ஸ்கூட்டியில் முத்தமிட்டு கொண்ட இளசுகள்... இங்கிலீஷ் படம் மாதிரி !

0

டூவீலர்கள்  என்பது 2 பேர் மட்டுமே பயணிப்பதற்கானது. ஆனால் இந்தியாவில் பலரும் இதனை பொருட்படுத்துவது கிடையாது. 

ஸ்கூட்டியில் முத்தமிட்டு கொண்ட இளசுகள்... இங்கிலீஷ் படம் மாதிரி !
சாலை விபத்து அபாயங்களை கொஞ்சம் கூட சட்டை செய்யாமல், 3 பேர், 4 பேர் என டூவீலர்களில் பயணம் செய்கின்றனர். அத்துடன் ஹெல்மெட்களையும் அணிவதில்லை. 

சாலை விபத்துக்களால் அதிக உயிர்களை பறிகொடுக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருப்பதற்கு இது மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக உள்ளது. 

இப்படிப்பட்ட ஒரு சூழலில் இந்தியாவில் மோசமான புதிய கலாச்சாரம் ஒன்று வேகமாக பரவி வருகிறது. 

டூவீலர்களில் பயணம் செய்யும் போது முத்தம் இட்டு கொள்வதும், கட்டியணைத்து கொள்வதும் தான் அந்த மோசமான கலாச்சாரம். 

சமீபத்தில் பைக் ஒன்றில், இரண்டு இளம்பெண்கள் உதட்டோடு உதடு சேர்த்து முத்தமிட்டு கொண்டு பயணம் செய்ததை நம்மால் காண முடிந்தது. இச்சம்பவம் தமிழ்நாட்டில் நடைபெற்றதாக கூறப்படுகிறது. 

அந்த வைரல் வீடியோ ஏற்படுத்திய பரபரப்பு அடங்குவதற்குள், தற்போது மேலும் ஒரு மோசமான சம்பவம் நடைபெற்றுள்ளது. 

ஆம், நட்ட நடு ரோட்டில் ஸ்கூட்டர் ஓடிக்கொண்டிருந்த போதே, 2 இளசுகள் லிப் கிஸ் அடித்துள்ளனர். இதற்கே அதிர்ச்சியாகி விட வேண்டாம். இந்த சம்பவத்தில் இன்னொரு பேரதிர்ச்சி காத்திருக்கிறது. 

லிப் கிஸ் அடித்த இருவரும் ஆண்கள் என்பது தான் அந்த பேரதிர்ச்சி. சமூக வலை தளங்களில் இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. 

பேலியோ அவியல் செய்வது எப்படி?

இந்த வீடியோவில் 3 இளைஞர்கள் ஒரு ஸ்கூட்டரில் பயணம் செய்வதை நம்மால் பார்க்க முடிகிறது. அதில் ஒருவர் ஸ்கூட்டரை ஓட்ட, மற்ற 2 இளைஞர்களும் உதட்டோடு உதடு சேர்த்து முத்தமிட்டு கொள்கின்றனர். 

ஸ்கூட்டியில் முத்தமிட்டு கொண்ட இளசுகள்... இங்கிலீஷ் படம் மாதிரி !

பின்னால் ஒரு வாகனத்தில் வந்த நபர் இதனை வீடியோ எடுக்க, அது சமூக வலை தளங்களில் தற்போது வைரல் ஆகி வருகிறது. இந்த சம்பவம் உத்தர பிரதேச மாநிலம் ராம்பூர் பகுதியில் நடைபெற்றதாக கூறப்படுகிறது. 

இதில், முத்தமிட்டு கொண்ட 2 இளைஞர்களும் ஹெல்மெட் அணியவில்லை. ஸ்கூட்டரை ஓட்டிய நபர் ஹெல்மெட் அணிந்திருந்தாரா? என்பது உறுதியாக தெரியவில்லை. 

சமூக வலை தளங்களில் இந்த செயலுக்கு கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில், சம்பந்தப்பட்ட 3 பேரையும் காவல் துறை அதிகாரிகள் தீவிரமாக தேட தொடங்கி யுள்ளனர். 

எனவே அவர்கள் விரைவில் பிடிபடுவார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது.

Relax Please

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)