ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க முடியாது... உச்ச நீதிமன்றம் !

0

நம்மை கடிக்க வரும் கொசுக்களை அடித்தால் கூட விலங்குகள் வதை தடுப்புச் சட்டம் பாயுமா? என்று பீட்டா அமைப்பை நோக்கி உச்ச நீதிமன்றம் கேள்வி யெழுப்பி இருக்கிறது.

என்னாது... கொசு அடித்தால் விலங்குகள் வதை சட்டமா?
இதே போல, பல அதிரடியான கேள்விகளை எழுப்பி பீட்டாவை திக்கி திணற வைத்தனர் உச்ச நீதிமன்ற நீதிபதிகள்.

ஜல்லிக் கட்டுக்கு தடைவதிக்கக் கோரி பீட்டா அமைப்பு தொடர்ந்த வழக்கு பல ஆண்டுகளாக உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று அதிரடி தீர்ப்பு வழங்கப்பட்டது. 

ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு எந்த தடையும் விதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

ஜல்லிகட்டு மட்டுமல்லா கர்நாடகாவில் எருதுகளை வைத்து பாரம்பரிய விளையாட்டான கம்பாலா போன்ற வற்றுக்கும் தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.

இந்த சூழலில், இவ்வழக்கு விசாரணையின் போது, பீட்டா அமைப்புக்கு பல அதிரடியான மற்றும் சுவாரசியமான கேள்விகளை நீதிபதிகள் எழுப்பி இருந்தனர். அவ்வாறு நீதிபதிகள் எழுப்பிய கேள்விகளை இங்கு பார்ப்போம்.

ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கு காளைகளுக்கு வலி, வேதனை இல்லை என தமிழ்நாடு அரசு தெளிவிப்படுத்தி யுள்ளது. வேதனை இருக்கிறது என்றே வைத்துக் கொள்வோம். 

காளைகளை தவிர வேறு விலங்குகளை வைத்து நம் நாட்டில் போட்டிகளே நடைபெறவில்லையா? பல விலங்குகளை வைத்து வேலை செய்கிறார்களே? அது தவறு இல்லையா? 

குதிரைகளை மட்டும் போட்டிகளில் பயன்படுத்து கிறார்களே? அதில் என்ன தவறு இருக்கிறது? குதிரைகளை பயன்படுத்துவதை நீங்கள் ஏன் எதிர்ப்பது இல்லை?

காளைகளை துன்புறுத்து கிறார்கள்.. அவற்றுக்கு சாராயம் கொடுக்கிறார்கள். கண்களில் மிளகாய் பொடி தூவுகிறார்கள் என்றெல்லாம் சொல்கிறீர்களே.. ஒன்றை நீங்கள் நன்றாக புரிந்து கொள்ளுங்கள். 

காளைகளை வளர்ப்பவர்கள் அவற்றை தங்கள் பிள்ளைகளை போல பாவிக்கிறார்கள். பெற்ற பிள்ளைகளை யாராவது துன்புறுத்து வார்களா? 

ஜல்லிக்கட்டு இருப்பதால் தான் நாட்டு மாடுகள் பாதுகாக்கப் படுகின்றன. இல்லை யென்றால் அவற்றின் இடத்தை வெளிநாட்டு மாடுகள் பிடித்துவிடும்.

நீங்கள் சொல்வதை பார்த்தால் நம்மை கடிக்க வரும் கொசு உள்ளிட்ட பூச்சியினங்களை அடித்துக் கொன்றால் கூட 

அது விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் வரும் போ இருக்கிறதே என பீட்டா அமைப்பை நோக்கி சரமாரியாக நீதிபதிகள் கேள்வி யெழுப்பினர்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)