புருஷன் இருந்தால் உரிமைத் தொகை கிடையாது.. நடிகை நமீதாவின் பேச்சு !

0

கேஸ் சிலிண்டர் இருக்கும் வீடுகளுக்கு 1000 ரூபாய் கிடைக்காது, பைக் இருக்கும் வீடுகளுக்கு 1000 ரூபாய் கிடைக்காது என்று திமுகவின் மகளிர் உரிமைத் திட்டத்தை பாஜக பிரமுகரும், நடிகையுமான நமீதா விமர்சித்திருக்கிறார்.

புருஷன் இருந்தால் உரிமைத் தொகை கிடையாது..  நடிகை நமீதாவின் பேச்சு !
தமிழக பாஜகவில் ஐக்கியமாகி உள்ளவர் பிரபல நடிகை நமீதா.. இவர் பாஜகவில் அன்று சேர்ந்ததுமே, தமிழக மக்கள் அதிர்ந்து தான் போனார்கள்.. பாஜகவில் நமீதா என்ன செய்ய போகிறார்? 

தமிழக கிராமங்களில் பிரச்சாரத்திற்கு போனாலும் என்ன பேச போகிறார்? என்ற ஆர்வமும் ஒட்டிக் கொண்டது.

பெண்களின் மார்பகம் பற்றி அவர்களிடம் கேட்க வேண்டிய விஷயம் !

தாமரை மலர்ந்தே தீரும் என்ற வார்த்தையை கூட, நமீதாவால் சரியாக உச்சரிக்க முடியாத வீடியோக்களும் இணையத்தில் அப்போது மிகப்பெரிய அளவில் டிரெண்டானது. 

அதற்கு பிறகு, பாஜக நிகழ்ச்சிகளில் நமீதாவை அவ்வளவாக காண முடியாத நிலையில், சமீப காலமாகத் தான் அக்கட்சியின் கூட்டங்களில் தென்பட்டு வருகிறார்.

சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்கள் நமீதாவிடம், பெண்களை பல்வேறு துறைகளில் ஊக்கப் படுத்துவதற்கு, பாஜக செயற்குழு உறுப்பினர் என்ற முறையில் நீங்கள் இதுவரை என்னென்ன முயற்சிகளை எடுத்துள்ளீர்கள் என்று கேட்டார்கள்.

அதற்கு நமீதா, என்னுடைய வீட்டில் வேலை செய்றவங்க எல்லாரும் பெண்கள் தான்.. அதில் 2 பெண்களுக்கு 22, 23 வயதாகிறது.. அவர்களுக்கு நான்தான் கல்யாணம் செய்து வைக்க போகிறேன். 

இப்படி என் வீட்டில் வேலை பார்க்கும் பெண்களுக்கு நான் உதவி செய்து வருகிறேன் என்று கூறியிருந்தார். அத்துடன், கட்சியின் எந்த விழாக்களுக்கு சென்றாலும், திமுகவை சரமாரியாக விமர்சித்தும் வருகிறார்.

திமுக அரசால் டாஸ்மாக் மாநிலம் என பெயர் எடுக்கப் போகிறது, தமிழக அரசை டாஸ்மாக் அரசு என்று தான் சொல்ல வேண்டும்.. ஆனால், நமக்கு டாஸ்மாக்கும் வேணாம், திமுகவும் வேணாம் என்ற நமீதாவின் பேச்சுக்கள் இணையத்தில் வைரலாகியிருந்தன. 

இந்நிலையில், இன்றைய தினம், விழுப்புரத்தில் நடந்துள்ள பாஜகவின் கண்டன ஆர்ப்பாட்டத்தில், நடிகை நமீதா பங்கேற்று பேசியிருந்தார். 

அதன் சுருக்கம் தான் இது:

ஆட்சிக்கு வருவதற்கு முன்பு திமுக, நம்முடைய அப்பாவி பெண்களுக்கு, நம்ம தமிழக மக்களுக்கு நிறைய வாக்குறுதிகளை தந்தாங்க. இப்போ ஏமாத்திட்டாங்க. 

எல்லா பெண்களுக்கும் மாதத்துக்கு 1000 ரூபாய் தரப்போவதாக சொல்லி, இப்போ வரைக்கும் 10 சதவீத பெண்களுக்குகூட 1000 ரூபாய் போய் சேல.. 

திமுகவிடம் இது குறித்து காரணம் கேட்டால், கார் இருக்கிற வீட்டிற்கு 1000 ரூபாய் கிடையாது, பைக் இருக்கிற வீட்டிற்கு 1000 ரூபாய் கிடையாது என்கிறார்கள்.
குழந்தை தூங்கும் அறையில் அதை செய்பவரா? இதப் படிங்க முதல்ல ! 

பைக் இல்லாத வீடு இப்ப எங்காவது இருக்கா? ஒரு வீடாவது பைக் இல்லாமல் இன்னைக்கு நம்மால் பார்க்க முடியாது. இன்னொரு மேட்டர் இப்ப புதுசா வந்திருக்கு.. புருஷன் இல்லாத வீடுகளுக்கு கூட, 1000 ரூபாய் கிடையாதாம்.

வீடுகளில் சமையல் கேஸ் இருந்தாலும், 1000 ரூபாய் கிடையாதாம்.. ஆனால், நம்ம மோடிஜி, கேஸ் சிலிண்டர் இல்லாத வீடுகளுக்கு, ஏற்கனவே இலவசமாக தந்து விட்டார். 

ஆனால், அவர்களுக்கும் இந்த 1000 ரூபாய் வரலயாம். இது தமிழக மக்களுக்கு செய்துள்ள பச்சை துரோகம். திமுகவின் இன்னொரு சுவாரஸ்யமான வாக்குறுதியை பாருங்க.

புருஷன் இருந்தால் உரிமைத் தொகை கிடையாது..  நடிகை நமீதாவின் பேச்சு !

பெண்களுக்கு இலவச பஸ் பயணம் கொண்டு வந்துள்ளார்களே. இந்த திட்டமும் ஏமாற்று தான். இதுவரை பெண்களுக்கு 10 ரூபாய், ஆண்களுக்கு ரூபாய் என 2 பேருக்கும் சேர்த்து 20 ரூபாய்க்கு டிக்கெட் எடுத்து பயணித்தோம். 

ஆனால், இப்போது பெண்களுக்கு இலவச பயணத்தை அறிவித்து விட்டு, ஆண்களுக்கு 20 ரூபாய் என்று டிககெட் விலையை உயர்த்தி விட்டார்கள். இது நியாயமா?

நடுங்க வைக்கும் அந்த கால மிருகத்தனமான கருக்கலைப்பு அதிர்ச்சி தகவல் !

இந்த மாதிரி பெரிய லிஸ்ட் என் டைரியில் இருக்கு. இப்போ சொல்ல முடியாது. இதை யெல்லாம் வைத்து தான் சொல்கிறேன், கண்டிப்பாக தாமரை தமிழ்நாட்டில மலரணும். 

அப்பதான் நம்ம தமிழக மக்களின் வாழ்க்கை நிம்மதியா, வசதியாகவும் இருக்கும் என்று ஆக்ரோஷத்துடன் பேசிய நமீதா, ஜெய்ஸ்ரீராம் என்று முழக்கமிட்டபடி பேச்சை முடித்தார்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings