பான் கார்டை வைத்து திருடு போகும் பணம்.. உஷார் !

0

டிஜிட்டல் பரிவர்த்தனை இந்தியாவில் இப்போது மிகவும் வளர்ந்து விட்டது. ஷாப்பிங் செய்வது, கட்டணம் செலுத்துவது, பணம் அனுப்புவது, டிக்கெட் புக்கிங் செய்வது என எல்லாமே ஆன்லைன் மயமாகி விட்டது.

பான் கார்டை வைத்து திருடு போகும் பணம்.. உஷார் !
இது ஒருபுறம் வளர்ச்சியாகப் பார்க்கப் பட்டாலும் இன்னொரு புறம் இதன் மூலம் நிதி மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. 

பொதுவாக, பெரிய அளவிலான நிதி பரிவர்த்தனைகளுக்கு பான் கார்டு அவசியம். பான் கார்டை வைத்து நிதி பரிவர்த்தனைகள் கண்காணிக்கப் படுகின்றன.

பான் கார்டு என்பது வருமான வரித்துறை மூலம் வழங்கப்படுகிறது. இந்த பான் கார்டில் உள்ள தனிப்பட்ட எண் ஒவ்வொரு குடிமகனுக்கும் வேறுபட்டது. இந்த பான் கார்டு நகல் நிறைய இடத்தில் கேட்கப்படுகிறது. 

சிலர் அதை எங்கெல்லாம் கொடுத்தோம் என்று கூட ஞாபகம் வைத்துக் கொள்ள மாட்டார்கள். அந்த அளவுக்கு பான் கார்டு விவரங்களை நிறைய இடங்களில் கொடுத்திருப்பார்கள்.

மாட்டு சாணத்தால் காரை கோட்டிங் செய்தவருக்கு கிடைத்த தெரியுமா?

அப்படி நீங்கள் கொடுக்கும் உங்கள் பான் கார்டு மோசடிக்கும் பயன்படுத்தப் படலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? 

அத்தகைய சூழ்நிலையில் உங்கள் பான் கார்டை யாராவது பயன்படுத்தினால் அதை எவ்வாறு கண்டுபிடிப்பது? அதைத் தடுக்க முடியுமா?

உங்களுடைய பான் கார்டு வேறு ஒருவரால் தவறாகப் பயன்படுத்தப் பட்டதாக நீங்கள் உணர்ந்தால், நீங்கள் செய்ய வேண்டியது இது தான்.

உங்களுடைய வங்கிக் கணக்கு பரிவர்த்தனைகள் அனைத்தையும் நீங்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அதில் உங்களுக்கே தெரியாமல் ஏதேனும் பரிவர்த்தனை நடதுள்ளதா என்று சரிபார்க்க வேண்டும். 

உங்கள் வங்கி அறிக்கை, பில்கள் போன்ற வற்றைச் சரிபார்த்து, தவறான பரிவர்த்தனை எதுவும் நடக்கவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும். 

உங்களிடம் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகள் இருந்தால் ஒவ்வொரு வங்கி அறிக்கையையும் கவனமாக சரிபார்க்கவும்.

இது தவிர, உங்கள் CIBIL ஸ்கோரையும் தொடர்ந்து சரிபார்க்கவும். CIBIL ஸ்கோரில் உங்களால் எடுக்கப்பட்ட கடன்-கிரெடிட் கார்டு போன்றவை பற்றிய தகவல்களும் இருக்கும். 

அத்தகைய சூழ்நிலையில், உங்கள் பான் எண்ணில் யாருக்கும் கடன் அல்லது கிரெடிட் கார்டு வழங்கப்பட வில்லை என்பது அதன் மூலம் தெரியவரும். இது தவிர, உங்கள் வருமான வரி கணக்கையும் சரிபார்க்க வேண்டும்.

ஒரு வேளை ஏதேனும் தவறான பரிவர்த்தனை நடந்திருந்தால் முதலில் உங்கள் வங்கிக்கு உடனடியாகத் தெரிவிக்கவும். மேலும் காவல் துறையிடமும் புகார் செய்ய வேண்டும். 

ஆணுறுப்பு கடவுளை வழிபட்ட பெண்கள் - உலகின் விசித்திரமான கடவுள்கள் !

பண மோசடி நடந்திருந்தால், காவல் துறையில் FIR பதிவு செய்ய வேண்டும். இது தவிர, வருமான வரித் துறைக்கும் தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறாக உங்களது பான் கார்டை வைத்து வேறு யாராவது பண மோசடி செய்வதைத் தடுக்கவும், மோசடி நடந்தால் அதற்கு நிவாரணம் பெறவும் முடியும்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)