ஜினிகாந்த்நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜெயிலர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த், நெல்சன் இயத்தில் வெளியான பீஸ்ட் திரைப்படம் கடும் விமர்சனங்களை பெற்ற நிலையில்
அவருடன் இணைய வேண்டாம் என பலர் அறிவுறுத்தி யதாகவும், தானும் தயாரிப்பு நிறுவனமும் அவர் மீது நம்பிக்கை வைத்திருப்பதாக கூறினார்.
ஹுக்கும் பாடலை முதலில் பார்த்தபோது தரமா இருக்கு ஆனால் அதில் இருக்கும் சூப்பர் ஸ்டார் வார்த்தையை நீக்குமாறு தெரிவித்தேன்.
சூப்பர் ஸ்டார் தலைப்பு என்னைக்குமே தொல்லை தான்.முதல்முறை சூப்பர் ஸ்டார் பட்டத்தை ஏற்க மறுத்த போது ரஜினி பயப்படுவதாக சிலர் கருதியதாகவும், தான் கடவுளுக்கும் நல்ல மனிதர்களுக்கு மட்டுமே பயப்படுவேன் என்று கூறினார்.
காலிஃப்ளவர் மசாலா தோசை செய்வது எப்படி?
தனது பாணியில் காக்கா, கழுகு கதை ஒன்றை கூறிய ரஜினி, குறைக்காத நாயும் இல்ல, குறை பேசாத வாயும் இல்ல என்ற பஞ்ச் வசனத்தோடு நம்ம வேலைய பாத்துட்டு போய்கிட்டு இருக்கணும் என்றார்.
வழக்கம் போல் ரஜினி பேச்சில் உற்சாகமும், நகைச்சுவையும் கலந்திருந்ததால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி யடைந்தனர்.


Thanks for Your Comments