கிரிப்டோகரன்சியால் 67 லட்சத்தை இழந்த கூகுள் ஊழியர் !

0

பொதுவாக பெரும் நிறுவனங்களில் பணியாற்றுவோர் அதிகப் படியான சம்பளத்தை வாங்குவது வழக்கம், அதிலும் குறிப்பாக பிக் 4 எனப்படும் டாப் 4 டெக் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சராசரியாகவே 1 கோடி ரூபாய் இருக்கும்.

கிரிப்டோகரன்சியால் 67 லட்சத்தை இழந்த கூகுள் ஊழியர் !
இந்த நிலையில் 22 வயதில் கூகுள் ஊழியராக இருக்கும் ஒருவர் கிரிப்டோ கரன்சியில் 67 லட்சம் ரூபாயை இழந்துள்ளார். 

22 வயதான கூகுளின் மென்பொருள் பொறியாளர், அவருடைய முதலீட்டு போர்ட் போலியோவில் தற்போது ரூ. 1 கோடிக்கும் அதிகமான தொகை ஓய்வூதியம் மற்றும் பல்வேரு ப்ரோகரேஜ் கணக்குகள் மற்றும் இரண்டு வீடுகள் உள்ளது. 

இளம் வயதிலேயே நல்ல வேலை, அதிகப் படியான முதலீடு ஆகியவற்றின் மூலம் இது சாத்திய மாகியிருந்தாலும், பல பெரும் முதலீட்டாளர்கள் போலவே இவரும் கிரிப்டோ-வில் முதலீடு செய்து குறிப்பாக மார்ஜின் முதலீடு செய்து சுமார் ரூ. 67 லட்சத்தை இழந்துள்ளார். 

மார்ஜின் முதலீடு என்பது கடன் வாங்கிய பணத்தைப் பயன்படுத்தி முதலீடு செய்வது என்பது பொருள். 

கலிபோர்னியாவின் ஆரஞ்ச் கவுண்டியைச் சேர்ந்த ஈதன் நகுன்லி, தனது டீனேஜ் வயதிற்கு முன்பே தனது பெற்றோரின் உதவியுடன் பங்குச் சந்தையில் முதலீடு செய்யத் தொடங்கினார். 

ஆனால் அந்த பயணத்தில் அவர் இப்போது தனது மிகப்பெரிய நிதி தவறு செய்துள்ளதாக சிஎன்பிஐ செய்தி சேனலுக்கு கொடுத்த பேட்டியில் தெரிவித்துள்ளார். 

இவருடைய பேட்டி பல இளம் முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது, இந்தியாவிலும் பலர் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்து பெரும் தொகையை இழந்துள்ளனர். 

இதனால் இவருடைய பேட்டி உலகம் முழுவதும் வைராலாகியுள்ளது. நவம்பர் 2021 முதல் ஜூன் 2022 வரை கிரிப்டோவில் ஈதன் நகுன்லி சுமார் ரூ.67 லட்சத்தை இழந்ததாக கூறினார். 

அவரது மொத்த இழப்புகளில் அசல் முதலீட்டான 24 லட்சம் ரூபாயும் அடக்கம் அப்படியானல் சுமார் 41 லட்சம் வரையில் கிரிப்டோவில் லாபத்தை பதிவு செய்துள்ளார். 

ஷிபா இனு மற்றும் டோக்காயின் போன்ற ஆல்ட்காயின்களில் சில நூறு டாலர்களை மட்டுமே முதலீடு செய்த வேளையில் பிட்காயின் மற்றும் எத்தேரியம் போன்ற பிரபலமான கிரிப்டோ கரன்சியில் சுமார் 33 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருப்பதாக ஈதன் நகுன்லி தெரிவித்தார். 

ஆனால் பிட்காயினின் விலை வீழ்ச்சி யடைந்ததால், சுமார் 12 லட்சம் கடன் வாங்கிய கூடுதலாக முதலீடு செய்தது தான் இவருடைய பெரும் தவறாக பார்க்கப் படுகிறது. 

பிட்காயின் விலை சுமார் 70 சதவீதத்திற்கு மேல் சரிந்ததுள்ளது மூலம் பெரும் பாதிப்பை இவர் எதிர் கொண்டார். நீங்களும் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்திருந்தால் உங்களுடைய அனுபவத்தை பகிரவும். 

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(30)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !