கார்களில் வைப்பர்களை தூக்கி வைத்திருப்பது ஏன்?

0

ஒரு காருக்கு விண்டுஷீல்டு வைப்பர்கள் மிகவும் முக்கியமான பாகங்களில் ஒன்றாக உள்ளன. குறிப்பாக மழை மற்றும் பனி காலங்களில் விண்டுஷீல்டு வைப்பர்கள் பழுது ஏற்படாமல் இயங்குவது மிகவும் அவசியமானது. 

கார்களில் வைப்பர்களை தூக்கி வைத்திருப்பது ஏன்?

இல்லா விட்டால் முன் பக்க விண்டுஷீல்டின் மீது மழை நீர் வடிந்தாலோ அல்லது பனி படர்ந்தாலோ, பாதுகாப்பாக காரை இயக்குவது சிரமமாகி விடும்.

ஆனால் விண்டுஷீல்டு வைப்பர்கள் இருந்தால், மழை அல்லது பனி என எந்த சூழலிலும், காரை பாதுகாப்பாக ஓட்ட முடியும். ஏனெனில் விண்டுஷீல்டின் மீது இருக்கும் மழை நீர் அல்லது பனியை வைப்பர்கள் துடைத்து விடும். 

எனவே விண்டுஷீல்டு வைப்பர்களை எப்போதும் சரியான முறையில் பராமரிப்பது மிகவும் அவசியமானது. 

இந்த சூழலில் வெளிப்புறங்களில் காரை பார்க்கிங் செய்திருக்கும் நேரங்களில், விண்டுஷீல்டு வைப்பர்களை உயர்த்தி வைப்பதை ஒரு சிலர் வாடிக்கையாக வைத்துள்ளனர். 

பார்க்கிங் செய்திருக்கும் போது வைப்பரை உயர்த்தி வைப்பதால், அதில் இருக்கும் ரப்பரின் ஆயுட்காலம் அதிகரிக்கும் என அவர்கள் காரணம் சொல்கின்றனர். 

இது குறித்த ஒரு சில விஷயங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கார்களில் வைப்பர்களை தூக்கி வைத்திருப்பது ஏன்?

தொழில்நுட்ப ரீதியாக பார்த்தால், பார்க்கிங் செய்திருக்கும் சமயங்களில் வைப்பரை உயர்த்தி வைப்பதால், ரப்பரின் மீது சேதத்தின் தாக்கம் குறைவதற்கான வாய்ப்புகள் இருக்கவே செய்கின்றன. 

ஆனால் அடிக்கடி உயர்த்தி வைப்பது பின்னர் மீண்டும் மடித்து வைத்து கொள்வது என செய்து கொண்டே இருந்தால், வைப்பரின் பாகங்கள் சேதமடைவ தற்கான வாய்ப்புகள் உள்ளன என்பதையும் மறுக்க முடியாது.

ஓரிரு நாள்களுக்கு அதிகமாக கார்களை நிறுத்தி வைக்க நேருமாயின் அதன் வைப்பார்கள் தூக்கி வைப்பது நல்லது. ஏனென்றால் காரின் மேலும் கண்ணாடிகளின் மேலும் தூசுகள் விழுந்து கொண்டே இருக்கும்.

மீண்டும் நாம் கார்களை இயக்க நேரும் சமயம் வெறும் துணி கொண்டு தூசுகளை துடைத்தோ, அல்லது வைப்பர்களை தெரியாமல் இயக்கினாலோ, 

கண்ணாடியின் மேல் படிந்துள்ள தூசுகள் உப்புத்தாள் என்ற எமரி பேப்பர் போல வேலை செய்து காரின் கண்ணாடிகளை பழுதாக்கும்.

வளைவான கண்ணுக்கு தெரியாத கோடுகளை உண்டாக்கி இரவு நேர வாகன பயணங்களில் எதிர் வரும் வாகனங்களின் வெளிச்சம் கண்ணாடியில் பட்டு தெளிவான பார்வை கிடைக்காமல் செய்து விடும். 

அதனாலேயே காரின் வைப்பர்களை எடுத்து விடுவார்கள். 

கார்களில் வைப்பர்களை தூக்கி வைத்திருப்பது ஏன்?
மீண்டும் கார்களை எடுக்கும் சமயம் துணி, வைப்பர் இரண்டும் பயன்படுத்தாமல் தண்ணீர் நன்றாக ஊற்றி தூசுகள் எல்லாம் கீழிறங்கியதும் சுத்தம் செய்வது தான் சரியான முறை.

உங்கள் காரை நீங்கள் அடிக்கடி பரிசோதிக்க வேண்டும். குறிப்பாக வைப்பர் மீது அதிக கவனம் செலுத்துவது அவசியம். வைப்பரின் ஏதேனும் பிரச்னைகள் இருந்தால், உடனடியாக அதனை சரி செய்து விடுங்கள். 

இல்லா விட்டால் உங்களது பயணத்தின் இடையே திடீரென மழை பெய்ய நேரிட்டால், நீங்கள் தர்மசங்கடங்களை சந்திக்க வேண்டிய திருக்கும்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings