கோடீஸ்வரராக இருந்து ஏழையாய் மாறிய மனிதர்? தெரியுமா?

0
நம்மில் பெரும்பாலோர் இன்றும் செயற்கை நூல் தயாரிக்கும் ரேமண்ட்ஸ் (Raymond's) நிறுவனத்தைப் பற்றி அறிவோம். இதன் முடிசூடா மன்னராக இந்த துறையில் கொடிகட்டிப் பறந்தவர் திரு விஜய்பத் சிங்கானியா. 
கோடீஸ்வரராக இருந்து ஏழையாய் மாறிய மனிதர்? தெரியுமா?
இந்த நிறுவனத்தின் சொத்து மதிப்பு 3500 கோடிக்கு மேல். உண்மையில் இவர் பறக்கும் சாதனை படைத்தவர். 

1988ம் ஆண்டு இவர் இங்கிலாந்திலிருந்து மைக்ரோலைட் என்ற எடை குறைவான விமானத்தில் (உண்மையில் அது கிளைடர் போன்றது) இந்தியாவுக்கு தனியாக பறந்து வந்தவர்.
5000 மணி நேரம் விமானம் ஓட்டிய அனுபவம் உண்டு இவருக்கு. இவருக்கு ஒரே மகன். பெயர் கௌதம் சிங்கானியா. வயதான காரணத்தால் தன் மகனிடம் தொழிலை ஒப்படைத்து கவனிக்க சொன்னார். 

அதீத அன்பில் எல்லா சொத்துக்களையும் மகன் பேரில் மாற்றி தொழில் செய்ய வசதி செய்தார். அவர் வசித்த இடம் 1960ல் கட்டப்பட்ட பதிநான்கு மாடி அடுக்கு மாளிகை. அதை 2007ல் முப்பத்தாறு மாடியாக உயர்த்தி கட்டப்பட்டது. 

அதை அவர் குடும்பத்திற்கு தலா 5200 சதுர அடி வீடு என ஒப்பந்தம் ஆகியது. ஆனால் மகன் அவருடைய பங்கை தரவில்லை. அவர் அதை கேட்டபோது மறுத்து வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டு விட்டார்.
2017ல் மகனை எதிர்த்து மும்பை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தார். அதன் தீர்ப்பு அவருக்கு எதிராக அமைந்தது.
 
தற்போது இவர் ஒரு வாடகை வீட்டில் குடி இருக்கிறார். ஒரு சமய கோடீஸ்வரர் இன்று பரம ஏழை. வயதானவர்களுக்கு இது ஒரு பாடம்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)