பேருந்தில் துணிச்சலாக வீடியோ எடுத்த நடிகை.. குவியும் பாராட்டு !

0

கேரள மாநிலம், கொச்சி அங்கமாலி பகுதியைச் சேர்ந்தவர் நந்திதா. இளம் நடிகையும், மாடலுமான நந்திதா, படப்பிடிப்புக்காக திருச்சூரிலிருந்து எர்ணா குளத்துக்கு கே.எஸ்.ஆர்.டி.சி பஸ்ஸில் சென்றிருக்கிறார். 

பேருந்தில் துணிச்சலாக வீடியோ எடுத்த நடிகை.. குவியும் பாராட்டு !
அப்போது அவரது அருகில் பயணித்த இளைஞர் ஒருவர் திடீரென தனது பேன்ட் ஜிப்பைத் திறந்ததாகக் கூறப்படுகிறது. 

அவர் நிர்வாண நிலைக்குச் சென்று மோசமான நடவடிக்கையில் இறங்கியதை யடுத்து, நடிகை தனது செல்போனில் அந்த நபரை வீடியோ எடுத்திருக்கிறார். மேலும் அவரது நடவடிக்கை குறித்து சத்தம் போட்டு கூறியிருக்கிறார். 

அப்போது பேருந்திலிருந்து இறங்க முற்பட்ட இளைஞரை, பேருந்து நடத்துனர் தடுத்து நிறுத்தினார். பின்னர் நந்திதாவிடம் இவர்மீது தவறு இருக்கிறதா? எனக் கேட்டார். 

வாய் துர்நாற்றத்தை தடுப்பது எப்படி?

தவறு இருக்கிறது... என நடிகை கூறியதும், அந்த நபரைப் பிடிக்க முயன்றார் நடத்துனர். ஆனால், அந்த இளைஞர் நடத்துனரை தள்ளி விட்டு பேருந்தி லிருந்து இறங்கி ஓடி விட்டார். 

இதை யடுத்து அந்த இளைஞர் குறித்து, நடிகை நந்திதா வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் பதிவிட்டார். மேலும், அந்த நபர் செய்த செயல் குறித்தும் நடிகை வீடியோ வெளியிட்டார். 

நடிகையின் செயலுக்கு ஆதரவு அதிகரித்தது. இதையடுத்து, சம்பவம் நடந்த நெடும்பாசேரி பகுதி போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரித்தனர். 

அதில் அந்த இளைஞர் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த ஸவாத் எனத் தெரிய வந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

இளம் நடிகையின் துணிச்சலான நடவடிக்கைக்கும், தக்க சமயத்தில் உதவிய நடத்துனருக்கும் பாராட்டு குவிந்து வருகிறது. 

இது குறித்து கேரள போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆண்டனி ராஜூ ஊடகங்களிடம் பேசுகையில், பேருந்தில் இளம் நடிகையிடம் மோசமாக நடந்த வாலிபரை, 

சட்டத்தின் பிடியில் கொண்டு செல்லும் விதமாக கே.எஸ்.ஆர்.டி.சி அங்கமாலி யூனிட்டின் நடத்துனர் பிரதீப்பும், ஓட்டுநர் ஜோஷியும் சமயோஜிதமாகச் செயல் பட்டதற்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

பன்றி கொழுப்பு அனைத்து உணவுகளிளும் சேர்க்கப் பட்டுள்ளது எச்சரிக்கை !

பயணிகளின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்தில் சமூக விரோதச் செயல்களுக்கு அனுமதி இல்லை. அப்படி பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

பேருந்தில் துணிச்சலாக வீடியோ எடுத்த நடிகை.. குவியும் பாராட்டு !

இது குறித்து கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், கே.எஸ்.ஆர்.டி.சி பஸ்ஸில் சக பயணியால் ஏற்பட்ட மோசமான அனுபவத்தை வெளிப்படையாகப் பேசிய பெண்ணின் தைரியத்துக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 
பன்றி இறைச்சி ஹராம் ஏன்?

மானம் போவது பெண்களுக்கு மட்டும் தான் என்ற கூற்றை மாற்றியிருக்கிறார் அந்தப் பெண். இது போன்ற சூழ்நிலைகளை தைரியமாக எதிர் கொள்ள வேண்டும் என்ற வழிகாட்டுதலை அந்த இளம்பெண் ஏற்படுத்தி யிருக்கிறார். 

அனைத்து இடங்களிலும் பெண்களுக்குப் பாதுகாப்பை ஏற்படுத்துவது நம் ஒவ்வொரு வருடைய கடமையாகும் என்றார்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)