திருப்பதியில் மூங்கில் பாட்டில் விற்பனை... அதிரடி நடவடிக்கை !

0
உலகப் புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயில் எப்போதும் பக்தர்களால் நிரம்பி வருகிறது. இதனால் பக்தர்களின் பாதுகாப்பை யொட்டி தேவஸ்தான நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 
திருப்பதியில் மூங்கில் பாட்டில் விற்பனை... அதிரடி நடவடிக்கை !
திருமலையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது. இதனால் பக்தர்களுக்கு கண்ணாடி தண்ணீர் பாட்டில்கள் 60 ரூபாய் விலையில் வழங்கப் படுகிறது. 

காலி கண்ணாடி பாட்டிலை கடைகளில் திருப்பிக் கொடுத்தால், 35 ரூபாய் வரை பக்தர்களுக்கு திருப்பி வழங்கப் படுகிறது. 
மேலும், கண்ணாடி பாட்டில்கள் தவறுதலாக கீழே விழுந்து உடைந்து விழும் சம்பவங்களும் நடக்கின்றன. இதனால் ஏற்படும் விபத்தால் பக்தர்களுக்கு காயம் ஏற்படுவதுடன், பாட்டில் உடைவதால் 30 ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது. 

ரூ. 10 மற்றும் 20 ரூபாய் விலையுள்ள பிளாஸ்டிக் பாட்டில் தண்ணீருக்காக மூன்று மடங்கு அதிகமாக செலவழிக்க வேண்டி யுள்ளதால், சாதாரண பக்தர்கள் சற்று சிரமப் படுகின்றனர். 

இந்நிலையில் காப்பர், ஸ்டீல் குடிநீர் பாட்டில்கள் விற்பனை செய்யப் படுகின்றன. காப்பர் குடிநீர் பாட்டில் 450 ரூபாயும், ஸ்டீல் குடிநீர் பாட்டில் 200 ரூபாயாகவும் உள்ளது. 
ஆனால், இந்த விலை கொடுத்து பக்தர்கள் குடிநீர் பாட்டில் வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர். 

இதனால் மலிவு விலையில் மூங்கிலால் செய்யப்பட்ட தண்ணீர் பாட்டில்களை பக்தர்களுக்குக் கிடைப்பதற்கான நடவடிக்கையில் திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. 
இந்த மூங்கில் தண்ணீர் பாட்டில்கள் ஒரிசாவில் தயாரிக்கப்பட்டு, சோதனை முறையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

இந்த பாட்டில் விற்பனை வெற்றி யடைந்தால், இத்திட்டத்தை பரவலாக்க திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. மூங்கில் குடிநீர் பாட்டில் 30 ரூபாய்க்கு தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)