இந்திய வீரர்கள் அதிகம் சம்பாதிக்கின்றனர்... அவர்களுக்கு ஈகோ இருக்கிறது !

இந்திய வீரர்கள் அதிகம் சம்பாதிக்கின்றனர்... அவர்களுக்கு ஈகோ இருக்கிறது !

0

முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரின் 2 ஆவது போட்டியில் இந்திய அணி படு சொதப்பலாக விளையாடி தோல்வியடைந்தது. 

இந்திய வீரர்கள் அதிகம் சம்பாதிக்கின்றனர்...  அவர்களுக்கு ஈகோ இருக்கிறது !
இதையடுத்து இந்திய கிரிக்கெட் அணி எப்படி உலகக்கோப்பை தொடரை சந்திக்கப்போகிறது என்ற அச்சத்தை இந்திய ரசிகர்கள் எழுப்பி நிலையில் 

முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான கபில்தேவ், இந்திய வீரர்களுக்கு அதிகளவில் காசு வந்து விட்டதால் ஈகோவுடன் இருக்கிறார்கள் என்று குற்றம் சாட்டியிருந்தார். 

பிறப்புறுப்பைச் சுற்றியுள்ள கருமையை நீக்குவதற்கு சில வழிகள் !

அதற்கு இந்தியக் கிரிக்கெட் அணியின் முக்கிய வீரரான ஜடேஜா பதிலளித்து இருப்பது ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்திய அணி 1-0 என்று டெஸ்ட் தொடரை கைப்பற்றிய நிலையில் அடுத்தாக ஒருநாள் போட்டித் தொடரின் இரண்டாவது போட்டியில் படு சொதப்பலாக விளையாடியது. 

இதனால் 4 ஆண்டுகளாக 9 ஒருநாள் போட்டிகளில் இந்தியாவை வெல்லாத வெஸ்ட் இண்டீஸ் முதல் முறையாக வெற்றி பெற்றது. மேலும் இந்திய வீரர்களின் பேட்டிங் வரிசை மற்றும் ஃபீல்டிங் படு மோசமாக இருந்தது.

அதேபோல காயம் காரணமாக பும்ரா மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் இந்த தொடரில் விளையாட வில்லை. மேலும் முக்கிய வீரரான விராட் கோலி மற்றும் கேப்டன் ரோஹித் சர்மாவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டது. 

இதனால் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் தகுதிச் சுற்றுக்குக் கூட தகுதி பெறாத வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் இந்திய அணி தோல்வி பெற்றது குறித்து ரசிகர்களும் கிரிக்கெட் பிரபலங்களும் கடுமையாக விமர்சித்து வந்தனர்.

அந்த வகையில் இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவனாகவும் 1983 இல் இந்திய அணி உலகக்கோப்பை வெல்வதற்கு முக்கிய காரணமாகவும் இருந்த கபில்தேவ், இந்திய வீரர்கள் ஐபிஎல் போன்ற போட்டிகளில் விளையாடி அதிகளவில் சம்பாதிக்கின்றனர். 

இதனால் அவர்களுக்கு ஈகோ இருக்கிறது. இளம் வீரர்கள் தங்களுக்கு எல்லாம் தெரியும் என்று நினைக்கின்றனர். முன்னாள் வீரர்களான கவாஸ்கர் போன்றோர்களிடம் கருத்துக் கேட்பதற்கு தயக்கம் காட்டுகின்றனர் என்று விமர்சித்து இருந்தார்.

குறிப்பாக கபில்தேவ் இந்த விமர்சனத்தை சுப்மன் கில்லை நோக்கியே வைப்பதாகவே தகவல்கள் கூறப்படுகின்றன. இந்நிலையில் சமூக ஊடகங்களில் வெளியான இந்தத் தகவலை நான் பார்க்க வில்லை. 

ஆனால் கபில்தேவ் எதை வைத்து இப்படி சொல்கிறார் என்பதும் புலப்பட வில்லை என்று கூறிய இந்தியக் கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா மேலும் சில முக்கிய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அதில் இந்திய வீரர்கள் யாரிடமும் ஈகோவோ ஆணவமோ இல்லை. இந்திய வீரர்கள் அனைவரும் கிரிக்கெட்டை மகிழ்ச்சியுடன் கொண்டாட்டத்துடன் விளையாடி வருகிறோம். அதற்காக கடுமையாக உழைக்கிறோம். 
பெண்களுக்கு என்னென்ன குறைகள்?

பயிற்சிகளில் தீவிரமாக ஈடுபடுகிறோம். யாரும் எதையும் சாதாரணமாக எடுத்துக் கொள்வதே இல்லை. ஒவ்வொரு வீரரும் களத்தில் 100% திறமையை வெளிப்படுத்துகிறோம்.

இந்திய அணி தோல்வியடையும் போது இதுபோன்ற கருத்துகள் வரும். என்னை பொறுத்த வரை இந்திய அணி சிறந்த வீரர்களுடன் சிறந்த அணியாக செயல்படுகிறது. நாங்கள் இந்தியாவுக்காக விளையாடுகிறோம். 

அது தான் எங்களின் ஒரே குறிக்கோள் என்று தெரிவித்துள்ளார். ரவீந்திர ஜடேஜா அளித்துள்ள இந்தப் பதில் தற்போது ரசிகர்களிடையே ஓரளவிற்கு நிம்மதியை வரவழைத்து இருக்கிறது என்றே சொல்லாம்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டித் தொடரில் வெற்றிப் பெற்ற இந்திய அணி அடுத்து டி20 போட்டிகளில் விளையாட இருக்கிறது. 

அதைத் தொடர்ந்து அயர்லாந்துக்கு எதிரான 3 டி20 போட்டிகளில் இந்திய வீரர்கள் விளையாட உள்ளனர். இந்த அணிக்கு பும்ரா கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார். 

கடந்த 11 மாதங்களுக்கு பிறகு பும்ரா டி20 போட்டிகளில் கேப்டனாக களம் இறங்கவுள்ள நிலையில் துணை கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)