ஒரே ஆணை திருமணம் செய்து கொண்ட 3 சகோதரிகள் !

0
மூன்று சகோதரிகள் ஒரே ஆணை திருமணம் செய்து கொண்டுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஒரே ஆணை திருமணம் செய்து கொண்ட 3 சகோதரிகள் !
ஒரே நபர் பலரை திருமணம் செய்வதற்கு பெரும்பாலான நாடுகளில் அனுமதி இல்லை என்றாலும், சில நாடுகளில் பல பெண்களை திருமணம் செய்த நபர்கள் பற்றி அவ்வ போது செய்திகள் வந்து கொண்டே தான் இருக்கின்றன. 
கென்யாவில் இது போன்ற பல விசித்திர திருமணங்கள் பற்றி பல செய்திகள் வெளிவரும் நிலையில், ஒட்டிப் பிறந்த மூன்று சகோதரிகள் ஒரே ஆணை திருமணம் செய்து கொண்டுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
 
கேத், ஈவ் மற்றும் மேரி என்ற மூன்று சகோதரிகளும் காஸ்பல் இசையில் பணிபுரிந்து வருகின்றனர். 

இவர்கள் மூவரும் கென்யாவைச் சேர்ந்த ஸ்டீவோ என்ற நபரை திருமணம் செய்து கொண்டதாக டெய்லி ஸ்டார் செய்தி வெளியிட்டுள்ளது. முதலில் கேத் தான் ஸ்டீவோவை சந்தித்துள்ளார்.
 
பின்னர் கேத்தின் சகோதரிகளை சந்தித்த ஸ்டீவ், அவர்களிடம் பேசி பழகிய போது, தான் ஒரு பெண்ணுக்காக மட்டும் இறைவன் படைக்கப்பட வில்லை என்பதை உணர்ந்தாராம். 
உடனே மூன்று பேரையும் திருமணம் செய்துகொள்ளும் முடிவை எடுத்ததாகக் கூறுகிறார் ஸ்டீவோ. மேலும், மூன்று பெண்களுடனும் தான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

ஸ்டீவோ பேசுகையில், மூன்று பெண்களின் தேவைகளை திருப்திப் படுத்துவது சாத்தியமானதா என கேட்பவர்களுக்கு ஒன்றை கூறுக் கொள்கிறேன், மூன்று பேரையும் திருப்திப் படுத்துவது எனக்கு சிரமமாக இல்லை.
அது ஒரு பெரிய விஷயமே கிடையாது என்றார். 3 பேருடனும் சமமாக நேரம் செலவிட நான் கடுமையான அட்டவணையை பின்பற்றுகிறேன். 

வாரந்தோறும் திங்கட் கிழமைகளை மேரிக்காகவும், செவ்வாய்க் கிழமைகளை கேத்திற்காகவும், புதன் கிழமைகளை ஈவிற்காகவும் ஒதுக்கியுள்ளேன் என்றார்.
ஆனால் அதே நேரத்தில் மூன்று சகோதரிகளும் குடும்பம் மற்றும் பிற தேவைகளை பூர்த்தி செய்வதில் கொஞ்சம் சிரமாக இருப்பதாக கூறுகின்றனர்.
 
மேலும் தாங்கள் மூன்று பேர் மட்டும் ஸ்டீவோவிற்கு போதுமானவர்கள் என்றும், வேறொரு பெண்ணை வாழ்க்கைக்குள் கொண்டு வர நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று திட்டவட்டமாக கூறி விட்டனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings