ரீல்ஸ் மோகத்தால் நடுரோட்டில் யோகா செய்த இளம்பெண்.. பாருங்க !

0

குஜராத் ராஜ்கோட் நகரில் மிகவும் பரபரப்பான ஒரு சாலையில் பெண் ஒருவர் நடுரோட்டில் யோகா செய்து கொண்டிருந்தார்.சாலையை மறித்து, யோகா செய்ததால் அந்த சாலையில் செல்லும் வாகனங்களுக்கு இடையூறாக இருந்தது. 

ரீல்ஸ் மோகத்தால் நடுரோட்டில் யோகா செய்த இளம்பெண்.. பாருங்க !
அந்த பெண் யோகா செய்வதும் கார்கள் நிறுத்தப்பட்டு இருப்பதையும் வீடியோவாக எடுக்கப்பட்டு, சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது. இந்த வீடியோ குஜராத் போலீசாரின் பார்வையில் தென்பட்ட போது அவர்கள் விரைந்து நடவடிக்கை எடுத்தனர்.

சமூக வலை தளங்களில் வித்தியாசமான கண்டெண்ட் கொடுக்க வேண்டும் என்பதற்காக இது போன்ற இன்ஃப்ளூயென்ஸர்கள் என்ன என்ன செய்யலாம் என்ன செய்யக் கூடாது என்பதைக்கூட சரியாக தெரிந்து கொள்வதில்லை. 

தங்கள் வாழ்க்கையை பணயமாக வைத்து ஒரு சில செயல்களில் ஈடுபடுகிறார்கள். 

இது வேடிக்கையாக இருக்கலாம் அல்லது சாகசமாக இருக்கலாம் என்று இவர்கள் நினைத்தால் கூட, இவர்களை மட்டுமில்லாமல், சுற்றி இருக்கும் மக்களின் வாழ்க்கைக்கும் ஆபத்தை ஏற்படுத்துகிறார்கள். 

ஒரு சில லைக்குகள் மற்றும் கமெண்ட்ஸ் களுக்காகவும் இப்படி செய்வது மிகவும் முட்டாள் தனமானது என்று போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.

பின்னர், குஜராத் போலீசார் இந்த பெண்ணின் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர். நடுரோட்டில் ரீல்ஸ் செய்ததற்காக அந்த பெண்ணிற்கு அபராதமும் விதிக்கப் பட்டுள்ளது. 

மேலும் இது போன்ற செயல்களில் ஈடுபட கூடாது என்று போலீசார் அவரை கடுமையாக எச்சரித்துள்ளனர். மேலும் அந்த பெண்ணிடமிருந்து மன்னிப்பு கடிதத்தையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இவை அன்றி, குஜராத் போலீஸார் செய்த மற்றொரு செயல் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி யுள்ளது. அந்த பெண் நடுரோட்டில் இன்ஸ்டா ரீல்ஸ் செய்ததற்கு தோதாக, அவர் செய்த செயலுக்கு மன்னிப்பு கேட்ட ஒரு வீடியோவையும் ரீல்சில் சேர்த்துள்ளனர். 

அது மட்டுமில்லாமல் நடுரோட்டில் பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய இது போன்ற செயல்களில் ஈடுபடுவது தவறு என்று அவரே மன்னிப்பு கோரும் ஒரு வீடியோவையும் இதில் இணைத்துள்ளனர்.

இந்த சம்பவம் சமூக வலைதள இன்ஃப்ளூயன்சர்கள் எவ்வளவு பொறுப்பாக செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. அது மட்டுமில்லாமல் இவர்களை ஏகப்பட்ட நபர்கள் பின்பற்றி வருகிறார்கள். 

இஞ்சி பூண்டு பேஸ்ட்டை நீண்ட நாட்களுக்கு கெடாமல் வைத்திருப்பது எப்படி?

எனவே பொதுமக்களுக்கு தவறான உதாரணமாக இருக்க கூடாது என்பதையும் போலீசார் வலியுறுத்தியுள்ளனர். பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் எந்த விதமான செயலும் நடவடிக்கையும் ஐபிசி பிரிவு 283-ன் படி சட்டப்படி குற்றமாகும். 

எனவே இவ்வாறு செய்பவர்களுக்கு 6 மாத சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings