பிறந்தநாள் கொண்டாட இருந்த நடிகர் ரே ஸ்டீவன்சன் மரணம் !

0

இயக்குனர் எஸ்.எஸ்.ராஜவுலியின் RRR படத்தில் வில்லனாக நடித்த பிரிட்டிஷ் நடிகர் ரே ஸ்டீவன்சன் காலமானார். அவருக்கு வயது 58.

பிறந்தநாள் கொண்டாட இருந்த நடிகர் ரே ஸ்டீவன்சன் மரணம் !
ராஜமவுலி இயக்கத்தில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான RRR படத்தில் வில்லனாக மிரட்டி இருந்தவர் பிரிட்டிஷ் நடிகர் ரே ஸ்டீவன்சன். 

அப்படத்தில் சர் ஸ்காட் என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்த ரே ஸ்டீவன்சன், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் சர்வாதிகாரிகள் எப்படி இருந்தார்கள் என்பதை தன் நடிப்பால் கண்முன் கொண்டு வந்திருந்தார். 

அவரது கேரக்டருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. உலக புகழ்பெற்ற நடிகரான இவர் RRR தவிர, மார்வெல் தொடரான ​​தோர் படத்திலும் நடித்துள்ளார். 

தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட 5 மொழிகளில், மார்ச் 25ம் தேதி வெளியான இந்தப் படம், ரூ.1,150 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை புரிந்தது.

நடிகர் ரே ஸ்டீவன்சன். ஆர்ஆர்ஆர் படத்தில் ஏற்று நடித்திருந்த எதிர் மறையான பாத்திரமும், அவரின் நடிப்பும் வரவேற்பைப் பெற்றது. பிரபல வெப் சீரிஸான வைக்கிங்ஸ் போன்றவற்றிலும் நடித்துள்ளார்.

மே 25, 1964ம் ஆண்டு வடக்கு அயர்லாந்தின் லிஸ்பர்னில் பிறந்த ஸ்டீவன்சன், 1990களின் முற்பகுதியில் ஐரோப்பிய தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் டெலிஃபிலிம்களில் நடித்ததன் மூலம் சினிமா வாழ்க்கையில் அடியெடுத்து வைத்தார்.

பிரிட்டிஷ் நடிகர் ரே ஸ்டீவன்சன் 33 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 1990 இல் தனது சினிமா வாழ்க்கையைத் தொடங்கினார். முதல் முறையாக அவர் ஐரோப்பிய தொலைக்காட்சி தொடரில் நடித்தார். 

1998 ஆம் ஆண்டு வெளியான தி தியரி ஆஃப் ஃப்ளைட் என்கிற திரைப்படம் தான் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. 

இதையடுத்து ஹாலிவுட்டில் பல்வேறு வெற்றி படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இந்த நிலையில், உடல்நலக் குறைவால் அவர் இத்தாலியில் நேற்று காலமானார்.  

அவர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள ஆர்ஆர்ஆர் படக் குழு, அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கும் செய்தி,  ரே ஸ்டீவன்சன், நிம்மதியாக ஓய்வெடுங்கள். 

நீங்கள் எங்கள் இதயங்களில் SIR SCOTT-ஆக என்றென்றும் இருப்பீர்கள் என்று பதிவிட்டுள்ளது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings