சொத்து பத்திரம் தொலைந்து விட்டால் எப்படி பெற வேண்டும் தெரியுமா?

0

இணைய தளத்தில் சொத்து பத்திரங்களின் நகல்களை எப்படி பெறுவது என்று தெரியுமா? நில உரிமையாளர்கள் பட்டா மாறுதலுக்கான விண்ணப்பங்களை பொதுவாக கணினி மூலம் மற்றும் சார் பதிவாளர்கள் அலுவலகம் மூலம் விண்ணப்பித்து.

சொத்து பத்திரம் தொலைந்து விட்டால் எப்படி பெற வேண்டும் தெரியுமா?
அவை இணைய தளத்தில் பரிசளிக்கப்பட்டு அதற்கு பிறகு பட்டா மாறுதல் ஆணையம் வழங்கப் படுகிறது.

எனினும் இ-சேவை மையம் மூலம் பொதுமக்கள் பட்டா விண்ணப்பம் பெறுவதற்கு அதிக நாட்கள் எடுத்துக் கொள்ளப் படுவதாக மக்கள் தொடர்ந்து புகார் கூறி வருகிறார்கள்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் முதல்வர் ஸ்டாலின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் எங்கிருந்தும், எந்த நேரத்திலும், என்ற இணைய வழி சேவை மூலம்.

பொதுமக்கள் எங்கிருந்தும் பட்ட மாறுதலுக்கு விண்ணப்பிக்கும் வசதியை சில மாதாளங்களுக்கு முன்பு தொடங்கி வைத்தார்கள்.

என்னென்ன வசதிகள் உள்ளது

பொதுமக்களின் வசதிக்காக எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் இருந்து பட்டம் மாறுதல் கோரிக்கை tamilnilam.tn.gov.in என்ற அரசின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் புதிய வசதியை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்.

இந்த இணையதளம் முறையில் பட்டா மாறுதல் வசதி செய்யப் பட்டுள்ளதால் பொதுமக்கள் தங்கள் அருகில் இருக்கும் இ-சேவை மையத்திற்கு தாலுக்கா அலுவலகத்திற்கும் தேவை யில்லாமல் அலைய வேண்டாம் என கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளது.

வாயை திறந்து கொண்டு தூங்குவதால் இந்த பிரச்சனை ஏற்படும் தெரியுமா?

இணையத்தில் அனைத்து வசதிகளும்

தொலைந்த பத்திரத்தையும் இணைய தளத்தில் பெற்றுக் கொள்ள முடியும் முன்பெல்லாம் பத்திரம் தொலைந்து போய் விட்டால் அதை மீட்பது மிக கடினம்.

தொலைந்து போன அல்லது பழைய சேதமடைந்த பத்திரம் நகல் எடுக்க வேண்டுமானால் தாலுகா அலுவலகத்திற்கு தான் நீங்கள் நேரில் செல்ல வேண்டும்.

அங்கு அதிகாரிகள் கேட்கும் அனைத்து ஆவணங்களையும் நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும், இதற்கு பல நாட்கள் எடுத்துக் கொள்ளப்படும், உரிமையாளர்கள் தங்களது சொத்து பத்திரங்களை பெறுவார்கள்.

ஆனால் இப்போது நிலைமை அப்படி இல்லை பொதுமக்களின் வசதிக்காக எல்லாம் இணைய தளத்தில் மாற்றப் பட்டுள்ளது. வீட்டுக்குள் இருந்தே தொலைந்து போன பத்திரத்தை உங்களால் பெற முடியும்.

சொத்தின் நகல் பெற?

சொத்து பத்திரம் தொலைந்து விட்டால் எப்படி பெற வேண்டும் தெரியுமா?
நீங்கள் முதலில் tamilnilam.tn.gov.in என்ற அரசின் அதிகாரப்பூர்வை இணைய தளத்திற்கு செல்ல வேண்டும், உள்ளே நுழைய உங்கள் யூசர் ஐடி மற்றும் கடவுச்சொற்களை பயன்படுத்த வேண்டும்.

உள் நுழைய என்ற இடத்தில் உங்களுடைய பெயர் கடவுச் சொற்கள் அதாவது பாஸ்வேர்டு மற்றும் கொடுக்கப் பட்டுள்ள கேப்சா கோடினை பிழை யில்லாமல் சரியாக நீங்கள் உள்ளிட வேண்டும்.

ஒரு வேளை இந்த இணைய தளத்திற்குள் இப்பொழுது தான் நீங்கள் முதல் முறையாக நுழைகிறீர்கள் என்றால் பயனார் பதிவு என்பதை கிளிக் செய்து உள்ளே நுழைய வேண்டும்.

அங்கு கேட்கப்படும் உங்களுடைய அனைத்து விவரங்களையும் நீங்கள் சரியாக பூர்த்தி செய்து, ஒரு புது கணக்கை உருவாக்க வேண்டும்.

இப்பொழுது உங்களுடைய தொலைபேசி எண்ணுக்கு ஒரு ஓடிபி அந்த நம்பரை நீங்கள் பதிவிட்டால் உங்களுக்கு புது கணக்கு தொடங்கி விடும்.

அதன் பிறகு மின்னணு சேவை என்ற தேர்வை கிளிக் செய்ய வேண்டும், இப்போது ஸ்கிரீனில் அதிகப் படியான தேர்வுகள் தென்படும். இதில் சான்றிர்க்கப்பட்ட நகல் என்ற தேர்வை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும்.

இதன்பிறகு தேடல் மற்றும் சான்றளிக்கப்பட்ட நகல் விண்ணப்பிக்க என்ற தேர்வினை கிளிக் செய்தால் புதிய திரை தோன்றும்.

பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற நபரின் அதை கடித்த பெண் !

இந்த பக்கத்தில் ஆவணத்தின் வகைப்பாடு என்ற இடத்தில் சொத்து சம்பந்தமான ஆவணம் என்பதை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும்.

பிறகு உங்களுடைய ஆவண எண் என்பதில் உங்களுடைய வில்லங்கச் சான்றிதழ் உள்ள ஆணை நம்பரை நீங்கள் பதிவிட வேண்டும்.

சார் பதிவாளர் அலுவலகம் என்ற இடத்தில் நீங்கள் எந்த அலுவலகத்தில் பத்திர பதிவு செய்தீர்களோ அந்த அலுவலகத்தினை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும்.

ஆண்டு என்ற இடத்தில் எந்த ஆண்டு பத்திர பதிவு செய்யப்பட்டது. அதை நீங்கள் கட்டாயம் தேர்வு செய்ய வேண்டும்.

இப்பொழுது திரையில் தென்படும் கேப்ஸா கோடினை அவற்றில் உள்ளது போல் நீங்கள் சரியாக உள்ளீடு செய்து தேடுக என்ற தேவை கிளிக் செய்தால்.

இப்பொழுது நீங்கள் பதிவு செய்த ஆவணங்களின் விவரங்கள் திரைவில் பதிவாகி விடும், பிறகு இணைய வழி விண்ணப்பிக்க என்ற தேர்வை கிளிக் செய்து.

தனிப்பட்ட விவரங்கள் என்ற தேர்வில் உங்களது தனிப்பட்ட விவரங்களை சரியாக உள்ளீடு செய்து சரி என்ற தேர்வை கிளிக் செய்ய வேண்டும்.

அதன் பிறகு கட்டண விவரங்கள் என்ற பக்கம் திறந்து விடும் இதில் செலுத்த வேண்டிய கட்டணங்கள் பற்றி தகவல்கள் இருக்கும் அதில் இணையதளம் மூலம் என்ற தேர்வு கிளிக் செய்து.

செலுத்துகின்ற தேர்வு நீங்கள் கிளிக் செய்ய வேண்டும், இணைய தளத்தில் பணம் செலுத்திய பிறகு அதற்கான ரசீது கிடைத்து விடும்.

பிறகு அந்த இணைய தளத்தின் முகப்பு பக்கத்திற்கு சென்று மின்னணு சேவை என்ற தேர்வை கிளிக் செய்து சான்றளிக்கப்பட்ட நகல் என்ற தேர்வையும் கோரிக்கை பட்டியல் என்ற தேர்வை நீங்கள் கிளிக் செய்ய வேண்டும்.

இப்பொழுது உங்களுடைய விண்ணப்பத்தின் எண், பதிவு எண், ஆவணத்தின் வகைப்பாடு, விண்ணப்பம் நாள், தொகை செலுத்தப்பட்ட நிலைப்பாடு, கையப்ப ஆவணம் போன்ற விவரங்கள் அதில் அடங்கி யிருக்கும்.

குழந்தை பேறை இழக்கும் இளம் பெண்கள் !

பத்திர நகல்கள் எத்தனை நாளில் கிடைக்கும்

சொத்து பத்திரம் தொலைந்து விட்டால் எப்படி பெற வேண்டும் தெரியுமா?

இப்பொழுது இரண்டு நாள் கழித்து இந்த இணைய தளத்தை நீங்கள் சோதனை செய்து, மின்னணு சேவை என்று தேர்வு கிளிக் செய்து சான்றளிக்கப்பட்ட என்ற தேர்வையும்.

பிறகு கோரிக்கை பட்டியல் என்ற தேர்வை கிளிக் செய்தால், கீழ் பகுதியில் கையொப்பமிடம் இடத்தில் பதிவிறக்கம் என்ற தேர்வு இருக்கும்.

அதை கிளிக் செய்தால் உங்களது, தேவையான பத்திரத்தின் தகவல்களை இணைய தளத்தில் நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)