ஒடிசா ரயில் விபத்திற்கு உண்மையான காரணம் என்ன? முழு விபரம் !

0

ஒடிசா மாநிலத்தில் நடந்த ரயில் விபத்தில் இதுவரை மொத்தம் 288 பேர் உயிரிழந்தனர். 900-திற்கும் அதிகமான மக்கள் படுகாயங்களுடன் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஒடிசா ரயில் விபத்திற்கு உண்மையான காரணம் என்ன? முழு விபரம் !
இவ்வளவு பெரிய விபத்து எப்படி நடந்தது? இதற்கான காரணம் என்ன? தொழில்நுட்ப ரீதியாக இந்த விபத்து நடக்க என்ன சாத்தியம்? 

ஒடிசா மாநிலம் பாலசூர் அருகே நேற்று வெள்ளிக்கிழமை இரவு 7 மணி அளவில் பெங்களூரு விலிருந்து ஹவுரா வரை செல்லும் சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலும், 

ஹைதராபாத் பிரியாணி செய்முறை !

அதே நேரம் சாலிமரிலிருந்து சென்னை வரும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலும் ஒரே நேரத்தில் எதிரில் திசையில் கடக்க வந்தது அதே நேரம் அப்பகுதி வழியாக ஒரு சரக்கு ரயிலுக்கும் செல்ல அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் பெங்களூரு ஹவுரா சூப்பர் பாஸ்ட் ரயில் பாலசூர் ரயில் நிலையம் அருகே வரும்போது எதிர்பாராத விதமாக அதன் பெட்டிகள் தடம் புரண்டது. 

இந்தப் பெட்டிகள் தடம் புரண்டதில் பக்கத்து டிராக்கல் சென்று கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் மீது தடம் புரண்ட பெட்டிகள் மோதியது.

இதில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலும் தடம்புரண்டு அருகே சென்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதியது. இந்த சம்பவத்தில் மூன்று ரயில்களும் ஒன்றோடு ஒன்று மோதியதில் மிகப்பெரிய விபத்து ஏற்பட்டது. 

இந்த விபத்து நடந்த பின்பு அப்பகுதியில் மீட்பு பணிகள் நடந்தது. இதுவரை 288 பேர் உயிரிழந்துள்ள தாகவும் 900 பேர் படுகாயங்களுடன் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன.

இந்தியாவில் ரயில்கள் விபத்தில் சிக்காமல் இருக்க கவச் என்ற ஒரு பாதுகாப்பு கருவி பொருத்தப் பட்டுள்ளது. 

இந்த கவச் என்ற கருவி ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதாமல் பாதுகாக்கும் என இந்திய ரயில்வேயால் அறிவிக்கப் பட்டிருந்தது. 

இந்த கருவி இருந்த போதும் இந்த ரயில்கள் விபத்தில் சிக்கியது எப்படி என்ற கேள்வி பலருக்கு எழுகிறது.விபத்து நடந்த இடத்தில் கவச் தொழிற்நுட்பம் இல்லை என்பதும் ஒரு முக்கியமான தகவல்.

ஆம்பூர் மட்டன் பிரியாணி செய்முறை !

விபத்திற்கான காரணத்தைத் தெரிந்து கொள்ளும் முன் கவச் என்ற தொழிற்நுட்பத்தை பற்றி நாம் முழுவதும் தெரிந்து கொள்ள வேண்டும். 

கவச் என்ற சிஸ்டம் பொருத்தப்பட்ட ரயிலில் ஒரே டிராக்கில் 2 ரயில்கள் சென்று கொண்டிருந்தால் அந்த ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதாமல் இருக்கத் 

தானாக ரயில்கள் தன்னையே பிரேக் செய்து கொள்ளும் தொழில்நுட்பம் தான் இந்த கவச். இதனால் நேருக்கு நேர் ரயில்கள் மோதாமல் இருக்கும்.

இந்த தொழில்நுட்பம் தற்போது இந்தியாவில் படிப்படியாக ஒவ்வொரு ரயில்களிலும் பொருத்தப்பட்டு வருகிறது. ஆனால் குறிப்பிட்ட சம்பவத்தில் கவச் தொழிற்நுட்பம் இந்த விபத்தைத் தடுத்திருக்க முடியாது. 

கவச் என்பது நேரடியாக ஒரு ரயில் மற்றொரு ரயிலுடன் மோதுவதைத் தவிர்க்கும் படி வடிவமைக்கப் பட்டது தான். ஆனால் நடந்த விபத்து பெட்டிகள் தடம் புரண்டதால் ஏற்பட்டதாகும். 

ஒரு ரயிலின் பெட்டி தடம் புரண்டு அது மற்றொரு ரயிலின் மீது மோதி இப்படியாக வரிசையாக அடுத்தடுத்து ரயில் பெட்டிகளுடன் மோதியதால் 3 ரயில்கள் விபத்தில் சிக்கின. 

இதில் ஏராளமான உயிர்கள் சேதம் அடைந்தன இதனால் ஏராளமான மக்கள் பாதிக்கப் பட்டனர்.

சரி இந்த ரயில் தடம் புரண்டது எப்படி என்று பலருக்குக் கேள்விகள் வரும் ரயில் பெட்டிகள் தடம் புரள மொத்தம் மூன்று காரணங்கள் மட்டுமே இருக்க முடியும்.

முதல் காரணம் ரயில் தண்டவாளத்தைக் கடக்கும் போது தண்டவாளத்தில் வேறு ஏதாவது பொருட்கள் பெரிய அளவிலிருந்தால் அது ரயிலைத் தடம் புரளச் செய்து விடும்.

சோயா பிரியாணி செய்முறை !

இரண்டாவது காரணம் ரயிலின் தண்டவாளத்தில் ஏதாவது மெக்கானிக்கல் பிரச்சனை அதாவது தண்டவாளத்தைத் தரையுடன் சேர்த்து வைப்பதில் இருக்கும் ஏதோ ஒரு ஸ்க்ரூ லூசாக 

அல்லது பிரச்சினையில் இருந்திருக்க வேண்டும் அதில் ரயில்வே வேகமாகச் செல்லும் போது தண்டவாளம் தரையிலிருந்து பிரிந்து இது போன்று ரயில் பெட்டிகள் தடம் புரள வாய்ப்பு இருக்கிறது.

கடைசி காரணம் ரயில்களின் வீல்களில் ஏதாவது பிரச்சனை இருந்தால் அதன் மூலமாகக் கூட ரயில் தடம் புரள வாய்ப்பு உள்ளது. 

குறிப்பிட்ட இந்த விபத்து நம் மூன்றில் ஏதோ ஒரு காரணத்தால் தான் நடைபெற்று இருக்கும் எனக் கருதப்படுகிறது. ஆனால் எது உண்மையான காரணம் என்ன என்பது இதுவரை தெரியவில்லை. 

ஒடிசா ரயில் விபத்திற்கு உண்மையான காரணம் என்ன? முழு விபரம் !

இதற்கான விசாரணை நடந்து வருகிறது இந்த விசாரணை முடிவில் இந்த ரயில் விபத்துக்கான காரணம் தெரிய வரும்.

தண்டவாளத்தில் ஏதாவது பொருட்கள் இருந்து அதன் மூலம் ரயில் விபத்து ஏற்பட்டிருந்தால் இது நிச்சயம் சதி வேலையாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. 

கப்ஸா ரெசிபி தயாரிப்பது - அரபி சாப்பாடு செய்முறை !

மற்ற எந்த காரணமாக இருந்தாலும் இது ரயில்வே துறையின் கவனக் குறைவால் ஏற்பட்ட விபத்து என்றே கருத்தில் கொள்ள முடியும். 

இந்த விசாரணைக்கு பிறகான வரும் முடிவுகளைப் பொறுத்தே இனி இது போன்ற விபத்துக்கள் நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என ரயில்வே துறையை நிர்வாகம் முடிவெடுக்கும்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)