சூரிய கிரகணத்தின் போது ஹீலியம் முதலில் ஒரு புதிய நிறமாலை வரிசையாக கண்டறியப்பட்டது.  காற்றைவிட எடை குறைந்தது ஹீலியம்.

ஹீலியம் வாயு என்றால் என்ன? அதன் பயன்கள் என்ன?

சூரிய கிரகணங்கள் இன்றைக்கும் கூட நம் நாட்டில் பல நூற்றாண்டுப் பழமையான மூடநம்பிக்கைகளுடன் அணுகப்பட்டு வருகின்றன.

அதே நேரம், சூரிய கிரகணங்களை ஆராய்ந்ததன் மூலம், ஐரோப்பியர்கள் தொடர்ச்சியாகப் பல்வேறு கண்டறிதல்களை இரண்டு நூற்றாண்டுகளாக அரங்கேற்றி வந்திருக்கிறார்கள். 

சூரிய கிரகணங்களே வான் இயற்பியல், சூரிய இயற்பியல் தொடர்பான விரிவான ஆராய்ச்சிகளுக்கு வித்திட்டன.

உலகை உய்விக்கும் சூரியனிலிருந்து வெளிப்படும் ஆற்றலுக்குக் காரணமாக இருக்கும் ஹீலியம், 150 ஆண்டுகளுக்கு முன் ஒரு சூரிய கிரகணத்தின் போது தான் கண்டறியப்பட்டது. 

இந்தக் கண்டறிதலில் ஆந்திர மாநிலம் குண்டூருக்கும் கூடப் பங்கு இருந்திருக்கிறது. பிரான்ஸைச் சேர்ந்த பியரி ஜான்சென், பாரிஸ் பல்கலைக்கழகத்தில் கணிதமும் இயற்பியலும் படித்தவர். 

கட்டிடக் கலை பேராசிரியராகப் பணிபுரிந்தாலும் வானியல், புவி இயற்பியல் ஆராய்ச்சிகளுக்காகப் பல்வேறு அறிவியல் பயணங்களை அவர் மேற்கொண்டார். 

சிக்கன் சாப்பிடுவதால் ஏற்படும் அற்புதமான நன்மைகள் !

அதன் ஒரு பகுதியாக சூரிய நிறமாலையை ஆராயும் நோக்கத்துடன், சூரிய கிரகணத்தைத் தெளிவாகப் பதிவு செய்வதற்காகப் பல ஆயிரம் கி.மீ. பயணித்து 1868-ல் இந்தியா வந்தார் ஜான்சென்.

அவர் வந்து சேர்ந்த இடம் ஆந்திரத்தில் உள்ள குண்டூர். அங்கிருந்த புகையிலை வயல்களில் இருந்தபடியே ஆகஸ்ட் 18-ம் தேதி கிரகணத்தை அவர் பதிவு செய்தார்.

ஹைட்ரஜன் வாயு கடுமையான வெப்பத்தில் எரிவதால் உருவாகுபவையே சூரிய தீச்சுவாலைகள் என்ற முடிவுக்கு முன்னதாக அவர் வந்திருந்தார். 

சூரிய கிரகணத்தின் போது தன்னுடைய நிறமாலைமானியால் அவர் ஆராய்ந்த போது தெரிந்த மஞ்சள் நிறப் பட்டையின் அலைவரிசை, ஹைட்ரஜனின் அலைவரிசையுடன் ஒத்துப் போகவில்லை. 

உண்மையில், அந்த அலைவரிசை அன்றைக்குக் கண்டறியப் பட்டிருந்த எந்த ஒரு வேதிப்பொருளின் அலைவரிசையுடனும் ஒத்துப் போகவில்லை.

ஹீலியம் வாயு என்றால் என்ன? அதன் பயன்கள் என்ன?

சூரிய கிரகணம் இல்லாமலேயே அதைத் தெளிவாகப் பார்க்க முடியும் என்ற அளவுக்கு அந்த மஞ்சள் வரி பிரகாசமாக இருந்தது என்பதை ஜான்சென் கண்டறிந்தார். 

தெளிவாகத் தெரிந்த அந்த அலைவரிசையை மட்டும் வடிகட்டி விடும் சாத்தியமும் இருந்தது.

இந்தப் பின்னணியில் தான் சூரியனின் நிறமாலையை மேம்பட்ட முறையில் பகுப்பாய்வு செய்ய ஸ்பெக்ட்ரோ ஹீலியோஸ்கோப் என்ற கருவியை ஜான்சென் கண்டறிந்தார்.

அன்றைக்கு ஜான்சென் கண்டறிந்தது ஹீலியம் வாயு தான் என்று பிற்காலத்தில் நிரூபிக்கப்பட்டது. 

வாயுவை அடக்குதல் நல்லதா, கெட்டதா? தெரிந்து கொள்ளூங்கள் !

அதைக் கண்டறிந்த பெருமை அவருக்கும் லாக்யர் என்ற இங்கிலாந்து அறிவியலாளருக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டது.

வேதியியல் உலகைப் புரட்டிப் போட்ட இந்தக் கண்டறிதலில், இந்தியாவுக்கும் குண்டூருக்கும் பங்கிருந்தது, இந்த நேரத்தில் கொண்டாடப்பட வேண்டும். 

நவீன அறிவியல் ஆராய்ச்சி வரலாற்றில் நமக்கு உள்ள பங்களிப்பு தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லப்படுவதற்கு, இதுபோன்ற வரலாற்று உண்மைகள் போற்றப்படவும் வேண்டும்.

ஹீலியத்தின் பண்புகள்

ஹீலியம் வாயு என்றால் என்ன? அதன் பயன்கள் என்ன?

அமெரிக்கா இயற்கை எரிவாயு கிடங்கிலிருந்து அதிக அளவில் ஹீலியம் உற்பத்தி செய்து உலக நாடுகளுக்கு விற்பனை செய்கிறது.

ஹீலியம் வாயு வேகமாக மறு உற்பத்தி ஆகக்கூடியது. எளிதாக மறுசுழற்சி செய்யவும் முடியும். எனவே பல்வேறு பயன்பாட்டிற்கு ஹீலியம் பயன் படுத்தப்படுகிறது.

ஹீலியம் ஒரு லிட்டருக்கு ஒரு கிராம் எடையை மேலே உயர்த்த வல்லது. அதனால் பலூன் விமானங்கள், பாராசூட் போன்ற பலூன்களில் இதை பயன் படுத்துகிறார்கள். 

இது தீப்பற்றாது மற்றும் எதிர்வினை புரியாது. எனவே ஹீலியத்தை விபத்து ஏற்படுத்தாத நம்பகத்தன்மை கொண்ட ஒரு வாயுவாக வேதியியலாளர்கள் பார்க்கிறர்கள்.

ஹீலியம் மிகவும் ஒளி மற்றும் மந்த சூழ்நிலைகளிலும் நிறமற்ற வாயு ஆகும். ஹீலியம் எந்த உறுப்புக்கும் மிகக் குறைவான உருகுநிலையைக் கொண்டுள்ளது.

இது வெப்பத்தைக் குறைப்பதன் மூலம் திடப்படுத்த முடியாத ஒரே திரவமாகும். இது சாதாரண அழுத்தங்களில் முழுமையான பூஜ்யத்திற்கு கீழே திரவமாக உள்ளது. 

நீங்கள் காது குடைய BUDS பயன்படுத்தினால் உங்களுக்கு ஓர் எச்சரிக்கை !

ஆனால் அழுத்தத்தை அதிகரிப்பதன் மூலம் திடப்படுத்த முடியும். ஹீலியம் வாயுவின் குறிப்பிட்ட வெப்பம் அசாதாரணமாக உள்ளது. 

சாதாரண கொதி நிலையில் ஹீலியம் ஆவி அடர்த்தி அதிகமாக உள்ளது. ஆவி வெப்பநிலையில் வெப்பம் அதிகரிக்கும் போது ஆவி பெருமளவில் விரிவடைகிறது.

ஹீலியம் பொதுவாக பூஜ்ஜியத்தின் ஒரு மதிப்பைக் கொண்டிருந்தாலும், சில உறுப்புகளுடன் ஒன்றிணைக்க இயலாத பலவீனமான ஒன்றாக உள்ளது.

ஹீலியத்தின் பயன்கள்

ஹீலியம் வாயு என்றால் என்ன? அதன் பயன்கள் என்ன?

ஹைட்ரஜன், ஹீலியத்தைவிட 7 சதவீதம் கூடுதல் மிதப்புத் தன்மை கொண்டது என்றாலும், அது தீப்பிடிக்கும் ஆபத்து கொண்டது. 

எனவே அதை மிதப்பதற்கு பயன்படுத்தாமல் எரிபொருளாக மட்டுமே பயன்படுத்துகிறார்கள். ஆஸ்துமா முற்றிய நோயாளிகள் நேரடியாக ஆக்ஸிஜன் கொடுத்தாலும் கூட மூச்சு விடுவதற்கு சிரமப்படுவார்கள். 

அப்போது அவர்களுக்கு ஆக்சிஜன் உடன் ஹீலியம் வாயும் சேர்த்து செலுத்தும் போது எளிதாக சுவாசிப்பார்கள். 

கார்டியாக் அரெஸ்ட் எனப்படும் மாரடைப்பு ஏற்படும் போது, மூளையை பாதிக்காமல் இருக்க, அந்நோயாளிகளுக்கு ஹீலியம் வாயு செலுத்தப்படுகிறது.

மருத்துவத் துறையில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுப்பது உள்பட இன்னும் பல பயன்பாட்டிற்கும் ஹீலியம் பயன்படுத்துகிறார்கள். 

எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்கும் போது உடல் முழுவதும் உள்ளே இருப்பதால், ஸ்கேன் எடுப்பவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்படாமல் இருக்கவும், 

ஸ்கேன் தெளிவாக இருக்க குளிர்விப்பான் ஆகவும் ஹீலியம் வாயு பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கம்ப்யூட்டர்களின் வேகத்திற்கு கைகொடுப்பதிலும் ஹீலியத்தின் பங்களிப்பு உண்டு. ஹார்டுவேர் பொருட்கள் வேகமாக செயல்படவும், வெப்பமடையாமல் தடுக்கவும் ஹீலியம் பயன்படுகிறது.

நாம் இன்று அதிகமாக பயன்படுத்தும் இன்டர்நெட் மற்றும் டி.வி. நிகழ்ச்சி ஒளிபரப்பு தொழில்நுட்பத்திலும் ஹீலியத்திற்கு முக்கிய பங்கு உண்டு. 

ஏனெனில் இன்டர்நெட் கண்ணாடி இழைகள் மற்றும் தொலைக்காட்சி வயர்களின் உள்ளே ஹீலியம் வாயு நிரப்பப் பட்டிருக்கும். இது அவை உரசிக் கொள்ளாமல் இருக்க பெரிதும் உதவுகிறது.

நாம் பயன்படுத்தும் அனைத்து எலக்ட்ரானிக் பொருட்களிலும் செமிகண்டக்டர் எனப்படும் குறைமின் கடத்திகள் இருக்கும். இவற்றின் தயாரிப்பில் 4 விதங்களில் ஹீலியம் வாயு பயன்படுத்தப் படுகிறது.

குறிப்பாக குளிர்ச்சியூட்ட, வாயு நிரப்புதல் மற்றும் கசிவு கண்டுபிடித்தல் உள்ளிட்ட பணிகளுக்கு ஹீலியம் பயன்படுகிறது.

ராக்கெட்டுகளின் எரிபொருள் கலனை சுத்தம் செய்ய ஹீலியம் பயன்படுத்தப் படுகிறது. தண்ணீர் உள்ளிட்ட மற்ற பொருட்களை இதற்காக பயன்படுத்த முடியாது.

ஹீலியம் ஆக்சிஜன் மற்றும் ஹைட்ரஜன் போன்ற பொருட்களுடன் எதிர்வினை புரியாது என்பதால் தீப்பற்றுதல் உள்ளிட்ட எந்த ஆபத்துமின்றி சுத்தம் செய்யப் பயன்படுகிறது.

லார்ஜ் ஹாட்ரான் கொலிடர் (LHC) எனும் பெரிய ஆய்வுக் கலன்களை வெளிப்புற வெப்பத்திலிருந்து குளிர்விக்க பல டன் கணக்கில் ஹீலியம் வாயு பயன்படுத்தப் படுகிறது.

நமக்கே தெரியாமல் பின்பற்றும் சில பழக்கம் !

அணுசக்தி துறையில் மின் உற்பத்தியின் போது அணுகதிர்வீச்சு விளைவால் உருவாக்கும் பெருமளவு வெப்பத்தை குளிர்விக்கவும் ஹீலியம்தான் பயன்படுகிறது.

நீர்மூழ்கி ஆய்வாளர்கள் சுவாசத்திற்காக நிரப்பிச் செல்லும் சுவாச சிலிண்டர் டேங்குகளில் வெறும் 20 சதவீதம் தான் ஆக்சிஜன் இருக்கும் மீதி 80 சதவீத அளவு ஹீலியம் தான் நிரப்பப்படுகிறது.

இது தான் நீரின் அடியில் நிலவும் அதிக அழுத்தத்தில் அவர்கள் சீராக சுவாசிக்க துணையாக இருக்கிறது.

சூப்பர் மார்க்கெட்டுகளில் பொருட்களின் மீதுள்ள பார்கோடுகளை படிக்க பயன்படுத்தப்படும் லேசர் கருவியில் சிவப்பு ஒளி வீசுவது ஹீலியம் நியான் லேசர் ஒளிதான்.

ஹீலியம் வாயு என்றால் என்ன? அதன் பயன்கள் என்ன?

ஹீலியம் பரவலாக படிக ஆராய்ச்சிக்கு பயன்படுத்தப் படுகிறது. ஏனெனில் அதன் கொதிநிலைப் புள்ளி முழுமையான பூஜ்யத்திற்கு அருகில் உள்ளது.

சிக்னொன் மற்றும் ஜெர்மானிய படிகங்களில் ஒரு பாதுகாப்பு வாயுவாக செயல்படுகிறது. டைட்டானியம் மற்றும் ஸிர்கோனியம் உற்பத்தி செய்வதில் பங்கு வகிக்கிறது.

ஆர்சிக் வெல்டிங்கிற்கான ஒரு மந்த வாயு கவசமாக பயன்படுத்தப் படுகிறது. சூப்பர்சோனிக் காற்று சுரங்கங்களுக்கான வாயுவாகவும் உள்ளது.

ஹீலியம் மற்றும் ஆக்ஸிஜனின் கலவையானது ஒரு செயற்கை வளிமண்டலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.