பறவைகள் V வடிவத்தில் பறப்பது ஏன்? தெரியுமா?

0

இந்த கேள்விக்கு பறவைகள் பல அற்புதமான சுவாரஸ்யமான தத்துவங்களை நமக்கு சொல்லி விட்டு செல்கின்றன. நாம் பறவைகள் கூட்டமாக பறப்பதை கவனித்திருந்தால் அவை ஒரே சீராக V வடிவத்தில் பறப்பதை காணலாம். 

பறவைகள் V வடிவத்தில் பறப்பது ஏன்? தெரியுமா?
சென்னையில் காக்கை மட்டுமே காண முடியும் என்பதால் கொஞ்சம் வெளியில் வந்து செங்கல்பட்டில் சீதோஷண காலங்களில் பார்த்தால், நீண்ட தொலைவி லிருந்து வரும் கொக்கு நாரை போன்ற வெளி நாட்டுப் பறவைகள் இந்த வடிவத்தில் பறப்பதை காணலாம். 

ஒரு பறவை முன்னணியில் பறந்தும் பின்னால் வரும் பறவைகள் குறிப்பிட்ட இடைவெளியில் வருவதையும் பார்க்கலாம். பொதுவாக இதன் வடிவம் V என இருக்கும். 

எப்போது நீச்சல் பயிற்சி செய்யக் கூடாது? தெரியுமா?

அதன் காரணம் என்ன?

இந்த கேள்விக்கான பதிலானது மிக ஆழ்ந்து பார்க்கும் அறிவியலை நமக்கு தருகிறது. அதை மேலும் நாம் தெளிவாக உணர்ந்தால் ஒரு அற்புதமான மேலாண்மை தத்துவத்தை புரிய வைக்கிறது. ஒரு கேள்விக்கு இரணடு பதில்கள்.

காரணம் ஒன்று

பறவைகள் V வடிவத்தில் பறப்பது ஏன்? தெரியுமா?

பறவைகள் இது போல பறப்பதால் அவை அதிக அளவு ஆற்றலை சேமிக்கின்றன. இதனால் அவை வெகு தூரம் அவை தொடர்ந்து பறக்க முடிகிறது. 

அவை தனியாக பறப்பதினால் பயன்படுத்தப்படும் ஆற்றலை விட இது போல் V வடிவத்தில் பறப்பதினால் அவைகளின் ஆற்றலில் 70% வரை சேமிக்கின்றன.

பொதுவாக தனியாக ஒரு பறவை பறக்கையில் காற்றில் அதன் பின்னிழுக்கும் விசை (drag force) மிக அதிகமாக இருக்கும். 

பறவைகள் இது போல V வடிவில் பறப்பதால் அதன் பின்னுழுக்கும் விசை வலுவிழந்து சமதனப்படுத்தப்பட்ட மிதக்கும்விசை காரணமாக பறவைகள் தொடர்ந்து வெகு தூரம் இலகுவாக பறக்கின்றன. 

முக்கியமான விஷயம் என்ன வென்றால் அனைத்து பறவைகளும் இதன் காரணமாக எளிதாக பறப்பதில்லை. மேலே உள்ள பறவைகளில் சிவப்பால் வட்டமிடப் பிட்டவை, 

காற்றிற்கு எதிராக பறக்கையில் அதிகபட்ச உராய்வினால் மிக அதிக ஆற்றலை எடுத்துக் கொள்கின்றன. எனவே மிக விரைவில் சோர்வடைகின்றன. 

அப்படி சோர்வடையும் போது பின்னால் வருகிற பறவைகள் தலைமை பொறுப்பை எடுத்துக் கொண்டு முன்னே வந்து தொடர்ந்து பறக்கின்றன. சோர்வடைந்த பறவை பின்னே தொடர்ந்து வரும். 

அன்னாசிப்பூ பக்கவிளைவுகள் என்ன? யாரெல்லாம் தவிர்க்கணும்?

இப்படியே தொடர்ந்து நூற்றுக் கணக்கான கிலோ மீட்டர் தொடர்ந்து பறக்கின்றன. இதன் காரணமாக அனைத்து பறவைகளும் தலைமை பொறுப்பை ஏற்கிற வாய்ப்பு கிடைக்கிறது. 

மேலும் சோர்வடையும் போது நடுவில் ஓய்வு எடுத்துக் கொள்கின்றன.

காரணம் இரண்டு

இது போல பறப்பதால் எந்த பறவையும் அதன் சக பறவையை எந்த நிலையிலும் பார்க்க முடியும். இதனால் மிக நீண்ட தூரம் பறக்கையில் அனைத்துப் பறவையும் சக பறவைகளின் பார்வையில் இருக்கும். 

தொலைந்து விடுவதற்கான வாய்ப்புகள் குறைவு. இதனால் அவை தொடர்ந்து கூட்டத்தை பின் தொடர்ந்து கொண்டிருக்கும்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings