உயிரை பறிக்க 15 நிமிடம்... உலகின் மிக ஆபத்தான எறும்பு தெரியுமா?

0

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்ற பழமொழியைக் கேட்டதும் நினைவுக்கு வருவது எறும்புகள் தான். ஒரு சிறிய எறும்பு அதன் ஒரு கடியில் நம் ஒட்டு மொத்த நாளையும் எரிச்சல் மிகுந்ததாக மாற்றி விடும். 

உயிரை பறிக்க 15 நிமிடம்... உலகின் மிக ஆபத்தான எறும்பு தெரியுமா?
நம் வீட்டில் இருக்கும் சிறிய பூச்சிகளில் மிகவும் டேஞ்சரானவை எறும்புகள் தான். ஆனால் அந்த சித்தெறும்புகள் எல்லாம் ஜுஜுபி என சொல்ல வைக்கும் படியான பெரிய எறும்புகளை மரங்களில் காணலாம்.

காடுகளில் இன்னும் மோசமான பெரிய எறும்புகள் இருக்கும். மொத்தம் 12000 -க்கும் மேலான எறும்பு வகைகள் உலகில் இருக்கின்றன. இவற்றில் மிகவும் ஆபத்தானதாக கருதப்படுவது புல்டாக் எறும்பு தான். 

தக்காளி மீன் வறுவல் செய்வது எப்படி?

Myrmecia pyriformis என்பது இவற்றின் அறிவியல் பெயர்.இந்த எறும்புகளை ஆஸ்திரேலியாவின் கடற்கரைப் பகுதிகளில் காணலாம். இவைக் கடிக்கும் போது கொடுக்கு மற்றும் தாடையைப் பயன்படுத்தி அழுத்தமாக தாக்கும். 

உயிரை பறிக்க 15 நிமிடம்... உலகின் மிக ஆபத்தான எறும்பு தெரியுமா?

இந்த எறும்புகள் கடித்ததனால் மனித உயிரிழப்புகள் கூட நடந்திருக்கின்றன. இந்த எறும்பு மிகவும் முரட்டுத் தனமாகவும் பலமாகவும் கடிப்பதனால் இதற்கு புல்டாக் என்று பெயர் வந்தது. 

இந்த கோவக்கார குணாதீசியம் மனிதர்களையும் அச்சுறுத்துகிறது. புல்டாக் எறும்புகள் ஒரு குறிப்பிட்ட நேரத்துக்குள் நாம்மை மீண்டும் மீண்டு கடிக்கும். இதனால் அதிகப் படியான விஷம் உடலுக்குள் செல்லும். 

வெயில் காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள் !

ஒரு வளர்ந்த நபரின்  உயிரைப் பறிக்க புல்டாக் எறும்புகளுக்கு 15 நிமிடங்கள் போதும் எனக் கூறப்படுகிறது. ஒரு புல்டாக் எறும்பு 20 மில்லி மீட்டர் நீளம் இருக்கும். இதன் சராசரி எடை 0.015 கிராம். 21 நாட்கள் வரை உயிர் வாழும்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)