ராட் கிங் என்றால் என்ன? #Ratkings

0

முதலில் இந்த வித்தியாசமான கேள்வியைக் கேட்டவருக்கு நன்றி. வித்தியாசமான தகவல்களை நான் இன்று வாசித்தறிந்தது, உங்கள் கேள்வியின் தயவால் தான். 

ராட் கிங் என்றால் என்ன? #Ratking
இந்தக் கேள்வி இல்லை யென்றால், கல்லாத உலகளவு விடயங்களுக்குள் இதுவும் கொட்டுண்டு போயிருக்கும். 

எலிகள் வால்களால் சிக்குண்டு கிடக்கின்றன என்ற புரளி 2017இல்தான் கிளம்பியது என்கிறார் கட்டுரையாளர். 

இதை மையமாக வைத்து, பிரபல்யமான வீடியோ கேம்களும் சந்தையில் உலா வர, இந்த வால்கள் பின்னிப் பிணையும் விவகாரம் ஆர்வமூட்டும் ஒன்றாக மாறி விட்டது.

இப்படி எலிகள் நடந்து கொள்கின்றனவா என்ற கேள்விகள் பிறக்கலாயின. இது வெறும் கட்டுக் கதை இல்லை என்பது போல ஆதாரபூர்வமாக வந்தன சில வீடியோக்கள். 

அருங்காட்சிய கங்களிலும் இதைக் காண முடிந்தது என்கிறார் இக் கட்டுரையாளர். சரித்திரரீதியாகப் பார்த்தால் Rat Kings என்பது ஒரு புதிய சொல்லல்ல என்று அறிய வரும் போது ஆச்சரியமே மேலிடுகின்றது.

புராதன இதிகாசங்களின்படி, எலிகளை வழிநடத்த ஒரு ராஜா இருந்திருக்கின்றது. 

தான் உச்சத்தில் உட்கார்ந்திருக்க, பிரஜைகள் சிக்கலிலிருந்து விடுபடாதவர்களாக, வாழ்வில் அவதியுறுவதை கண்டும் காணாமலிருக்கின்ற ஒரு மோசமான அரசனை இது எடுத்துக் காட்டுகிறது.

ஜேர்மனி மொழியிலும் ஒரு கதை இருக்கின்றது. Rattenkönig என்று ஜேர்மன் மொழியில் இதை அழைக்கிறார்கள். 

தங்கள் இறையாண்மையை ஆட்சியாளர்கள் துர்வழியில் பயன்படுத்து கிறார்கள் என்று 1524இல் மக்கள் புரட்சி ஐரோப்பிய நாடுகளெங்கும் பரவியிருக்கின்றது.

இந்த Rat King விவகாரம் உண்மையா அல்லது வெறும் கட்டுக்கதை தானா என்று கேட்டால், உண்மை என்று நிரூபிப்பது போல, 58 நம்பகரமான Rat King பதிவிலுள்ளது தெரிய வருகின்றது. 

இதில் ஆறை கெடாது பதப்படுத்தி, பொதுமக்கள் பார்வைக்கு வைத்துள்ளார்கள். ஒரு கூட்டத்தில் 3 தொடக்கம் 30 எலிகள் வரை பின்னிப் பிணைந்து காணப்படுகின்றன. 

இங்கே ஆச்சரியம் என்ன வென்றால், வால்களால் பிணைந்து கிடந்தவை எல்லமே கறுப்பு எலிகள்.

இன்று ஆறு மட்டுமே அருங்காட்சிய கங்களில் பார்வைக்கு இந்தாலும், முன்பு கிடைத்தவற்றில் அதிகமானவை, வெறும் பித்தலாட்டமாகவும் இருக்கலாம் என்ற சந்தேகமும் எழாமல் இல்லை. 

ராட் கிங் என்றால் என்ன? #Ratking

காரணம் அந்தக் காலகட்டம் அப்படியான ஒன்று என்கிறார்கள் அவதானிகள். எலிகளின் வால்களை முடிந்து விட்டு புகழ் சேர்க்க செய்யப்பட்ட மனிதர்களின் லீலைகளாக இருக்கலாம் என்றும் சந்தேகித்தார்கள். 

1800கள் வரை பதிவுக்குரியவை எதுவுமே கிடைகாமல், 1986 இல் தான் உறுதி செய்யப்பட்ட ஒன்று கிடைத்தது என்று சொல்லப் படுகின்றது. 

2005 இல் கிடைத்த இன்னொரு நம்பகரமான Rat King உம் வெறும் வதந்திகளை நிஜமாக்கியது.

விஞ்ஞான ஆய்வுகளின் முடிவில், குளிர் காலங்களில், எலிகள் தங்கள் வால்களை ஒன்றுடன் இன்னொன்று பிணைத்துக் கொள்ள முடிந்திருக்கின்றது. காரணம் சூடான சூழலை ஏற்படுத்தத் தான் என்கிறர்கள் ஆய்வாளர்கள்!

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(30)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !