துருக்கி 96 மணி நேரம் கழித்து மீட்கப்பட்ட இளைஞர் !

0
துருக்கியில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கியிருந்த இளைஞர் 96 மணி நேரம் கழித்து உயிருடன் மீட்கப்பட்ட நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. 
துருக்கி 96 மணி நேரம் கழித்து மீட்கப்பட்ட இளைஞர் !
துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த திங்கள் கிழமை (பிப். 6) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து மூன்று நிலநடுக்கங்கள் அடுத்தடுத்து ஏற்பட்டன. 

இந்த நிலநடுக்கத்தில் துருக்கியின் தெற்கு மற்றும் மத்திய பகுதியும் சிரியாவின் வடக்குப் பகுதியும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டன. 

துருக்கி, சிரியாவுக்குச் சென்ற உக்ரைன் வீரர்கள்! பல்வேறு கட்டடங்கள் இடிந்து சேதமடைந்தன. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றனர். 
இதுவரை 21 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. 

இந்நிலையில், துருக்கியின் டோல்காடேரோக்லு பகுதியில் ஏற்பட்ட கட்டட இடிபாடுகளில் சிக்கியிருந்த இளைஞர் ஒருவர் 96 மணி நேரங்களுக்குப் பிறகு மீட்கப் பட்டுள்ளார். 
துருக்கி 96 மணி நேரம் கழித்து மீட்கப்பட்ட இளைஞர் !
டோல்காடேரோக்லு பகுதியைச் சேர்ந்த ஆல்பர்ட் சாச்மா என்ற 26 வயது இளைஞர் திங்கள் கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் கட்டட இடிபாடுகளில் சிக்கியுள்ளார். 

தொடர்ந்து நான்கு நாள்களாக இடிபாடுகளில் சிக்கியிருந்த நிலையில், இன்று மீட்புப் படையினர், சாச்மாவை உயிருடன் மீட்டனர். அவருக்கு அருந்துவதற்கு தண்ணீர் வழங்கி, முதலுதவி அளிக்கப்பட்டது. 
அதனைத் தொடர்ந்து அந்த இளைஞர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப் பட்டுள்ளார். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings