பிளாஸ்டிக்கை மென்னு தின்று விடும் பாக்டீரியா கண்டுபிடிப்பு !

0
பிளாஸ்டிக் பயன்பாடு என்பது இன்றைக்குத் தவிர்க்க முடியாததாக இருக்கிறது. பிளாஸ்டிக் பொருட்கள் சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன.
பிளாஸ்டிக்கை மென்னு தின்று விடும் பாக்டீரியா கண்டுபிடிப்பு.!
ஒரு புறம் தேவைக்குத் தகுந்தவாறு பிளாஸ்டிக் பொருள்கள் உற்பத்தி செய்யப்பட்டு கொண்டிருக்கும் அதே வேளையில் மறுபுறம் கழிவாக உருமாறிக் கொண்டே இருக்கிறது. 

பிளாஸ்டிக் பயன்படுத்துவதற்கு எளிதானதாக இருந்தாலும் மக்காத தன்மை கொண்டது என்பது தான் அதிலிருக்கும் பிரச்னை. 

பிளாஸ்டிக் கழிவுகள் மக்குவதற்குக் குறைந்த பட்சமாக ஐந்நூறு முதல் ஆயிரம் ஆண்டுகள் வரை கூட ஆகலாம் என்பது ஆராய்ச்சியாளர்கள் கூறும் அதிர்ச்சி கணக்கு. 
இத்தகைய பிளாஸ்டிக் கழிவுகள் சுற்றுச்சூழலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. 

இதன் மூலம் உருவான பாதிப்புகள் முதல் இனிமேல் உருவாகப் போகும் பாதிப்புகள் வரை உலகம் அறிந்திருந்தாலும் கூட ஒவ்வொரு நாளும் டன் கணக்கில் பிளாஸ்டிக் உருவாக்கப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறது.

இதுவரை எத்தனையோ புதிய கண்டுபிடிப்புகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.. ஆனால், இப்படி ஒரு விசித்திரமான, நம்ப முடியாத ஒரு படைப்பை நீங்கள் பார்த்திருக்க வாய்ப்பே இல்லை மக்களே.! 
பிளாஸ்டிக்கை மென்னு தின்று விடும் பாக்டீரியா கண்டுபிடிப்பு.!
அப்படி என்னப்பா கண்டுபிடிப்புனு கேட்கிறீர்களா? வாங்க சொல்கிறோம். பூமியில் மக்கள் ஜனத்தொகை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே போகிறது. 

எவ்வளவுக்கு வேகமாக 'இது' அதிகரிக்கிறதோ, அதை விட வேகமாகப் பூமியில் (Earth) சேரும் கழிவுகளின் (Waste) அளவும் எவரெஸ்ட் மலைப் (Everest Hill) போலப் பெருகிக் கொண்டே போகிறது. 

இவற்றில் சில குப்பைகள் சில பல ஆண்டுகளில் மங்கி விடும் தன்மை கொண்டவையாக இருக்கிறது. ஆனால், பூமியின் ஆயுளை அடியோடு உறிஞ்சிக் குடிக்கும் அசுரனாகத் திகழ்வது தான் பிளாஸ்டிக் (Plastic) குப்பைகள்.
பூமியின் உயிரைக் கொல்லும் நஞ்சாக விஞ்ஞானிகள் இந்த பிளாஸ்டிக்கை பார்க்கிறார்கள். பிளாஸ்டிக் கழிவுகள் (Plastic wastes) சாமானியமாக மக்கிப் போவதில்லை. 

இவற்றை மறுசுழற்சி (Recycling plastic) செய்ய பல நாடுகளில் திட்டம் இருந்தாலும், பிளாஸ்டிக் கழிவுகளை அடியோடு ஒழிக்கவே விஞ்ஞானிகள் (Scientists) மும்முரமாக வேலை செய்து வருகின்றனர். 
 பிளாஸ்டிக்கை மென்னு தின்று விடும் பாக்டீரியா கண்டுபிடிப்பு.!
குறிப்பாக, இப்போது பிளாஸ்டிக் குப்பைகள் கடலில் (Plastics on sea) கூட கலந்து விட்டது, ஏன் நமது உணவிலும் கூட மைக்ரோ பிளாஸ்டிக் குப்பைகள் (Micro plastic wastes on human food) கலந்து விட்டது என்பது தான் வேதனையே. 

இப்படி பூமி முழுக்க பறந்து, விரிந்து, பாதிப்பை ஏற்படுத்தி வரும் பிளாஸ்டிக் குப்பைகளை தின்று செமிக்கும் புதிய வகை என்சைம்களை (New Plastic Eating Bacteria) விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். 

எது பிளாஸ்டிக்கை உண்டு ஜீரணம் செய்யும் என்சைம்களா (Plastic eating enzymes)? என்று நீங்கள் ஆச்சரியமாகக் கேள்வி கேட்கலாம். 

ஆனால், உண்மையில் இப்படியான ஒரு என்சைம் வகையைத் தான் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 
இது பிளாஸ்டிக்கை உணவாக உண்டு செமித்து விடும் தன்மை கொண்டதாக இருக்கிறது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
 
கடந்த சில ஆண்டுகளாக PET போன்ற பொதுவான பிளாஸ்டிக்குகளை அழிக்கும் என்சைம்களை (PET) நமது விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர்.

இருப்பினும், இந்த செயல் முறையால் பின்தங்கியிருக்கும் முக்கிய பிளாஸ்டிக் கட்டுமானத் தொகுதிகளில் ஒன்றை உடைக்கக் கூடிய புதிய வகை என்சைம் ஒன்றை இப்போது ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 

நியூ அட்லஸால் முதலில் அறிவிக்கப்பட்ட புதிய என்சைம் கடந்த 2016 ஆம் ஆண்டு ஜப்பானில் முதன் முதலில் அறிமுகமானது.
பிளாஸ்டிக்கை மென்னு தின்று விடும் பாக்டீரியா கண்டுபிடிப்பு.!
இது உண்மையில் ஒரு பாக்டீரியாவை (Bacteria) அடிப்படையாகக் கொண்டது. இது PET பிளாஸ்டிக்களை உணவாக உண்ணும் விதம் அதிக பசியைக் கொண்டது. 

சில வாரங்களில் இது பிளாஸ்டிக்கை சிதைத்து அழித்துவிடுகிறது. இது பின்னர் போர்ட்ஸ்மவுத் பல்கலைக்கழக ஆராய்ச்சி யாளர்களால் PETase என்று அழைக்கப் பட்டது. 

பின்னர், MHETase என அழைக்கப்படும் மற்றொரு மேம்படுத்தப்பட்ட என்சைம் (Upgraded plastic eating bacteria enzyme) வகையாக உருவாக்கப்பட்டுப் பெயர் மாற்றப்பட்டது.
 
இது PET பிளாஸ்டிக்கை ஆறு மடங்கு வேகமாக உண்ணும் திறன் கொண்ட சூப்பர் என்சைமாக (Super enzymes to eat plastics) இது உருவாக்கப் பட்டுள்ளது. இத்துடன், இந்த ஆராய்ச்சி நின்றுவிட வில்லை என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். 
எதிர்காலத்தில் இதை விட இன்னும் வேகமாக பிளாஸ்டிக்கை அழிக்கும் என்சைம்களை விஞ்ஞானிகள் உருவாக்க திட்டமிட்டிருப் பதாகவும் தெரிவித்துள்ளனர்.
 
இத்தகைய கண்டுபிடிப்பு மூலம், உலகத்தில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை நம்மால் பூமியில் இருந்து அழிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். 

கொஞ்சம் யோசித்து பாருங்கள், தண்ணீரில் விழுந்த பஞ்சுமிட்டாய் (cotton candy) போல, பிளாஸ்டிக்கை என்சைம்கள் வேகமாக உண்ணும் காட்சியை நீங்கள் நேரில் பார்த்தால் எப்படி இருக்கும்? 
பிளாஸ்டிக்கை மென்னு தின்று விடும் பாக்டீரியா கண்டுபிடிப்பு.!
எதிர்காலத்தில், மிகவும் சக்தி வாய்ந்த என்சைமை விஞ்ஞானிகள் உருவாக்கினால், இந்த கற்பனை காட்சியை நாம் நேரில் காண வாய்ப்புள்ளது.
 
ஆண்டிற்கு 80 லட்சம் டன் அளவிற்கு கடலில் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப் படுகின்றன. இந்த கழிவுகளால் சிறிய கடல்வாழ் உயிரினங்கள் மட்டுமின்றி சுறா மீன், டால்பின் போன்ற பெரிய உயிரினங்களும் செத்து மடிகின்றன. 
இந்த சூழலில் பிளாஸ்டிக் என்னும் எமனை அழிக்க புதிய என்சைம் கண்டறியப் பட்டுள்ளது, பிளாஸ்டிக் மறு சுழற்சிக்கான கதவுகளை திறக்கச் செய்துள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)