பெருமையாக சொல்கிறாள் it's my vagina... கட்டாயம் பகிர வேண்டியது !

0

ஒரு பெண்ணுறுப்பின் புகைப்படம் அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியர்கள் இடையில் பரவலாக பரப்பப்படுகிறது, விடலைக் குறுகுறு ஆர்வம் அது. 

பெருமையாக சொல்கிறாள் it's my vagina... கட்டாயம் பகிர வேண்டியது !
பெண்ணுறுப்பிற்கு உரியவளும் அதே பள்ளியில் தான் படிக்கிறாள். ஒரு நிலையில் அப்புகைப்படம் ஆசிரியர்கள் வரை தெரிய வருகிறது. அனைவருக்கும் இது யாருடைய புகைப்படம் என்றும் தெரிகிறது. 

அவள் ரகசியமாக வைத்திருந்த புகைப்படம் வெளியில் கசிந்தது குறித்து அதிர்ச்சிக்கு உள்ளாகிறாள். அதற்கு காரணம் தன்னுடைய தோழி தான் என்றறிந்து மேலும் மனக்கசப்பு கொள்கிறாள். 

தன் பெண்ணுறுப்பை அனைவரும் பார்த்து விட்டதை அவமானமாகக் கருதத் துவங்குகிறாள். இந்த தலை குனிவிலிருந்து மீள வழி தெரியாமல் சக மாணவர்களின் கேலி கிண்டலை சமாளிக்கத் தெரியாமல் திணறி நிற்கிறாள்.

இப்படி ஒரு புகைப்படம் பகிரப்படுவது குறித்து தலைமை ஆசிரியர் எல்லா மாணவர்களையும் கண்டிப்பதற்காக அழைக்கிறார். யாருடைய புகைப்படம் இது என்று கேட்கிறார். 

எல்லோரும் அது ரூபியுடைய பெண்ணுறுப்பு என்று கேலியாக சிரித்தபடி சொல்கிறார்கள். ரூபி தலை கவிழ்ந்து அமர்ந்திருக்கிறாள். அங்கு ஒரு மனம் குற்ற உணர்ச்சியோடு விரிவடைகிறது. 

புகைப்படத்தை முதலில் பரப்பிய தோழியின் மனம் அது. அவள் எழுகிறாள். எழுந்து., இது ரூபியுடைய பெண்ணுறுப்பு அல்ல என்னுடையது என்கிறாள். it's my vagina அவளைத் தொடர்ந்து இன்னொரு பெண் எழுகிறாள் it's my vagina.

இன்னொருத்தி

இன்னொருத்தி

இன்னொருத்தி

என்று இந்த மனவிரிவு பரவி அரங்கம் முழுக்க மாணவிகள் மட்டுமன்றி மாணவர்கள் முதற்கொண்டு ஒருமித்து சொல்லத் துவங்குகிறார்கள் it's my vagina எல்லோரும் சொல்லி முடித்த பிறகு இறுதியாக எழுகிறாள் ரூபி, 

ஆரோக்கியம் நிறைந்த கடலை மாவு அடை செய்வது எப்படி?

தன் தோழியிடம் தன் கரங்களைத் தருகிறாள் அவள் பற்றிக் கொள்கிறாள். குனிந்திருந்த தலையை நிமிர்த்திச் சொல்கிறாள் பெருமையாக it's my vagina.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(30)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !