8 பெண்களைக் காதலித்து திருமணம் செய்து வாழும் இளைஞர் !

0

ஒரே வீட்டில் எட்டு மனைவிகளுடன் வசித்து வருகிறார், தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஓங் டேம் சோரோட் (Ong Dam Sorot).

8 பெண்களைக் காதலித்து திருமணம் செய்து வாழும் இளைஞர் !
தாய்லாந்தில் டாட்டூ  ஆர்ட்டிஸ்டாகப் பணி புரியும் இவர், தன் 8 மனைவிகளோடு எடுத்த புகைப்படங்கள் ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் என அனைத்து சமூக வலை தளங்களிலும் டிரெண்டாகி வருகின்றன.

ஒரு திருமணம் முடிக்கவே பல சிக்கல்களை, பலரும் எதிர் கொண்டு வரும் நிலையில், எட்டுப் பெண்களைத் திருமணம் செய்து எந்த வித பிரச்னையும் இல்லாமல் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருவது பலருக்கும் வியப்பை அளித்துள்ளது.

இதில் கூடுதல் வியப்பு என்னவென்றால் இவர் தன் எட்டு மனைவிகளையும் காதலித்து திருமணம் செய்துள்ளார். 

இதுவரை அவர்களுக்குள்ளே சண்டை வந்ததில்லை என்றும், 8 பேரையும் மிகவும் அக்கறையோடு பார்த்துக் கொள்கிறார் என்றும் அவரின் மனைவிகள் கூறுகின்றனர்.

தன் முதல் மனைவியை நண்பரின் திருமண நிகழ்விலும்,  இரண்டாவது மனைவியை மார்க்கெட்டிலும், மூன்றாவது மனைவியை மருத்துவ மனையிலும், நான்காவது, ஐந்தாவது, ஆறாவது மனைவிகளை 

இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், டிக்டாக்கிலும், ஏழாவது மனைவியை கோயிலிலும், எட்டாவது மனைவியை நான்கு மனைவிகளுடன் விடுமுறையைக் கழிக்கச் சென்ற போதும் பார்த்து காதலித்து திருமணம் முடித்துள்ளார். 

அனைவரிடமும் உண்மையைச் சொல்லியே திருமணத்தை முடித்ததாகக் கூறியுள்ளார். அவர் மீது காதல் கொண்டு யதார்த்தத்தை ஏற்றுக் கொண்டதன் அடிப்படையிலேயே ஏற்கெனவே திருமணமானவரை மணமுடித்த தாகவும், 

வீட்டு மூலையில் பிரியாணி இலையை வைத்தால்... ரகசியம் !

குடும்பத்தின ரிடமிருந்து எதிர்ப்புகளைச் சந்தித்தாலும், நண்பர்கள் தங்களைப் புரிந்து கொண்டதாக மனைவிகள் தெரிவித்துள்ளனர். 

பிறரின் மீது காதல் வயப்பட்டால், நேர்மையாகத் தன்னிடம் வந்து கூறி விருப்பப் பட்டவருடன் செல்லலாம் என்று, தன் மனைவிகளுக்கும் தெரிவித்துள்ளதாக சோரோட் கூறியுள்ளார்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings