உலகின் அழகான கண்ணை கவரும் பள்ளத்தாக்குகள் !

0

நம்முடைய உலகில் ஏராளமான அழகான பள்ளத்தாக்குகள் காணப்படுகின்றன. பள்ளத்தாக்கு என்பது ஆறு போன்ற நீர்நிலைகள் தொடர்ந்து பலகாலமாக ஆர்ப்பரித்து ஓடி வரும் நீரினால் ஏற்படுத்தக் கூடிய அரிப்பினால் ஏற்படக்கூடிய பள்ளமே பள்ளத்தாக்கு என அழைக்கப் படுகிறது. 

உலகின் அழகான கண்ணை கவரும் பள்ளத்தாக்குகள் !
உலகம் முழுவதும் இப்படி ஏராளமான பள்ளத்தாக்குகள் காணப்படுகிறது. இந்த பள்ளத்தாக்குகள் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். 

உலகம் முழுவதும் உள்ள ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இந்த அழகான பள்ளத் தாக்குகளை பார்த்து செல்வதற்காக தொடர்ந்து 

ஒவ்வொரு பள்ளத்தாக்கு இருக்கும் இடங்களுக்கும் பயணித்துக் கொண்டே இருக்கிறார்கள். அப்படி உலகிலுள்ள 12 அழகான பள்ளத் தாக்குகளை பற்றி பார்க்கலாம்.

நூற்றுக்கணக்கில் காகங்கள்? இயற்கையின் எச்சரிக்கை உண்மை என்ன?

டோட்ரா பள்ளத்தாக்கு (Todra Gorge) : .

டோட்ரா பள்ளத்தாக்கு உயரமான அட்லஸ் மலைகளின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இது 24 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. டோட்ரா பள்ளத்தாக்கின் அகலம் 33 லிருந்து 3281 அடி வரைக்கும் உள்ளது. 

டோட்ரா பள்ளத்தாக்கின் உயரம் ஒருசில இடங்களில் 1,312 அடி உயரம் வரை இருக்கும்.

கிங்ஸ் கேன்யன் (Kings Canyon) : .

உலகின் அழகான கண்ணை கவரும் பள்ளத்தாக்குகள் !

கிங்ஸ் கேன்யன் ஆஸ்திரேலியாவின் வடக்குப் பிரதேசத்தின் தெற்குப் பாலைவனப் பகுதியில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். 

இது ஜார்ஜ் கில் மலைத் தொடரின் மேற்கு முனையில் ஆலிஸ் ஸ்பிரிங்ஸிலிருந்து தென்மேற்கே 323 கிலோ மீட்டர் தொலைவிலும், டார்வினுக்கு தெற்கே 1,316 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. 

இந்த பள்ளத்தாக்கின் ஒரு பகுதி அங்குள்ள பழங்குடியினரின் புனிதமான இடமாக உள்ளது. கிங்ஸ் கேன்யன் ஒரு சில இடங்களில் 325 அடிக்கும் அதிகமான உயரத்தில் உள்ளன. 

இந்த பள்ளத்தாக்கு 400 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டது என புவியியலா ளர்களால் சொல்லப்படுகிறது.

தாரோகோ பள்ளத்தாக்கு (Taroko Gorge) : .

உலகின் அழகான கண்ணை கவரும் பள்ளத்தாக்குகள் !
தைவானின் பாறைகள் நிறைந்த கிழக்கு கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ள டரோகோ பள்ளத்தாக்கு தீவின் மிகப்பெரிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். இந்த பள்ளத்தாக்கு 19 கிலோ மீட்டர் நீளம் கொண்டது.
கிளியோபட்ராவின் பேரழகிற்கு காரணம் இந்த இயற்கை பொருட்கள் தானாம் தெரியுமா?

காப்பர் கேன்யன் (Copper Canyon) : .

உலகின் அழகான கண்ணை கவரும் பள்ளத்தாக்குகள் !

காப்பர் கேன்யன் வடமேற்கு மெக்ஸிகோவில் உள்ள சிஹுவாஹுவா மாநிலத்தின் தென்மேற்குப் பகுதியில் உள்ள சியரா மாட்ரே ஆக்சிடென்டலில் உள்ள ஆறு தனித்துவமான பள்ளத் தாக்குகளின் குழுவாகும். 

இது 65,000 சதுர கிலோமீட்டர் அளவில் உள்ளது. இங்கு செல்லும் சிஹுவாஹுவா அல் பசிபிகோ இரயில்வே பாதை 37 பாலங்கள் மற்றும் 86 சுரங்கங்கள் வழியாக செல்கிறது. 

கடல் மட்டத்திலிருந்து 7,900 அடிஉயரத்தில் செல்வதால் கீழே உள்ள பள்ளத் தாக்குகளின் கண்கவர் காட்சிகளை அழகாக காணலாம்.

கோல்கா கேன்யன் (Colca Canyon) : .

உலகின் அழகான கண்ணை கவரும் பள்ளத்தாக்குகள் !
கோல்கா கேன்யன் என்பது தெற்கு பெருவில் உள்ள ஆண்டிஸ் மலைத்தொடரில் உள்ள கொல்கா ஆற்றின் ஒரு பள்ளத்தாக்கு ஆகும். இது கிராண்ட் கேன்யனை விட இரண்டு மடங்கு ஆழம் கொண்டது. 

சுமார் 3300 லிருந்து 6600 அடி ஆழத்துடன் கடல் மட்டத்திலிருந்து 3000 லிருந்து 4000 மீட்டர் உயரத்தில் உள்ளன. உலகின் மிக ஆழமான பள்ளத் தாக்குகளில் இதுவும் ஒன்று. இதன் நீளம் சுமார் 70 கிலோ மீட்டர்கள்.

வியர்வை நாற்றம் அதிகமா வீசுதா? அப்ப இத யூஸ் பண்ணுங்க !

சமாரியா பள்ளத்தாக்கு (Samaria Gorge) : .

உலகின் அழகான கண்ணை கவரும் பள்ளத்தாக்குகள் !

சமாரியா பள்ளத்தாக்கு தென்மேற்கு கிரீட்டில் உள்ள 16 கிலோ மீட்டர் நீளம் கொண்ட பள்ளத்தாக்கு. சமாரியா பள்ளத்தாக்கில் நடந்து செல்வது மிகவும் பிரபலமான ஒரு பொழுது போக்கு. 

ஒவ்வொரு ஆண்டும் 3 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இந்த பள்ளத்தாக்கில் நடந்து செல்கிறார்கள். 

வடக்கில் 1,250 மீட்டர் உயரத்தில் பள்ளத்தாக்கு தொடங்கி அஜியா ரூமேலியில் லிபிய கடலின் கரையில் முடிவடைகிறது. இந்த பள்ளத்தாக்கின் உயரம் 980 அடி வரைக்கும் இருக்கும்.

வைமியா பள்ளத்தாக்கு (Waimea Canyon) : .

உலகின் அழகான கண்ணை கவரும் பள்ளத்தாக்குகள் !
ஹவாய் தீவுகளில் உள்ள காவாயின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள வைமியா பள்ளத்தாக்கு பசிபிக் பகுதியில் உள்ள மிகப்பெரிய பள்ளத்தாக்கு. இது பசிபிக் பெருங்கடலின் கிராண்ட் கேன்யன் என்றும் அழைக்கப்படுகிறது. 

உலகின் மிகவும் வண்ண மயமான பள்ளத்தாக்குகளில் ஒன்றாகும். இந்த பள்ளத்தாக்கு 16 கிலோமீட்டர் நீளமும், 1.6 கிலோ  மீட்டர் அகலமும், 3,600 அடி ஆழமும் கொண்டது. 

இது ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு தீவின் மையத்தில் உள்ள வையாலே மலையிலிருந்து பாயும் ஆறுகளால் உருவானது.

நீர்க்கட்டி பிரச்சனையை சரிசெய்யும் இயற்கை மருத்துவம் !

அன்டெலோப் பள்ளத்தாக்கு (Antelope Canyon) : .

உலகின் அழகான கண்ணை கவரும் பள்ளத்தாக்குகள் !

பாறையில் தெரியும் அழகிய வளைவுகள் மற்றும் ஒளிரும் ஆரஞ்சு மற்றும் ஊதா நிறங்கள் காரணமாக உலகில் அதிகம் புகைப்படம் எடுக்கப்பட்ட பள்ளத்தாக்குகளில் ஒன்று அன்டெலோப் பள்ளத்தாக்கு. 

இது இரண்டு தனித்தனி ஃபோட்டோஜெனிக் பள்ளத்தாக்குகளை கொண்டது. இந்த பள்ளத்தாக்கு அழகாக இருந்தாலும் ஒரு சில சமயங்களில் ஆபத்தானதாக மாறுகிறது. 

1997 ஆம் ஆண்டில் லோயர் ஆன்டெலோப்பில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் காரணமாக 11 சுற்றுலாப் பயணிகள் இறந்து போனார்கள்.

கோர்ஜ் டு வெர்டன் (Gorge du Verdon) : .

உலகின் அழகான கண்ணை கவரும் பள்ளத்தாக்குகள் !
கோர்ஜ் டு வெர்டன்தென்கிழக்கு பிரான்சில் உள்ள ஒரு நதி பள்ளத்தாக்கு. இது ஐரோப்பாவின் மிக அழகான இடமாக பலரால் கருதப்படுகிறது. 

இந்த பள்ளத்தாக்கு சுமார் 25 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. கீழே உள்ள வெர்டன் ஆற்றில் இருந்து 2,300 அடி வரைக்கும் உயர்கிறது. 

ராஃப்டிங், கயாக்கிங், செயிலிங் மற்றும் வாட்டர் ஸ்கீயிங் போன்ற வாட்டர் ஸ்போர்ட்ஸை விரும்புவோர், நடைபயிற்சி செய்பவர்கள், மலை ஏறுபவர்கள் விரும்பி வந்து செல்லும் இடம் இது.

8 வயது சிறுமியை  மொத்தமாக 8 பேர் சேர்ந்து... 4 தாத்தாக்கள், 2 சிறுவர்கள் - ஷாக் !

டைகர் லீப்பிங் கோர்ஜ் (Tiger Leaping Gorge) : .

உலகின் அழகான கண்ணை கவரும் பள்ளத்தாக்குகள் !

டைகர் லீப்பிங் கோர்ஜ் தென்மேற்கு சீனாவில் யாங்சே ஆற்றில் அமைந்துள்ளது. சுமார் 15 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இந்த பள்ளத்தாக்கு ஆற்றில் இருந்து 12,434 அடி உயரத்தில் இருபுறமும் மலைகளால் சூழப்பட்ட பகுதிகளில் செல்கிறது. 

இது உலகின் மிக ஆழமான பள்ளத்தாக்கு என்று நம்பப்படுகிறது. பள்ளத்தாக்கின் குறுகிய இடம் வெறும் 82 அடி அகலம் மட்டுமே இருக்கும்.

பிஷ் ரிவர் பள்ளத்தாக்கு (Fish River Canyon) : .

உலகின் அழகான கண்ணை கவரும் பள்ளத்தாக்குகள் !

பிஷ் ரிவர் பள்ளத்தாக்கு நமீபியாவின் தெற்கில் அமைந்துள்ள நமீபியாவின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். இது ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய பள்ளத்தாக்கு. 

இது சுமார் 160 கிலோ மீட்டர் நீளம் மற்றும் 27 கிலோ மீட்டர் அகலம் கொண்டது. ஒருசில இடங்களில் கிட்டத்தட்ட 550 மீட்டர் ஆழம் கொண்டது.கிராண்ட் கேன்யன் (Grand Canyon) : .

கிராண்ட் கேன்யன் வடக்கு அரிசோனாவில் அமைந்துள்ள அமெரிக்காவின் சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். 

வெண்டைக்காய் பருப்பு சாதம் செய்வது எப்படி?

கொலராடோ நதியால் பல மில்லியன் ஆண்டுகளாக அரிக்கப்பட்ட இந்த பள்ளத்தாக்கு 446 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. இதன் ஆழம் 6093 அடி வரைக்கும் இருக்கும். 

ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக இப்பகுதியில் பூர்வீக அமெரிக்கர்கள் தொடர்ந்து வசித்து வருகின்றனர். அவர்கள் பள்ளத்தாக்கின் பல குகைகளுக்குள் குடியிருப்புகளை உருவாக்கியுள்ளனர்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings