நயாகராவின் ஓட்டத்தை நிறுத்திய அமெரிக்க ராணுவம் !

0

1931 மற்றும் 1954 ஆம் ஆண்டுகளில் மிகப்பெரிய பாறைச் சரிவுகள் நயாகரா நீர்வீழ்ச்சியில் ஏற்பட்டன. சரிந்த ஒரு பாறையின் அளவு மட்டும் சுமார் 1,85,000 டன். 1965 ல் உள்ளூர் பத்திரிகை ஒன்றில் 

நயாகராவின் ஓட்டத்தை நிறுத்திய அமெரிக்க ராணுவம் !
நயாகராவில் சரிந்து வீழ்ந்துள்ள பாறைகளை அகற்றாவிடில், நயாகரா நீர்வீழ்ச்சியின் ஓட்டம் முற்றிலும் நின்று விடும். என்று தலையங்கம் வெளி வந்தது.

1969 ல் அமெரிக்க அரசு இந்நீர்வீழ்ச்சியின் சரிந்து வீழ்ந்துள்ள பாறைகளை அகற்றி சுத்தம் செய்து.. அதனை பலப்படுத்த யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆர்மி கார்ப் ஆஃப் இன்ஜினியர்கள் என்ற ராணுவ அமைப்பிடம் பொறுப்பை ஒப்படைத்தது.

மார்பகங்களை பெரிதாக்கும் யோகாசனங்கள் ! #Yogasanas 

பனியுகத்தின் மரணத்தில் ஜனித்த குழந்தை : .

நயாகரா நீர்வீழ்ச்சி மிகவும் இளமையானது. சுமார் 12000 ஆண்டுகளுக்கு முன்பு பனியுகம் முடிவடைந்த இறுதி கட்டத்தில்.. அபரிமிதமான பனிக்கட்டிகள் உருகி.. 

ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் உருவான நீரானது கனடாவின் வழியாக..பிரவாகமாக ஓடிவந்து நியூயார்க் லேவிஸ்டன் பகுதியில் உள்ள பாறை முகட்டில் இருந்து நேராக கீழ் நோக்கி ஆக்ரோஷமாக விழுந்து அமெரிக்காவில் நுழைகிறது. 

பிரவாகமெடுத்து ஆக்ரோஷமாக விழும் நீருடன்.. குளிர் காலத்தில் சேர்ந்து விழும் பனிக்கட்டிகள்.. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பாறைகளை உடைத்து சிதைத்து. சிறிய நீர் வீழ்ச்சியாக இருந்தது. 

சுமார் 11 கி.மீ நீளத்திற்கு பாறைகளை அரித்துள்ளதாக கணக்கிடப் பட்டுள்ளது.

சுத்தமாக துடைத்து கழுவி : .

நயாகராவின் ஓட்டத்தை நிறுத்திய அமெரிக்க ராணுவம் !
நீர் வீழ்ச்சியின் அடியில் குவிந்துள்ள பாறைகளை அகற்றி, தளர்வான பாறைகளை நீக்கி பலப்படுத்த வேண்டும் என்றால், வீழும் நீரை சுத்தமாக நிறுத்த வேண்டும். 

எனவே பாறை உச்சிக்கு நீர் வரும் வழியை தடுத்து, சுமார் 27,800 டன் எடையுள்ள பாறைகளை பயன்படுத்தி, 600 அடி நீளமுள்ள ஒரு அணை கட்டப்பட்டது.

தற்காலிக அணை..

அதன் மூலம் அந்த நீர் கனடாவின் எல்லையில் இருக்கும் ஹார்ஸ் ஷூ நீர்வீழ்ச்சிக்கு திருப்பி விடப்பட்டது.

முதுகு வலியை குணமாக்கும் மர்ஜரி ஆசனம் !

ஹார்ஸ் ஷூ நீர்வீழ்ச்சி.. கனடா.

சுமார் ஆறு மாத காலம் ராணுவத்தினரது அயராத உழைப்பால் அனைத்து பாறைகளும் அகற்றப்பட்டு, மேலும் விழுந்து விடும் நிலையில் இருந்த பாறைகளும் வெடி வைத்து தகர்க்கப்பட்டன. 

தொழில்நுட்ப வல்லுநர்களது உதவியால். உச்சியில் உள்ள பாறைகள் பலப்படுத்தப்பட்டு, நீர் தடத்தில் சிறு சிறு தடுப்புகள் அமைக்கப்பட்டு நீரின் வேகம் குறைக்கப்பட்டது. 

மேலும் நீர் மின்சாரத்திற் கென்று தனியாக நீர் பிரித்து அனுப்பப் பட்டதால், தற்போது பாறைகள் சிதைவது குறைந்துள்ளது..

நீரில்லாத நயாகரா…

நயாகராவின் ஓட்டத்தை நிறுத்திய அமெரிக்க ராணுவம் !

இதை காண பொதுமக்கள் ஆர்வம் காட்டியதால், தற்காலிக அணை உடைக்கப்பட்டு, சுமார் 2000 பார்வையாளர்கள் முன்னிலையில், மீண்டும் நீர் தனது பழைய பாதைக்கு திருப்பி விடப்பட்டது.

உங்கள் மார்பகத்தை பெரிதாக்க எலுமிச்சை அத்தியாவசிய எண்ணெய் !

கொசுறு..

இந்த நீர் வீழ்ச்சியின் ஆக்ரோஷம் பலம் இரண்டையும் அப்பகுதியில் வாழ்ந்த ஆதி குடிகளுக்கு மட்டுமே தெரியும். 

1678 ல் பிரெஞ்சு போதகர் லூயிஸ் ஹென்னபின் என்பவர் தான் முதலில் இதைப் பார்த்து.. பிரான்ஸ் திரும்பியதும் இதன் பிரம்மாண்டத்தை புத்தகத்தில் எழுதிய பின், மேற்குலகிற்கு இது பற்றி தெரிய வந்தது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings