ஆன்லைனில் RC புக் டவுன்லோடு செய்வது எப்படி? தெரியுமா?

0

வாகனத்தின் பதிவு என்பது RC புக் என்று அழைக்கப் படுகிறது. தற்போது இனைய சேவை வளர்ச்சி அடைந்து விட்ட இந்த காலகட்டத்தில் நாம் இந்த RC புக்கை எந்நேரமும் வாகனத்தில் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை.

ஆன்லைனில் RC புக் டவுன்லோடு செய்வது எப்படி? தெரியுமா?
அரசின் DIGILOCKER அல்லது mParivahan ஆப் போன்றவற்றில் இந்த RC புக்கை டவுன்லோடு செய்து கொண்டால் போதுமானது. 

இதற்கு நமக்கு தேவையானது ஆதார் கார்டு, வாகன பத்தி எண் மற்றும் நம்முடைய அதற் கார்டில் இணைக்கப் பட்டுள்ள மொபைல் எண்.

இந்த ஆப் நம்மிடம் இருந்தால் போதும் மடக்கிப் பிடிக்கும் போக்குவரத்து காவலர்களிடம் இந்த ஆப் காண்பித்தாள் போதுமானது. இதிலேயே நம்முடைய வாகனத்தின் விவரங்கள், இன்சூரன்ஸ், லைசன்ஸ் போன்ற அனைத்தும் இருக்கும்.

தற்போது இதனை எப்படி நாம் பயன்படுத்துவது என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.

மாஸ்க் அணியும் போது நாம் செய்யும் தவறு தெரியுமா?

ஆப் டவுன்லோடு செய்வது

முதலில் இந்த சேவையை பயன்படுத்த நாம் நம்முடைய மொபைல் பிலேஸ்டோர் உள்ளே சென்று digilocker அல்லது mparivahan ஆப் டவுன்லோடு செய்ய வேண்டும்.

இதன் பிறகு இந்த ஆப் உள்ளே சென்று நம்முடைய விவரங்களை வைத்து புதிய அக்கவுண்ட் ஒன்றை உருவாக்க வேண்டும்.

தேவையான விவரங்கள்

இந்த சேவையை பயன்படுத்த நமக்கு ஆதார் கார்டு, அதனுடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பர், புதிய அக்கவுண்ட், வாகன பதிவு எண், சேசிஸ் எண் போன்றவை தேவைப்படும்.

வழிமுறைகள்

முதலில் டிஜிலாக்கர் உள்ளே செல்லவும். ஆதார், மொபைல் எண், போன்றவற்றை பயன்படுத்தி கணக்கை துவக்கவும். Issued Documents உள்ளே செல்லவும். Get More Issued Documents பட்டனை கிளிக் செய்யவும்.

அதில் உள்ள பட்டியலில் Ministry of Road and Transport பட்டனை கிளிக் செய்யவும். அதில் Registration of Vehicles பட்டனை அழுத்தவும்.

அதன் பிறகு உங்கள் வாகன எண் மற்றும் சேசிஸ் எண் உள்ளிட்ட கூறும். அதனை உள்ளிடவும். Get Document கிளிக் செய்யவும். உங்கள் RC புக் விவரங்கள் கட்டப்படும்.

பிறகு Issued Documents சென்று பார்த்தால் அதில் உங்கள் RC புக் இருக்கும். அதனை நாம் டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

இந்த வழிமுறையை வைத்து நாம் எல்லா வாகனங்களுக்கும் RC புக் விவரத்தை டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

வெள்ளரிக்காயின் கசப்புத்தன்மையை போக்குவது எப்படி?
இந்த வகை ஆப் நம் ஸ்மார்ட்போன்களில் இருப்பது மிகவும் உதவியாக இருக்கும். ஏனென்றால் போக்குவரத்து காவலர்களிடம் சிக்கினால் இந்த வகை ஆப் காண்பித்தாள் போதும் தனியாக நாம் வாகனங்களில் RC புக் வைத்திருக்க தேவையில்லை.

இதன் மூலம் நம்முடைய வாகன விவரங்கள், இன்சூரன்ஸ் காலம், மாசு சான்றிதழ் விவரம், முடிவடையும் தேதி போன்ற பல அம்சங்களை தெரிந்து கொள்ள முடியும்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings