ஆரம்பத்தில் அஜித் என்னை கலாய்ச்சாரு... இயக்குனர் வினோத் !

0

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் நடிகர் அஜித். இவருடன் கடந்த நான்கு ஆண்டுகளாக பயணித்து வரும் இயக்குனர் தான் வினோத். 

ஆரம்பத்தில் அஜித் என்னை கலாய்ச்சாரு... இயக்குனர் வினோத் !

இவர்கள் கூட்டணியில் கடந்த 2019 ஆம் ஆண்டு நேர்கொண்டப் பார்வை திரைப்படம் வெளியானது. பாலிவுட் படமான பிங்க் படத்தின் ரீமேக் தான் நேர்கொண்டப் பார்வை.

அத்திக்காய் உண்பதால் ஏற்படும் நன்மைகள் என்ன?

அஜித்தின் வித்யாசமான நடிப்பில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் அமோகமான வரவேற்பை பெற்றது. இதையடுத்து மூன்று ஆண்டுகளுக்கு பிறகு மிகுந்த எதிர் பார்ப்பில் வலிமை திரைப்படம் வெளியானது. 

ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்த இப்படம் அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறியது. இருந்தாலும் இப்படம் வசூல் ரீதியாக வெற்றிப்படமாக அமைந்தது. 

இருப்பினும் வலிமை படத்திற்கு வந்த நெகடிவ் விமர்சனங்கள் அடுத்த படத்திற்கு வந்துவிடக் கூடாது என்று கவனமாக துணிவு படத்தை உருவாக்கி யுள்ளனர் படக்குழுவினர். 

இவர்கள் கூட்டணியில் உருவாகும் மூன்றாவது படமான துணிவு திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற படத்தின் மீதான எதிர்பார்ப்பும் இரட்டிப்பானது. 

இதையடுத்து இன்னும் சில தினங்களில் இப்படம் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் ப்ரமோஷன் வேலைகளில் படக்குழுவினர் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

அருமையான தூத் பேடா ஸ்வீட் செய்வது எப்படி?

படத்தின் இயக்குனரான வினோத் பல பேட்டிகளில் கலந்துகொண்டு படத்தைப் பற்றி பேசி வருகின்றார். அவ்வாறு ஒரு பேட்டியில் அவரிடம், அஜித் படத்தின் கதையில் தலையிடுவாரா என கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த வினோத், அஜித்திற்கு படத்தின் ஒரு வரி கதை பிடித்து விட்டால், இயக்குனரின் மீது அவர் நம்பிக்கை வைத்து விட்டால் அதன் பின் ஒன்றுமே கேட்க மாட்டார். 

படப்பிடிப்பின் போது சில காட்சிகளை அவரிடம் சொல்லும் போது, ஓ இதுதான் கதையா என நகைச்சுவையாக கேட்பார் அஜித் என்றார் வினோத்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)