அதிக சம்பளம் வாங்கும் பெண்... யார் தெரியுமா?

0

இந்திய ஐடி மற்றும் FMCG நிறுவனங்களின் சிஇஓ-க்களின் சம்பளம் பார்த்து வாயை பிளக்கும் பலருக்கும் தமிழ்நாட்டை சேர்ந்த அவர் இவ்வளவு பெரிய தொகையை சம்பாதிக்கிறார் என்பது ஆச்சரியமாக இருக்கும். 

அதிக சம்பளம் வாங்கும் பெண்... யார் தெரியுமா?
மாத சம்பளக் காரர்களில் பலர் இந்த வருட சம்பள உயர்வுக்காக காத்திருக்கும் வேளையிலும், பலர் வாங்கிய சம்பள உயர்வு போதவில்லை என புலம்பிக் கொண்டு இருக்கின்றனர்.

தென்னிந்தியாவின் மிகப்பெரிய மீடியா மற்றும் தொலைக்காட்சி நிறுவனமாக இருக்கும் சன் டிவி நெட்வொர்க்-ன் நிறுவனர் மற்றும் உயர்மட்ட நிர்வாக அதிகாரியாக இருக்கும் 

கலாநிதி மாறன் மற்றும் அவருடைய மனைவி காவேரி கலாநிதி ஆகியோர் ஒவ்வொரு வருடமும் ஒரே அளவிலான சம்பளத்தை பெற்று வருகின்றனர்.

உதடுகள், பற்களை பராமரித்து சிறப்பாக அழகுப் படுத்திக் கொள்ள !

இப்படி 2012 ஆம் நிதியாண்டில் கலாநிதி மாறன் 57 கோடி ரூபாயை சம்பளமாக பெற்ற நிலையில் காவேரி கலாநிதி-யும் 57 கோடி ரூபாயை சம்பளமாக பெற்றார். 

இதே போல் 2021 ஆம் நிதியாண்டில் 87.50 கோடி ரூபாயை சம்பளமாக பெற்றுள்ளனர். இதன் மூலம் 2012 முதல் 2021 வரையிலான கால கட்டத்தில் கணவன் - மனைவி ஜோடி சுமார் 1470 கோடி ரூபாயை சம்பளமாக பெற்றுள்ளனர்.

இதன் மூலம் இந்தியாவில் அதிகம் சம்பளம் வாங்கும் பெண் உயர் அதிகாரியாக உள்ளார் காவேரி கலாநிதி. 

கடந்த 10 வருடத்தில் காவேரி கலாநிதி மாறன் சுமார் 735 கோடி ரூபாயை சம்பளமாக பெற்றுள்ள நிலையில் ஒரு மாதத்திற்கு சராசரியாக 6.1 கோடி ரூபாயை சம்பளமாக பெற்றுள்ளார்.

அதிக சம்பளம் வாங்கும் பெண்... யார் தெரியுமா?

சமீபத்தில் கலாநிதி மாறன் - காவேரி கலாநிதி மாறன் அவர்களின் மகள் காவ்யாவும் சன் டிவி நெட்வொர்க் நிர்வாக பணிகளிலும், ஐபிஎல் போட்டிகளின் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் நிர்வாக பணிகளிலும் ஈடுப்பட்டு வருகிறார். 

இதன் வாயிலாக காவ்யா தர்போது வருடத்திற்கு 1.09 கோடி ரூபாய் சம்பளமாக பெற்று வருகிறார். 1993ல் கலாநிதி மாறன் துவங்கிய சன் டிவி நெட்வொர்க் இன்று 33 டிவி சேனல்கள் உடன் தென்னிந்திய மீடியா உலகை அசத்தி வருகிறது. 

சன் டிவி நெட்வொர்க் கீழ் பல வர்த்தகம் உள்ளது, இந்நிறுவனத்தில் மாறன் குடும்பம் சுமார் 75 சதவீத பங்குகளை வைத்திருக்கும் வேளையில் நிறுவன முகலீட்டாளர்கள் 12 சதவீத பங்குகளை வைத்துள்ளனர்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)