சாலையோரம் நின்ற லாரி மீது கார் மோதி 13 பேர் சாவு !

0

கர்நாடக மாநிலம் சிக்கபல்லாபுரம் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில், சாலை ஓரம் நின்று கொண்டிருந்த லாரி மீது டாட்டா சுமோ மோதி விபத்துக் குள்ளானதில் 3 வயது குழந்தை உள்பட 13 பேர் உயிரிழந்தனர்.

சாலையோரம் நின்ற லாரி மீது கார் மோதி 13 பேர் சாவு !
ஆந்திர பிரதேச மாநிலத்தில் இருந்து டாட்டா சுமோ ஒன்று பெங்களூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. இதில், 3 வயது குழந்தை, 4 பெண்கள் உள்பட மொத்தம் 14 பேர் இருந்தனர். 

இந்த டாட்டா சுமோ கர்நாடக மாநிலம் சிக்கபல்லாபுரம் மாவட்டம் பாகெப்பள்ளி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது. 

மேட்டுப்பாளையம் மட்டன் குழம்பு செய்வது எப்படி?

அதே நேரத்தில் நாகாலாந்தில் இருந்து சிமெண்ட் ஏற்றிக் கொண்டு வந்திருந்த லாரி ஒன்று அதே சாலையில் சாலையோரம் நிறுத்தப் பட்டிருந்தது.

அப்போது அந்த பகுதியில் அதிகளவு பனிமூட்டம் நிலவியதாக கூறப்படுகிறது. குறிப்பாக முன்னாள் செல்லும் வாகனம் தெரியாத அளவிற்கு பனிமூட்டம் நிலவியதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில், 14 பேருடன் வந்த டாட்டோ சுமோ கண்ணிமைக்கும் நேரத்தில் சாலை ஓரம் நிறுத்தப் பட்டிருந்த லாரியின் பின்புறம் மோதி விபத்துக் குள்ளானது. டாட்டா சுமோவும் அதி வேகத்தில் வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் லாரி மீது மோதியதில் டாட்டா சுமோ சுக்குநூறாக நொறுங்கியது. மேலும் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி 3 வயது குழந்தை உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 

இதையடுத்து இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். இதில் மருத்துவ மனைக்கு செல்லும் வழியில் 7 பேர் உயிரிழந்தனர். 

இதே போல் சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். லாரி மீது டாட்டா சுமோ மோதியதில் மொத்தம் 13 பேர் உயிரிழந்தது 

அப்பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. இதற்கிடையே விபத்தின் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 
பெட்ரோலியம் ஜெல்லியின் 23 வகையான பயன்கள் !

இவர்கள் அனைவரும் பெங்களூர் ஒங்கசத்திரம் பகுதியை சேர்ந்தவர்கள் என்றும், தசரா பண்டிகைக்காக சொந்த ஊர் சென்று விட்டு திரும்பிய போது விபத்து நேர்ந்துள்ளது தெரிய வந்துள்ளது. 

இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings