எலும்புகளால் உருவான சாலை... எங்கு தெரியுமா?

0
இந்த சாலை ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் உள்ள நெஞ்சாலையாகும். கொல்யிமா என பெயர் கொண்ட இந்த சாலை சுமார் 2,025 கி.மீ நீளம் கொண்டது. 
எலும்புகளால் உருவான சாலை... எங்கு தெரியுமா?
இந்த சாலை முழுவதும் மனித எலும்புகளால் நிறைந்தருக்கிறது. இந்த சாலை இருக்கும் பகுதி குளிர் காலத்தில் அதிக பனிப்பொழிவு இருக்கும் பகுதியாகும். 

அதனால் அந்த சாலை முழுவதும் பனியால் மூடியிருக்கும். அந்த நேரங்களில் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் செல்ல முடியாமல் நடுவில் நிற்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இதனால் அப்பகுதியில் சாலை அமைக்கும் போது மண்ணுடன் மனித எலும்புகளையும் சேர்த்து அறைத்து சாலைகளை கட்டமைத்தனர் .

அதனாலேயே இந்த ஆச்சரியமான சாலையை,  எலும்புகளின்  சாலை அல்லது சமாதிகளின் பாதை என அழைக்கிறார்கள்.
சாலைகளில் பொதுவாக தார் சாலைகள், மணல் சாலைகள் போன்றவைகள் அமைக்கப்படும். ஆனால் மனித எலும்புக் கூடுகளை பயன்படுத்தி சாலைகள் அமைக்கப் பட்டிருப்பதை கேள்விப்பட்டு இருக்கிறீர்களா?
 
ரஷ்யாவில் கடந்த 1932-ம் ஆண்டிலிருந்து 1952 ஆம் ஆண்டு வரை கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் மனித எலும்புக் கூடுகளை பயன்படுத்தி சாலைகள் அமைக்கப் பட்டுள்ளது.
 
அதாவது தங்க சுரங்கத்தில் இருந்து தங்கத்தை எடுத்து வேறு இடத்திற்கு கொண்டு செல்வதற்காக சாலைகள் அமைக்கும் பணி நடைபெற்றுள்ளது.
 
இந்த சாலைகளை அமைப்பதற்கு சிறைக் கைதிகள் வேலை ஆட்களாக பயன்படுத்தப் பட்டுள்ளனர். இந்த வேலைக்காக கிட்டத்தட்ட 7.5 லட்சம் கைதிகள் பணியாற்றி யுள்ளனர்.
 
அந்த இடத்தில் வெப்ப நிலையானது -50° செல்சியஸ்க்கும் குறைவாக இருந்துள்ளது. சுருக்கமாகச் சொன்னால் ஒரு மனிதனை உறைய வைக்கக் கூடிய அளவிற்கு குளிர் நிலவும். 
இந்தக் கடுமையான குளிரிலும் சிறைக் கைதிகள் வேலைப் பார்த்துள்ளனர். ஆனால் அவர்களுக்கு வேண்டிய உணவு மற்றும் உடை கிடைக்காததால் 2.5 லட்சத்துக்கும் அதிகமான கைதிகள் உயிரிழந்தனர். 
இந்த கைதிகளின் உடல்கள் சாலைகளுக்கு அடியில் புதைக்கப் பட்டுள்ளது.
 
இதன் காரணமாக ரஷ்யாவில் இருக்கும் அந்த சாலை THE ROAD OF BONES என அழைக்கப் படுகிறது. மேலும் அவ்வழியாக செல்பவர்கள் சாலையில் எலும்புக் கூடுகள் கிடப்பதாக கூறுகின்றனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)