மத்திய அரசு ஊழியர்களுக்கு 18 மாதங்களாக நிலுவையில் உள்ள டிஏ நிலுவைத் தொகை விரைவில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
7வது ஊதியக்குழுவின் படி ஆண்டுக்கு இரண்டு முறை அகவிலைப்படி உயர்த்தப்படும். அந்த வகையில் ஜனவரி - ஜூன் மற்றும் ஜூலை - டிசம்பர் என்று இரண்டு கட்டமாக இந்த உயர்வு செய்யப்படும்.
வெப்பம் உண்டாக்கும் கருவி !
அடுத்த கட்ட அகவிலைப்படி உயர்வு பெரும்பாலும் ஜூலை மாதம் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இந்த முறை அகவிலைப்படி பொதுவாக 3 - 6 சதவிகிதம் உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
அதேபோல் 18 மாதங்களாக நிலுவையில் உள்ள டிஏ நிலுவைத் தொகை வழங்கப்படும். இந்த டிஏ நிலுவை காரணமாக சுமார் ஒரு கோடி ஊழியர்கள் மற்றும் ஓய்வூதிய தாரர்கள் பயன் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
18 மாதங்களாக நிலுவையில் உள்ள டிஏ நிலுவைத் தொகை எவ்வளவு இருக்கும் என்ற குழப்பம் பலருக்கும் ஏற்பட்டு உள்ளது.
இதை எப்படி கணக்கிடுவது என்று பார்க்கலாம். இதற்கு முதலில் உங்கள் அடிப்படை வருமானத்தில் அகவிலைப்படி எவ்வளவு என்று கணக்கிட வேண்டும்.
உங்கள் சம்பளத்தில் DA கணக்கிட, உங்கள் அடிப்படை சம்பளத்தை தற்போதைய) DA விகிதத்தால் பெருக்கி பின்னர் முடிவை 100 ஆல் வகுக்கவும்.
அதாவது உங்கள் அடிப்படை வருமானம் 29200 ரூபாய் என்னும் பட்சத்தில், DA கணக்கீடு பின்வருமாறு செய்ய முடியும்:
(42 x 29200) / 100 = 12264. உங்கள் அடிப்படை வருமானம் 29200 ஆக இருந்தால் ( பே மேட்ரிக்ஸ் நிலை 5). நீங்கள் சம்பாதிக்கும் DA தொகை ரூ. 12264.
லோ வோல்டேஜ் என்றால் என்ன?
அதாவது டிஏ தொகை 18 மாத அரியரோடு 220752 ரூபாயாக இருக்கும். இந்த தொகைதான் பெரும்பாலும் பேசிக் அரியர் தொகையாக ஊழியர்களுக்கு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அகவிலைப்படி உயர்வு: வருடா வருடம் விலைவாசி உயர்ந்து வருகிறது. விலைவாசிக்கு ஏற்றபடி எப்போதும் சம்பளமும் உயர வேண்டும்.
தனியாரில் இதற்காக வருடா வருடம் ஹைக் கொடுக்கப்படும். இதுவே அரசு நிறுவனங்களில் செய்தால் அதை அகவிலைப்படி உயர்வு என்பார்கள். ஒவ்வொரு ஆண்டும் பணவீக்கம் உயர்ந்து கொண்டே இருக்கும்.
பணவீக்கம் காரணமாக பொருட்களின் விலை உயரும். இந்த விலை உயர்வை சமாளிக்க மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி உயர்த்தப்படும்.
இந்த அகவிலைப்படி பொதுவாக 3 - 6 சதவிகிதம் உயர்த்தப்படும் என்பது குறிப்பிடத் தக்கது.
பிரிட்ஜ் பராமரிப்பது எப்படி? |
தமிழ்நாட்டில் சமீபத்தில் தான் அரசு ஊழியர் களுக்கான அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. 38 சதவீதத்தில் இருந்து 42 சதவீதமாக உயர்த்தப்பட்டது.
கர்நாடக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி விகிதத்தை 4% உயர்த்தி உள்ளது அம்மாநில அரசு. கர்நாடகா மாநிலத்தில் DA விகிதம் 31% இல் இருந்து 35% ஆக உயர்த்தப் பட்டுள்ளது. இது ஜனவரி 1, 2023 முதல் அமலுக்கு வந்துள்ளது.
Thanks for Your Comments