நள்ளிரவில் இளம் ஜோடி செய்த வேலை... கேமராவில் பதிவாகிய வீடியோ !

0

இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன. 

நள்ளிரவில் இளம் ஜோடி செய்த வேலை... கேமராவில் பதிவாகிய வீடியோ !

நடனம் என்பது ஒருவரின் உணர்வுகளை வெளிப்படுத்தும் தனித்துவமான வழியாகும். நடனம் ஆடத் தெரிந்தவர்கள் ஏதாவது ஒரு வடிவில் தங்கள் திறமையை வெளிப்படுத்துவார்கள். 

ஏசியிலேயே இருந்தாலும் எலும்பு தேயும் ! 

சிலர் மேடையில் நடனமாடுவார்கள், சிலர் டிஜெ-வில் கலக்குவார்கள். ஆனால், நடுரோட்டில் தெரு விளக்குகளின் ஒளியில் 

தங்கள் நடனத் திறமையை வெளிப்படுத்திய ஒரு ஜோடியை இன்று உங்களுக்கு அறிமுகப் படுத்துகிறோம். 

சமீபத்திய நாட்களில் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. அதில் ஒரு இளைஞனும் இளம் பெண்ணும் சாலையில் நடனமாடுவதைக் காண முடிகின்றது. 

இவர்களின் நடன அசைவுகள் அனுபவமிக்க டான்சர்கள் போல மிக லாவகமாகவும் அழகாகவும் உள்ளது. பிரேர்னா மகேஸ்வரி என்ற பயனர் இதை ட்வீட் செய்துள்ளார். 

இதில், சாலையில் உள்ள தெரு விளக்குகளுக்கு கீழே ஒரு ஆணும் பெண்ணும் நடனமாடுவதைக் காண முடிகின்றது. இருவரும் தங்கள் நடனத்தில் மூழ்கியே விட்டார்கள். 

வீடியோவை பார்த்தால், யாரோ தங்களை படம் பிடிப்பது கூட அவர்களுக்கு தெரியவில்லை என்பது தெளிவாகிறது. இந்த வீடியோ அருகில் உள்ள ஏதோ ஒரு கட்டிடத்தின் மாடியிலிருந்து எடுக்கப்பட்டிருக்க வேண்டும். 

அசால்டாக, அசத்தலாக நடனமாடும் இருவரும் யார் என்பது இன்னும் தெரியவில்லை. ஆனால் இவர்களின் நடனத்தைப் பார்த்தாலே இவர்கள் பயிற்சி பெற்ற டான்சர்களாக இருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது. 

இருவரின் நடன அசைவுகளும் சரியான ஒத்திசைவில் உள்ளன. மேலும் பாடலின் இசைக்கு ஏற்றவாறு இவர்கள் நடனமாடுவதையும் காணலாம். 

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் எப்படி செயல்படுவது?

சுமார் 16 வினாடிகள் கொண்ட இந்த வீடியோ 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லைக்குகளைப் பெற்றுள்ளது. மேலும், இந்த வீடியோவுக்கு 1500க்கும் மேற்பட்ட ரீட்வீட்களும், 2.5 லட்சத்துக்கும் அதிகமான வியூஸ்களும் கிடைத்துள்ளன. 

வீடியோவைப் பற்றி கருத்து தெரிவித்த பெரும்பாலான பயனர்கள் இருவரும் ஏதோ ஒரு நடன நிகழ்வுக்காக பயிற்சி செய்வதாகவும், அதற்காக மிகவும் ஆர்வமாக நடனமாடுவதாகவும் கூறி வருகிறார்கள். 

எப்படி இருந்தாலும், இவர்களது அற்புதமான நடனத்தை அனைவரும் ரசிக்கிறார்கள். இணைய வாசிகள் இவர்களது அழகான நடனத்துக்கு ரசிகர்களாகி விட்டார்கள். 

இந்த ஜோடியின் இந்த கிளாஸான நடனம் மிக அழகாக இருப்பதோடு, அதே அழகோடு இணையத்தையும் கவர்ந்துள்ளது. 

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)