

இந்திய மாநிலம் மிசோரமில், ஒரே வீட்டில் 199 பேர் வசிப்பதும், தற்போது அந்த இடம் சுற்றுலா தலமாகவும் மாறி வருவதும் பேசுபொருளாகி யுள்ளது.

ஒரே வீட்டில் 199 பேர் வாழும் அதிசய குடும்பம்... 38 மனைவிகள், 100 அறைகள் !
இந்திய மாநிலமான மிசோரமில் உள்ள பக்தவாங் கிராமத்தில் இந்த மிகப்பெரிய குடும்பம் உள்ளது. இந்த குடும்பத்தின் தலைவர் சியோனா சானா. இவர், 38 பெண்களை மணந்துள்ளார்.

அந்தந்த மனைவிகள் மூலம் 89 குழந்தைகள் மற்றும் 36 பேரக் குழந்தைகள் என மொத்தம் 199 பேர் உள்ளனர். இவர்கள் அனைவரும் 100 அறைகள் கொண்ட 4 மாடி கட்டிடத்தில் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.

கடந்த 2021 -ம் ஆண்டு தனது 76 வயதில் சியோனா சானா உயிரிழந்தார். அதன் பிறகும், இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வாழ்ந்து வருகின்றனர்.

வாய் அதிகம் வறட்சியடைவதற்கு காரணம் தெரியுமா?

சியோனா சானா தன்னுடைய 17 வயதில் முதல் மனைவியை மணந்துள்ளார். அதனைத் தொடர்ந்து ஒரே ஆண்டில் 10 பெண்களை திருமணம் செய்துள்ளார். ஒவ்வொரு மனைவிக்கும் தனி படுக்கை அறை மற்றும் தங்குமிடம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.

ஒரே வீட்டில் 199 பேர் வாழும் அதிசய குடும்பம்... 38 மனைவிகள், 100 அறைகள் !

அது மட்டுமல்லாமல், எல்லா நேரங்களிலும் 7 அல்லது 8 மனைவிகளை பக்கத்தில் வைத்திருப்பதை சியோனா சானா விரும்புவார் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

மேலும், ஒரு பெரிய டைனிங் ஹாலில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவார்கள் எனவும் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings