இனி ஏடிஎம் கார்டு செல்லாது.. வங்கி திடீர் அறிவிப்பு !

0

பேங்க் ஆஃப் இந்தியா (BOI) வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஒரு முக்கியமான அறிவிப்பு வந்துள்ளது. அக்டோபர் 31ஆம் தேதிக்குப் பிறகு பேங்க் ஆஃப் இந்தியா டெபிட் கார்டு செல்லாது. கார்டு முடக்கப்பட்டு விடும். 

இனி ஏடிஎம் கார்டு செல்லாது.. வங்கி திடீர் அறிவிப்பு !
எனவே, நவம்பர் 1ஆம் தேதிக்கு முன் இந்த வேலையை முடிக்கத் தவறினால், உங்கள் கார்டில் இருந்து எந்தப் பரிவர்த்தனையும் செய்யவோ அல்லது ஏடிஎம்மில் பணம் எடுக்கவோ முடியாது.

ஒரு வேளை நீங்கள் பேங்க் ஆஃப் இந்தியா வாடிக்கையாளராக இருந்தால், நவம்பர் 1க்கு முன் உங்கள் வங்கிக் கிளைக்குச் சென்று உங்கள் மொபைல் எண்ணைப் பதிவு செய்வது கட்டாயமாகும். 

முட்டையை இப்படிதான் சமைக்கனுமாம், அது தான் ஆரோக்கியத்திற்கு நல்லது !

இல்லை யென்றால், கடைசி தேதிக்குப் பிறகு உங்களால் டெபிட் கார்டைப் பயன்படுத்த முடியாமல் போகலாம். பேங்க் ஆஃப் இந்தியா வங்கி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு மூலம் இது குறித்து வாடிக்கை யாளர்களுக்கு தகவல் வெளியிட்டுள்ளது. 

அதில், அன்புள்ள வாடிக்கையாளரே..! ஒழுங்குமுறை வழிகாட்டுதல்படி, டெபிட் கார்டு சேவைகளைப் பெறுவதற்கு செல்லுபடியாகும் மொபைல் எண் கட்டாயமாகும். 

அக்டோபர் 31ஆம் தேதிக்கு முன் உங்கள் வங்கிக் கிளையை பார்வையிடவும். உங்கள் மொபைல் எண்ணை புதுப்பிக்கவும்/பதிவு செய்யவும் கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள் என்று தெரிவித்துள்ளது.

வங்கியில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை ஆன்லைனில் அல்லது ஏடிஎம் மூலமாக மாற்ற முடியா விட்டால், கிளைக்குச் சென்று நேரடியாக மாற்றலாம். 

இதற்காக, வங்கிக் கிளைக்குச் சென்று, மொபைல் எண்ணை மாற்றுவதற்கான படிவத்தை நிரப்பி, அங்கு கேட்கப்பட்ட தகவல்களைப் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். 

இதனுடன் பாஸ்புக் மற்றும் ஆதார் கார்டு நகலையும் சமர்ப்பிக்க வேண்டும். இந்த வேலையை முடிக்கா விட்டால் உங்களால் டெபிட் கார்டை தொடர்ந்து பயன்படுத்த முடியாது.

ஏனெனில் ஏடிஎம் கார்டு பயன்படுத்துவதற்கு மொபைல் நம்பர் முக்கியம். அது எப்போதுமே அப்டேட்டாக இருக்க வேண்டும். 

பத்தரை மாற்று தங்கம் என்றால் என்ன? தெரியுமா? உங்களுக்கு !
ஏடிஎம் கார்டில் பணம் எடுப்பது போன்ற பரிவர்த்தனை தொடர்பான தகவல்கள் சம்பந்தப்பட்ட மொபைல் நம்பருக்கு வங்கி மூலமாக அனுப்பப்படும். 

எனவே மொபைல் நம்பர் அப்டேட்டாக இருப்பது மிகவும் அவசியம். இல்லாவிட்டால் பிரச்சினை தான்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings