பிரேசிலின் பெரும்பணக்காரர்களில் ஒருவரான சிக்வின்ஹோ ஸ்கார்பா தனது மில்லியன் டாலர் பென்ட்லி காரைப் புதைக்கப் போவதாக அறிவித்து உலகையே திகைக்க வைத்தார். 

உறுப்பு தான விழிப்புணர்வுக்காக காரை புதைத்த மனிதர் !

விலைமதிப்பான வாகனத்தை அழிக்கும் அந்த ஆடம்பரமான சைகை கடுமையாக விமர்சிக்கப் பட்டது. அவர் ஏன் காரை நன்கொடையாக தரக்கூடாது? எனக் கேள்விகள் எழுந்தன.

தனது பென்ட்லி காரை அடக்கம் செய்வதற்கு சில நிமிடங்களுக்கு முன், அவர் தனது காரைப் புதைக்கப் போவதில்லை எனவும், தம் நாடகத்தின் உண்மையான நோக்கம் என்ன என்பதையும் வெளிப்படுத்தினார்.

ஒரு மில்லியன் டாலர் பென்ட்லியை நான் புதைக்க விரும்பியதால் மக்கள் என்னைக் கண்டிக்கிறார்கள், உண்மையில் பெரும்பாலான மக்கள் எனது காரை விட மதிப்புமிக்க ஒன்றை புதைக்கிறார்கள்!

இதயம், கல்லீரல், நுரையீரல், கண்கள், சிறுநீரகம் என்று புதைக்கிறார்கள். இது முட்டாள் தனத்தின் உச்சம். உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக எண்ணற்றோர் காத்திருக்க, 

பல உயிர்களைக் காப்பாற்றக் கூடிய ஆரோக்கியமான உறுப்புகளை யாருக்கும் பயனற்றுப் புதைக்கிறார்கள் என்று ஸ்கார்பா கூறினார்.