குப்பை அள்ளும் பெண்களுக்கு ரூ.10 கோடி... இருப்பினும் பணியை தொடருவோம் !

1

லாட்டரியில் பணம் வெல்வது ஒன்றும் சாதாரண விஷயம் அல்ல. தமிழ்நாட்டில், லாட்டரி தடை செய்யப் பட்டாலும், கேரளாவில் அது தொடர்ந்து விற்கப்பட்டு வருகிறது.

குப்பை அள்ளும் பெண்களுக்கு ரூ.10 கோடி... இருப்பினும் பணியை தொடருவோம் !
லாட்டரியில் பணம் வென்று வாழ்க்கையே தலைகீழாக மாறிய கதை எல்லாம் கேரளாவில் நடந்துள்ளது. அது போன்ற ஒன்று தான் தற்போதும் கேரளாவில் நடந்துள்ளது.

கராச்சி அல்வா செய்வது எப்படி?

250 ரூபாய் பணம் இல்லாத சூழலில், 11 பெண்கள் ஒன்று சேர்ந்து லாட்டரியில் டிக்கெட் வாங்கியுள்ளனர். தற்போது இவர்கள் 10 கோடி ரூபாய் பணம் வென்ற சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. 

ஹரிதா கர்ம சேனா அமைப்பில் பணியாற்றி வரும் இவர்கள் முதல் பரிசை வென்றுள்ளனர். மலப்புரம் மாவட்டம் பரப்பனங்காடி நகராட்சியில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று குப்பைகளை சேகரித்து, அதை அகற்றுவதே இவர்களின் பணியாக இருந்திருக்கிறது. 

இதில், வரும் பணத்தை வைத்து வாழ்க்கையை நடத்தி வந்துள்ளனர். இதில், ஒன்பது பேர் 25 ரூபாய் பணமும் இரண்டு பேர் தலா 12.5 ரூபாய் பணத்தையும் சேர்த்து லாட்டரியில் டிக்கெட் வாங்கினர்.

லாட்டரியில் 10 கோடி ரூபாய் பணத்தை வென்ற போதிலும் குப்பைகளை அள்ளும் தங்களின் பணியை தொடர்வோம் என பெண்கள் தெரிவித்துள்ளனர். 

அனைவரும் ஒன்று சேர்ந்ததால் மட்டுமே லாட்டரியை வெல்ல முடிந்தது என்றும் தொடர்ந்து ஒன்றாகவே பணியாற்றுவோம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

ஹரிதா கர்ம சேனா அமைப்பை சேர்ந்த பி. பார்வதி, கே. லீலா, எம்.பி. ராதா, எம். ஷீஜா, கே. சந்திரிகா, இ. பிந்து, கார்த்தியாயினி, கே. ஷோபா, சி. பேபி, சி. குட்டிமாலு மற்றும் பி. லட்சுமி ஆகியோர் கூட்டாக சேர்ந்து லாட்டரியில் வென்றுள்ளனர். 

(getCard) #type=(post) #title=(You might Like)

10 கோடி ரூபாய் பணத்தை வென்றது குறித்து பார்வதி கூறுகையில், அனைவரும் பணத்தை புரட்டி ஒன்று சேர்ந்து வாங்கிய 4-வது டிக்கெட் என்பதால் எந்த நம்பிக்கையும் இல்லை. 

மேலும், வென்ற டிக்கெட்டை பாலக்காட்டில் உள்ள ஒரு ஏஜென்சி விற்றுள்ளதாக கேள்விப்பட்ட போது, ​​​​இது மற்றொரு நஷ்டம் என்று நாங்கள் நினைத்தோம். 

இன்று மதியம் நான் வேலை முடிந்து வீடு திரும்பிய போது, ​​எங்கள் டிக்கெட் பரிசை வென்றதாக ஒரு நபர் போன் செய்து சொன்னார் என்றார்.

லாட்டரியில் வென்ற பணத்தின் மூலம் வீடு கட்டப் போவதாகவும், குழந்தைகளை படிக்க வைக்க செலவழிக்க போவதாகவும் கடனை அடைக்க போவதாக அந்த பெண்கள் தெரிவித்துள்ளனர். 

பேபியிடமும் குட்டிமாளுவிடமும் 25 ரூபாய் பணம் இல்லாததால் தலா 12.5 ரூபாயை சேர்த்து, தங்களின் பங்கை வழங்கி யுள்ளனர். இந்த பெண்களில் பலர் கடுமையான நிதி நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர். 

ஊர்வசியின் ஹாட் வீடியோ... டிரெஸ் போடாமலே இருந்திருக்கலாம் !

சிலருக்கு பேருந்தில் செல்ல பணம் இல்லாததால் வீட்டிலிருந்து நகராட்சிக்கு நடந்தே செல்கின்றனர். வெற்றி பெற்ற டிக்கெட்டை பஞ்சாப் நேஷனல் வங்கியின் பரப்பனங்காடி கிளையில் பெண்கள் வழங்கியுள்ளனர். 

இது குறித்து பரப்பனங்காடி நகராட்சித் தலைவர் உஸ்மான் கூறுகையில், பெண்கள் வருமானம் ஈட்ட முடியாமல் சிரமப்பட்டாலும், நேர்மையாக பணியில் ஈடுபட்டதால் தகுதியான அணிக்கு அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது என்றார்.

Tags:

Post a Comment

1Comments

Thanks for Your Comments

  1. மாரியப்பன்29 July, 2023 15:58

    இனி ராஜ வாழ்க்கை தான்

    ReplyDelete
Post a Comment
Privacy and cookie settings