6ம் வகுப்பு மாணவனுடன் 34 வயது ஆசிரியை.. மாணவன் கதை !

0

மேரி கே லெட்டோர்னோ, இந்தப் பெயர் சமூக ஊடகங்களில் மிகவும் பிரபலம். உலகின் மிக மோசமான ஆசிரியை என்ற பட்டத்தை பலர் மேரிக்கு வழங்கி யுள்ளனர். 

6ம் வகுப்பு மாணவனுடன் 34 வயது ஆசிரியை.. மாணவன் கதை !
அதற்கு காரணம் மேரி தனது பன்னிரண்டு வயது மாணவனை திருமணம் செய்து கொண்டது தான். ஆசிரியர் பதவி என்பது உலகில் மிகவும் மரியாதைக் குரியதாகக் கருதப்படுகிறது. 

பெற்றோருக்குப் பிறகு, குழந்தைக்குகளுக்கு கல்வி, வாழ்க்கை முறை, நற்பண்புகள் ஆகியவற்றை சொல்லிக் கொடுப்பது ஆசிரியர்கள் தான். 

மூளை வளர்ச்சிக்கு மிக முக்கியமானது கைக்குத்தல் அரிசி !

அதோடு மட்டுமன்றி குழந்தைகளுக்கு உலக அறிவையும் அசிரியர்கள் கறிப்பிக்கின்றனர். எதிர் காலத்தில் ஒரு குழந்தை எப்படிப்பட்ட மனிதனாக மாறும் என்பது பெரும்பாலும் ஆசிரியர்களின் கைகளில் தான் உள்ளது.

ஒரு ஆசிரியர் தன் வேலையில் தீவிரமாகவும், குழந்தையின் வளர்ச்சியில் சிறப்புக் கவனமும் ஆர்வமும் கொண்டிருந்தால், அந்தக் குழந்தை வெற்றி பெறுவதை யாராலும் தடுக்க முடியாது. 

ஆனால் ஒரு ஆசிரியர் தனக்கான வேலையை சரிவர செய்யவில்லை என்றால், பெற்றோரின் ஒவ்வொரு முயற்சியும் தோல்வியில் முடியும். 

இவ்வாறு பொறுப்புமிக்க பணியை செய்யும் ஆசிரியர் ஒருவர் குறித்து இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

தென் பசிபிக் பெருங்கடலில் உள்ள சமோவா தீவில் வசிக்கும் விஜி ஃபுலாவ் என்பவர் பன்னிரண்டு வயதாக இருந்த போது, ​​அவரது பெண் ஆசிரியரால் பாலியல் சீண்டலுக்கு உள்ளானார். 

அதை விட ஆச்சரியம் என்னவென்றால் அந்த ஆசிரியை அதே மாணவனை திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகளையும் பெற்றெடுத்தது தான்.

மேரி வாஷிங்டன் மாநிலத்தில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். அதே பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தார் விஜி. இந்நிலையில் மேரிக்கு விஜி மீது ஈர்ப்பு ஏற்பட்டது. 

அதனால் அந்த மாணவனுடன் உடல் ரீதியிலான உறவை ஏற்படுத்திக் கொண்டார் மேரி. அப்போது மேரிக்கு 34 வயது. மேலும்,  அவர் ஏற்கனவே நான்கு குழந்தைகளுக்கு தாயாக இருந்தார். 

இந்த விபரம் வெளிச்சத்திற்கு வந்ததும், மேரியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆனால் சிறையில் இருந்து வெளியே வந்த பிறகும், விஜியுடனான உறவை மேரி தொடர்ந்துள்ளார். 

குழந்தைகளை ஆரோக்கியமாக வளர்க்க உதவும் உணவுகள் ! 

இந்த உறவின் மூலம் இரண்டு குழந்தைகளையும் பெற்றெடுத்துள்ளார் மேரி. விஜிக்கும் மேரிக்கும் 2005ல் திருமணம் நடந்தது. இருவரும் பதினான்கு ஆண்டுகளாக தம்பதியாக வாழ்ந்தனர். 

பின்னர் விவாகரத்து செய்து கொண்டனர். இல்லற வாழ்க்கையில் இருந்து விலகிய  பிறகும், இருவரும் நெருக்கமாக இருந்துள்ளனர். இந் நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டும் புற்றுநோயால் மேரி உயிரிழந்தார். 

அவர்களது உறவு குறித்து விஜி கூறுகையில், மேரிக்கு முதலில் முத்தம் கொடுத்தது தான் தான் என்றும்,  இருவரும் ஒருவரை யொருவர் காதலித்தாலும் தனது வாழ்க்கையின் கடைசி கட்டத்தில், மேரி தனது வாழ்க்கையில் எடுத்த சில முடிவுகளுக்காக வருந்தியதாக கூறுகினார்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings