சுங்கச்சாவடி புதிய விதிகள்... மத்திய அமைச்சர் அறிவிப்பு !

0

இந்தியாவில் 2024ம் ஆண்டுக்குள் 26 பசுமை விரைவுச் சாலைகள் அமைக்கப்படும் என்றும் இதனை தொடர்ந்து சுங்கவரிக்கான புதிய விதிகள் வெளியிடப்படும் என்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார்.

சுங்கச்சாவடி புதிய விதிகள்... மத்திய அமைச்சர் அறிவிப்பு !
தேசிய நெடுஞ்சாலை பயணங்களில் பாஸ்ட் டேக் முறை அறிமுகப் படுத்தப்பட்டு அமலில் இருந்து வருகிறது. இதில் இன்னும் பல்வேறு குழப்பங்கள் நீடித்து வருகின்றன. 

இந்நிலையில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். 2024ம் ஆண்டுக்கு முன் இந்தியாவில் 26 பசுமை விரைவுச் சாலைகள் கட்டப்படும். 

அதே நேரத்தில் சுங்க வரிக்கான புதிய விதிகள் வெளியிடப்படும். தற்போது அதற்கான திட்டமிடல் நடத்தப்பட்டு வருகிறது.

இனி வரும் நாட்களில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சுங்கவரி வசூலிப்பது குறித்து கவனம் செலுத்தப்படும். கணக்கில் இருந்து நேரடியாக பணம் கழிக்கப்படும். 

இதுவரை சுங்கச்சாவடி கட்டணம் செலுத்தாதவர்களுக்கு தண்டனை வழங்குவதற்கான ஏற்பாடு இல்லை. கட்டணம் தொடர்பான மசோதாவை கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. 

தற்போது சுங்கச் சாவடிகளில் எளிதாக கட்டணம் செலுத்தும் வகையில் மத்திய அரசு Fastagஐ அறிமுகம் செய்தது. இதன் மூலம் மிக எளிதாக ஆன்லைன் மூலம் கட்டணத்தை செலுத்தி விடலாம். 
பெண்கள் தலை சீவும் போது ஏற்படும் சிக்கல் !

மணிக்கணக்கில் சுங்கச் சாவடிகளில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. பேடிஎம் வாலட்டில் பணம் இருந்தால் அல்லது பாஸ்டேக் அக்கவுண்ட்டில் பணம் இருந்தால் உடனடியாக ஆன்லைனில் செலுத்தலாம். 

இதுவரை பாஸ்டேக் பொருத்தாமல் இருந்தால், பேடிஎம் மூலம் எளிமையாக பேடிஎம் அக்கவுண்டை நிறுவி விடலாம் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)