5 நாட்கள் இந்த கிராமத்து பெண்கள் ஆடை அணிவதில்லை !

0

இந்தியாவில் இருக்கும் சில கிராமங்களில் இன்னும் பழமையான மரபுகள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அவை முற்றிலும் விநோத மானவையாக இருக்கின்றன.

5 நாட்கள் இந்த கிராமத்து பெண்கள் ஆடை அணிவதில்லை !
இன்னும் இப்படியான சடங்குகளை செய்கிறார்களா என்று கேட்கும் அளவிற்கு அவைகள் இருக்கின்றன. அந்த வகையில், இன்று ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமத்தின் சடங்கை பற்றி தான் பார்க்க இருக்கிறோம்.

முன்னொரு காலத்தில் ஹிமாச்சலப் பிரதேச மணிகர்ணா பள்ளத்தாக்கில் உள்ள பின்னி என்ற கிராமத்தில், பேய்கள் மற்றும் அரக்கர்கள் அலைந்து திரிந்ததாக சொல்லப் படுகிறது. 

அந்த பேய்கள் அழகான ஆடைகள் உடுத்தியிருக்கும் திருமணமான பெண்களை தங்களுடனே அழைத்துச் சென்று விடுமாம். அப்போது அவர்களை லாஹு கோண்ட் என்ற தெய்வம் காப்பாற்றி விடுமாம்.

உடற்பயிற்சிக்கு பின்னர் செய்ய கூடியதும் செய்ய‍க் கூடாததும் !

லாஹு கோண்ட் தெய்வம் பேய்களை அழித்த நிகழ்வை நினைவு கூறும் வகையில், சாவான் மாதத்தில் 5 நாட்கள் இந்த கிராமத்தில் உள்ள பெண்கள் ஆடைகளே அணிவதில்லை. 

இந்த பாரம்பரியம் பல நூற்றாண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. காலப்போக்கில் வாலிப பெண்கள் ஒற்றை ஆடை உடுத்திக் கொள்ள மட்டும் அனுமதி வழங்கப் பட்டுள்ளது. 

ஆனால், வயது முதிர்ந்தவர்கள் நிர்வாணமாகவே சுற்றித் திரிகின்றனர். இந்த விதியை மீறி ஆடை அணியும் பெண்கள் சிறிது நாட்களிலேயே துர்சம்பவங்களை சந்திப்பதால் யாரும் இந்த பாரம்பரியத்தை மீறுவதில்லை. 

5 நாட்கள் இந்த கிராமத்து பெண்கள் ஆடை அணிவதில்லை !

இன்றைய காலத்தில் கிராமத்தில் உள்ள பெண்கள் நிர்வாணமாக வெளியே வருவதற்கு பதிலாக வீட்டிற்குள்ளேயே பூட்டி இருக்கிறார்கள். பெண்கள் மட்டுமின்றி, ஆண்களுக்கும் சில கட்டுப்பாடுகள் இருக்கின்றன.

அதாவது, வருடத்தின் இந்த 5 நாட்களில் ஆண்கள் யாரும் மது மற்றும் மாமிசம் உண்ணக் கூடாது. சம்பிரதாயத்தை முறையாக கடைபிடிக்கா விட்டால், தெய்வங்கள் கோபமடைந்து அவருக்கு தீங்கு விளைவிக்கும் என்பது ஐதீகம். 

எந்தெந்த பொருட்களை தேநீருக்கு பிடிக்காது?

அதே போல இந்த 5 நாட்களும் கணவன்-மனைவி உடலுறவு வைக்கக் கூடாது. சிரித்து பேசவும் கூடாது. 

சிரித்து, மகிழ்ந்து இருப்பதைப் பார்த்தால் மீண்டும் பேய் வந்து பெண்ணை தூக்கிச் சென்று விடும் என்பது இந்த கிராம மக்களின் நம்பிக்கை. குறிப்பாக, இந்த சிறப்பு விழாவில் வெளியூர் மக்கள் யாராலும் பங்கேற்க முடியாது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings