சர்க்கரை நோயாளிகள் உடற்பயிற்சி செய்வதனால் கிடைக்கும் நன்மைகள்?

0
சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வின் படி, நீரழிவு நோயாளிகள் மதியம் மற்றும் மாலை வேளைகளில் உடற்பயிற்சி செய்வது இன்சுலின் செயல்பாட்டை மேம்படுத்த உதவும் என்பது கண்டறியப் பட்டுள்ளது.
சர்க்கரை நோயாளிகள் உடற்பயிற்சி செய்வதனால் கிடைக்கும் நன்மைகள்?
சர்க்கரை நோய். இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும் ஹார்மோன் ஆகும். 

இந்த நோய் வந்த பிறகு கவனிக்காமல் விட்டால் அது நோய் பாதித்தவர்களின் இதய ஆரோக்கியம், சிறுநீரகங்கள், இரத்த நாளங்களில் சேதங்களை உண்டாக்கும்.

சர்க்கரை நோய் வந்தாச்சு இனி என்ன செய்தால் அந்த பாதிப்பிலிருந்து மீளலாம். எப்படி கட்டுக்குள் வைத்து கொள்ளலாம். என்பதையும் தெரிந்து வைத்து கொள்ள வேண்டும். 
இது டைப் - 1, டைப் 2 , கர்ப்பகால நீரிழிவு என அனைவருக்குமே பொருந்தும். 

ஃபிட்னஸ் பிரியர்கள் முதல் சர்க்கரை நோயாளிகள் வரை அனைவருக்கும் காலை வேளையில் வாக்கிங் செல்வது, உடற்பயிற்சி செய்ய ஜிம்மிங்கிற்கு செல்வது மிகவும் பிடித்தமானதாக இருக்கும். 

நம்மில் பலருக்கும் கூட காலையில் படுக்கையை விட்டு எழுந்ததுமே உடற்பயிற்சி செய்வது தான் ஆரோக்கியத்திற்கு நல்லது என்ற எண்ணம் உள்ளது. 

ஆனால் நெதர்லாந்தில் நடத்தப்பட்ட புதிய ஆய்வு ஒன்று, காலை வேளையை விட மதியம் அல்லது மாலை வேளையில் உடற்பயிற்சி செய்வது ஆரோக்கியத்திற்கும் நல்லது என்பதை கண்டறிந்துள்ளது.
 
குறிப்பாக டைப் 2 நீரழிவு நோயாளிகளின் உடலில் இன்சுலின் சுரப்பை மேம்படுத்த உதவும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

டயபெடோலாஜியா என்ற இதழில் கடந்த 1ம் தேதி வெளியான ஆய்வு முடிவில், மதியம் மற்றும் மாலை வேளைக்கு இடையே உடற்பயிற்சி செய்வது, 

காலையில் மேற்கொள்ளப்படும் உடற்பயிற்சிகளை விட இன்சுலின் எதிர்ப்பைக் கணிசமாகக் குறைக்க உதவும் என கண்டறிந்துள்ளது. சர்க்கரை நோயாளிகள் உடற்பயிற்சி செய்வதனால் கிடைக்கும் நன்மைகள்?
பல மணி நேரங்கள் உட்கார்ந்து கொண்டே பணியாற்றும் நபர்களின் உடலில் கல்லீரல் கொழுப்பு மற்றும் இன்சுலின் சுரப்பில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து ஆய்வு நடத்தப் பட்டுள்ளது. 

56 வயதும், 26.2 பிஎம்ஐ கொண்ட 777 நபர்களிடம் இருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் ஆராய்ச்சியாளர்கள் முடிவுகளை வெளியிட்டுள்ளனர்.
 
மதியம் 12 மணி முதல் மாலை 6 மணி வரை மிதமான பயிற்சிகளை மேற்கொள் பவர்களுக்கு 18 சதவீதமும், மாலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரையிலான காலக்கட்டத்தில், 

மிதமான பயிற்சிகளை மேற்கொள் பவர்களுக்கு 25 சதவீதமும் இன்சுலின் எதிர்ப்புத் திறன் குறைவது கண்டறியப் பட்டுள்ளது.
இதய கட்டிகள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டியவை !
மேக்ஸ் ஹெல்த்கேரின் நீரிழிவு மற்றும் நாளமில்லா சுரப்பி துறையின் தலைவரான அம்ப்ரிஷ் மித்தல் கூறுகையில் 

நாள் முழுவதும் உட்கார்ந்து கொண்டே வேலை செய்யும் நபர்கள், காலையில் உடற்பயிற்சி செய்வது போதுமானதாக இருக்காது.

ஒரு வாரத்திற்கு 180 நிமிடங்கள் உடற்பயிற்சி மேற்கொண்டாலும் அது அவர்களுக்கு பலனாளிக்காது என தெரிவித்துள்ளார்.
 
உணவுக்குப் பின் ஐந்து முதல் பத்து நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது சர்க்கரை அளவைக் குறைப்பதில் பயனுள்ளதாக இருக்கும் எனத் தெரிவித்துள்ள ஆராய்ச்சியாளர்கள், 

இதனை இதய நோயாளிகள் செய்யக் கூடாது என்றும், நீரழிவு நோயாளிகளுக்கு இன்சுலினை கட்டுப்படுத்துவதில் உதவக்கூடும் என்றும் பரிந்துரைத்துள்ளனர். 

இதய ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த காலையில் 40 முதல் 45 நிமிடங்கள் கடுமையான உடற்பயிற்சியைத் தொடர வேண்டியது அவசியம்.  
சர்க்கரை நோயாளிகள் உடற்பயிற்சி செய்வதனால் கிடைக்கும் நன்மைகள்?
நீரிழிவு நோய் வந்தபிறகு அதை குணபடுத்த முடியாது. ஆனால் கட்டுக்குள் வைக்கலாம். அதனால் சோர்ந்து போகாமல் எப்போதும் சுறுசுறுப்பாக இருங்கள். 

நீரிழிவு நோயால் உண்டாகும் சிக்கல்களின் அபாயத்தை அதிகரிக்கும் எந்த செயலையும் ஊக்குவிக்காதீர்கள். குறிப்பாக உடல் பருமன். உடலில் உள்ள எந்த நரம்பு அமைப்பையும் உங்கள் சர்க்கரை அளவு பாதிக்கலாம். 
இதனோடு குடல் அசைவு, கண்களில் மங்கலான பார்வை, ஈறுகளில் சிதைவு, சிறுநீர் கழித்தலில் வித்தியாசம், 

செரிமானம் போன்றவற்றில் தொடர்ந்து மாறுபாடுகள் இருந்தால் நீங்கள் கண்டிப்பாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)