மழை காலங்களில் வரும் ஈசல்கள் உருவாவது எப்படி?

0

ஈசல் பங்குனி, சித்திரை மாதங்களில் புற்றிலுள்ள ஒரு ஜோடி ஈசல் புழுக்கள் சிறப்பு தன்மை வாய்ந்த முட்டைகளை இடுகின்றன. அவை பொரிந்து ஈசல்கள் வெளி வருகின்றன.

மழை காலங்களில் வரும் ஈசல்கள் உருவாவது எப்படி?
அப்போது அவை மிகச்சிறியதாக நான்கு சிறகுகளுடன் வெண்மை நிறமாக இருக்கும். அவை புற்றிலுள்ள தாவர உணவை உண்டு. ஆடி, ஆவணி மாதங்களில் முழு வளர்ச்சியை அடைகின்றன. 

அதாவது இணை சேர்வதற்கான வாலிப பருவத்தை அடைகின்றன. அந்நிலையில் அவை பழுப்பு நிறமாக காணப்படும்.

மழை பெய்யும் ஆடி, ஆவணி, புரட்டாசி மாதங்களில் புற்றை விட்டு வெளியேறும். இவ்வாறு வெளியேறும் காலம் நாட்டுக்கு நாடு பருவகாலம், மழைபொழிவு ஆகியவற்றை பொறுத்து மாறுபடும்.

ஈசல்கள் புற்றை விட்டு வெளியேறி பறந்து பின் பூமியை அடைந்து தன் சிறகுகளை உதிர்த்து விட்டு தன் இணையை தேடி கண்டுபிடித்து பூமிக்குள் நுழைய வேண்டும் அதற்கு பூமி நல்ல ஈரப்பதத்துடன் இருக்க வேண்டும்.

கள்ள உறவு ஏன்… எப்படி… உருவாகிறது..? ரூசீகரமான தகவல்கள் !

ஈசல்கள் நான்கு இறகுகளை பெற்றிருக்கும். அந்த சிறகுகளை கொண்டு ஈசல்களால் காற்றை எதிர்கொண்டு பறக்க இயலாது. காற்று வீசாத அமைதியான நேரத்தில் தான் அவை புற்றை விட்டு வெளியேறும்.

புற்றிலிருந்து வெளியேறும் ஈசல்கள் புற்றின் அருகிலேயே விழுந்து ஒரு புது புற்றை உண்டாக்குமானால் இடநெருக்கடி, உணவு போட்டி ஆகியவை ஏற்படும்.

ஆகவே தான் அவை பறந்து சென்று தூரத்தில் இறங்கி புற்றை உண்டாக்க முயல்கின்றன.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)