அந்த காலத்தில் கொடுக்கப்பட்ட பயங்கர தண்டனைகள் தெரியுமா?

0
மனித நாகரீகம் வளராத புராதன காலத்தில், குற்றவாளிகளை காட்டு மிராண்டித் தனமாகத்தான் தண்டித்திருக்கிறார்கள். 
அந்த காலத்தில் கொடுக்கப்பட்ட பயங்கர தண்டனைகள் தெரியுமா?
வெறுமனே சாவு போதாது என்ற நினைப்பில், அணு அணுவாய் குற்றவாளியைச் சாகடிப்பதே வழக்கமாக இருந்துள்ளது. மனிதனை மனிதன் சாகடிக்க , நாட்டுக்கு நாடு., புதிது புதிதான கண்டு பிடிப்புகள்.. 

16ஆம் 17ஆம் நுாற்றாண்டு காலத் தண்டனை இது... இங்கிலாந்தில் நடைமுறையில் இருந்துள்ளது. 

அந்தக் காலகட்டத்தில் பெண்கள் கிசுகிசு பேசுவது, கணவனோடு வாயடித்தல், அயலவர்களுடன் வம்பு தும்புகளில் ஈடுபடுதல் போன்றன, பெண்மைக்கு ஒவ்வாத செயல்களாக நோக்கபட்டன. 

The Dunking or Cucking Stool என்ற பெயரில் பெண்கள் உடனுக்குடன் தண்டிக்கப் பட்டுள்ளார்கள். ஒரு ஸ்டூலுடன் பெண் பிணைக்கப்பட்டு ஆற்றிலோ, ஏரியிலோ வீசுவார்கள்..

ஒரு தடவைக்கு பல தடவை, வீசப்பட்டவளை துாக்கி, ஆற்றுக்குள் எறிவார்கள். . இந்தச் சமயங்களில், அவள் திணறல்தான் அவளுக்கான தண்டனை...
 
கூண்டுக் கிளி
அந்த காலத்தில் கொடுக்கப்பட்ட பயங்கர தண்டனைகள் தெரியுமா?
ஆசிய நாட்டு தண்டனை அப்படி யென்றால், ஐரோப்பிய நாடுகளில் நடைமுறையில் இருந்த ஒரு தண்டனையைப் பாருங்களேன். 

பிறந்த கோலத்தில் குற்றவாளியை ஒரு கூண்டில் அடைத்து விட்டு, பொதுஜனங்கள் கூடும் இடமொன்றில், மக்கள் பார்வைக்கு அவனையோ அவளையோ வைத்து விடுவார்கள். 

சாப்பாடு எதுவுமே கொடுக்க மாட்டார்கள்... அடைபட்டவர் கூனிக் குறுகி, பசியால் வாடிவதங்கி, உயிரை விடுவார். அணு அணுவாய் சித்திரவதையை இப்படியும் அனுபவிக்கலாம்...
தலையணை சேலஞ்ச் செய்த தமன்னா - வைரல் புகைப்படம் ! 
மூக்கறுத்தல் அந்த காலத்தில் கொடுக்கப்பட்ட பயங்கர தண்டனைகள் தெரியுமா?
எகிப்தில் வித்தியாசமான தண்டனை... மூக்கை அறுத்தல்... சட்டத்தை மீறி நடக்கும் குற்றவாளிகளின் மூக்கை அறுத்து, Gaza.க்கு அண்மையிலுள்ள Rhinocorura என்ற நகரின் சிறைச்சாலைக்கு அனுப்பி விடுவார்கள்..

இங்கே எவருக்குமே விதிவிலக்கு இல்லை. ஊழல் செய்யும் அரசாங்க அதிகாரிகளுக்கும் இதே தண்டனை தான்.. 

ஒரு தடவை எகிப்தின் ஆளுனராக (Pharaoh) இருந்தவரின் மனைவி, தன் கணவன் துாக்கத்தில் இருக்கும் போது கழுத்தை அறுத்து கொன்று விட்டாள். சட்டம் விடவில்லை. 

அவளின் மூக்கும், அவளுடன் சேர்ந்து இக்கொலையைத் திட்மிட்ட சகபாடிகளின் மூக்குகளும் அறுக்கப்பட்டு, சிறைக்குள் தள்ளப் பட்டார்கள்
 
சேற்றுக் குளியல்..
அந்த காலத்தில் கொடுக்கப்பட்ட பயங்கர தண்டனைகள் தெரியுமா?
தலையணையை முகத்தில் வைத்து அழுத்துவது தொடக்கம் பல் வேறு முறைகளைக் கையாண்டு, மூச்சுத் திணறலை ஏற்படுத்தி, கொலை செய்கிறார்கள். 

ஆனால் புராதன காலத்தில், ஒரு சேற்றுக் குழிக்குள் நிற்க வைத்து, அவர் மீது சேற்றை வீசி, உயிரை எடுக்கும் முறை இருந்துள்ளது. 

எறியப்படும் சேற்றின் தாக்கத்தில், அவர் உடலை அசைக்க அது மேலும் கீழே புதையும். இறுதியில் சேற்றுக்குழியே அவர் சமாதியாகி விடும்..
விதவிதமா சரக்கடிக்கும் ஸ்ரீ ரெட்டி - எங்க இருந்து கிடைக்குது? 
உயிரோடு சமையல்
அந்த காலத்தில் கொடுக்கப்பட்ட பயங்கர தண்டனைகள் தெரியுமா?
எழுதும் போதே பயங்கர உணர்வைத் தரும் புராதன கிரேக்க தண்டனை முறை இது! உலோகத்தாலான ஒரு காளையின் அகன்ற உடம்பிற்குள், குற்றவாளி கிடத்தப்பட்டு, கதவு போன்ற வயிற்றின் அமைப்பு மூடப்படும். 

கதவை இடித்தோ உதைத்தோ திறக்க முடியாதபடி, பூட்டுப் போடப்படும். பின்பு, உலோகக் காளையின் அடிவயிற்றில் தீ மூட்டுவார்கள்... மிகுதியை எழுதத் தான் வேண்டுமா?
 
யானை மிதித்து..
அந்த காலத்தில் கொடுக்கப்பட்ட பயங்கர தண்டனைகள் தெரியுமா?
கோழி மிதித்து குஞ்சு சாவதில்லை. ஆனால் யானை மிதித்து மனிதன் இறக்காமல் இருப்பானா?  19ஆம் நுாற்றாண்டு வரை Mughal ஆட்சிக் காலத்தில், இந்தியாவில் மிகப் பிரபல்யமாக இருந்த கொடூரமான தண்டனை முறை இது! 

மனிதனைத் தரையில் கிடத்தி விட்டு, யானையைக் கோபப்படுத்தி, தரையில் கிடப்பவனின் உடலை மிதித்து ஓடும்படி அதை விரட்டுவார்கள். 

ஒன்றுக்கு பல தடவை இது நடக்கும். காலைத் துாக்கி மனிதனின் தலையை நசுக்கும் முறையும் உண்டு.. இந்த மரண வேதனை எப்படியிருக்கும்? 

நமது கற்பனைக்கு அப்பாற்பட்டது அது! தென் கிழக்கு ஆசிய நாடுகளில், அந்த நாட்களில் அமுலில் இருந்த மோசமான தண்டனை முறை இது என்கிறார்கள்..
விஷப் பரீட்சைகள்
அந்த காலத்தில் கொடுக்கப்பட்ட பயங்கர தண்டனைகள் தெரியுமா?
இப்பொழுது நான் சொல்லப் போவது, அநியாயத்திலும் அநியாயமான தண்டனைகள்.. காட்டு மிராண்டித்தனம் பளிச்செனத் தெரியும் தண்டனைகள்...
 
ஒருவர் குற்றவாளியா இல்லையா, பொய் சொல்கிறாரா இல்லையா என்ற கண்டறிய, கொடுக்கும் தண்டனைகள் இவை.. (குற்றவாளியாகி விட்டால், சம்பளத்தோடு போனஸ் போல, கிடைக்கும் தண்டனைகளின் கதை வேறு)
 
குற்றமற்றவராக இருப்பவரைக் கூட, இந்தப் பரீட்சைகளுக்கு உட்படுத்தி விடுகிறார்கள். 

சம்பந்தப் பட்டவரைின் கைகால்களை கட்டி விட்டு, கடுங்குளிரான நீருக்குள் தொப்பெனப் போடுவார்கள். தணணீரில் மிதந்தால் குற்றவாளி. அமிழ்ந்து. அடிக்குச் சென்றால் நிரபராதி..
 
ஒரு சூடான கல்லை, குற்றவாளி என்று கருதப்படுபவரின் உடலில் அழுத்துவார்கள். இந்த சூட்டுக் காயம் மூன்று நாட்களுக்குள் குணமாகினால், அவர் சுற்றவாளி. அநியாயத்தின் உச்சம் இது..
 
மூன்றாவது முறையாக பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கோல் ஒன்றை, குற்றம் சுமத்தப் பட்டவர் கையில் பிடித்திரு்கக வேண்டும். 
கை எரிவு ஏற்படா விட்டால் குற்றவாளி இல்லையாம்.. இப்படி ஏகப்பட்ட அநியாயங்களும் அன்று அரங்கேறி இருக்கின்றன..
 
இப்படி மனிதனுக்கு அளிக்கபட்ட தண்டனை முறைகள் நிறைய இருக்கி்னறன... இவை இல்லாத காலத்தில் நாம் வாழ்கிறோம் என்பதும் மனதுக்கு ஓர் ஆறுதலான விடயந்தான்..
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)